கடந்த சில நாட்களாக உத்தபுரத்தில், தலித்துக்ளையும், இதர சாதியினரையும் பிரித்து வைத்த ஒரு சுவரை தகர்ப்பதில் கம்யூனிஸ்ட் தொழர்கள் காட்டிய ஆர்வம் மெய்சிலிர்க்க வைத்தது. அகில இந்திய தலைவர் பிரகாஷ் காரத் அவர்களே நேரில் வந்து ஒரு பரபரப்பூடடினார். விஷயம் இதுதான்.
1982ல், உத்தபுரம் கிராமத்தில், சுமார் 2200 தலித் குடும்பங்களும், சுமார் 800 பிற்படுத்தப்பட்ட பிள்ளைமார்கள் குடும்பங்களும் இருந்தன. ஒரு சில சமூக விரோதிகளின் தவறான நடவடிக்கையால், இரு சமூகத்தினருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இரு சமூகத்து பெரியவர்களூம் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, இரு பகுதிகளையும் பிரித்து, ஒரு 'சமாதான சுவர்' எழுப்பினர்.
நான் ஒரு சில தலித் தலைவர்களிடம் பேசினேன். கடந்த 26 ஆண்டுகளாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. தலித் மக்களும், பிள்ளைமார்கள் வீடுகளில், பண்ணைகளில் வேலை செய்கிறார்கள். இரட்டை குவளை அங்கு இல்லை என்கிறார்கள். அவரவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.
அநத 1982 நிகழ்ச்சிக்குப்பிறகு, பிள்ளைமார்கள் குடும்பம் 800லிருந்து தற்போது 200ஆகக் குறைந்துவிட்டது. திடீரென்று நம் கம்யூனிஸ்ட் தோழர்களூக்க 'ஞானோதயம்' வந்தது. 'சமாதான சுவராக' எழுப்பட்ட சுவரை 'தீண்டாமை சுவ்ராக' சித்தரித்து, ஏதோ, தாங்கள் தீண்டாமையை ஒழிக்க வந்த புனிதர்களாக தங்களை மீடியாக்களில் பிரபலப்படுத்திக் கொண்டார்கள்.
அமைதியாக இருந்த உத்தபுரத்தில், 'தீண்டாமை ஒழிப்பு' என்கிற பெயரில், ஒரு மாபெரும் 'தீண்டாமை திணிப்பை' கொடுத்துவிட்டு, குட்டையை குழப்பிவிட்டு குதூகலிக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, சிவகங்கை மாவட்டத்தில், தேவக்கோட்டை தாலுக்காவில், 'பெத்தான்வலசு' என்கிற ஒரு கிராமத்தில், உடையார் கிருத்துவர்களும், தலித் கிருத்துவர்களும் வசித்து வருகிறார்கள். இந்துககளிலாவது, சாதி பேதங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டு அதை தவிர்க்க சட்டரீதியான பாதுகாப்பு த்லித் மக்களூக்கு அளித்துள்ளார்கள்.
ஆனால் கிருத்துவ மதத்தில் ஏது சாதி பிரிவினை? இருந்தாலும், பெத்தான்வலசு கிராமத்தில் இரு சாதி பகுதிகளூக்குமிடையே, ஒரு தடுப்பு உள்ளது. கடந்த வாரம் ஜீனியர் விகடனில் இந்த கிராமத்தைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.
தற்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், இந்த கிராமத்தை சேர்ந்தவர். அவர் ஒரு தலித் கிருத்தவர். அவர் அண்மையில் இந்த கிராமத்திற்கு செல்லும்போது, இந்த உண்மையான 'தீண்டாமை சுவரை" நீக்க கோரினார். அவருக்கே அங்கு மரியாதை இல்லை. மனம் ஒடிந்து சென்னை திரும்பி விட்டார். 'என்று அங்கு தீண்டாமை ஒழிகிற்தோ, அன்றுதான் அங்கு செல்ல இருப்பதாக' மனம் நொந்து கூறிய்தாக அந்த் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில், பல இடங்களில் தலித் கிருத்தவர்கள் கேவலப்படுத்தப்ப்டுவதை எதிர்த்து, சுமார் 200 குடும்பங்கள் (1000 பேர்) இந்து மதத்திற்கு திருநெல்வேலியில் தாய்மதம் திரும்பும் விழாவாக நடத்தினர். அதேபோன்று, பெத்தான் வலசு கிராமத்திலுள்ள பல தலித் கிருத்துவர்களும் 'தாய் மதம்' திரும்ப இருப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
ஐயா! கம்யூனிஸ்ட் தோழர்களே! ச்மாதானமாக இருந்த உத்தபுரத்தில் குழப்பத்தை உண்டு பண்ணினீர்களே. உயர்நீதிமன்ற நீதிபதியே மனம் நொந்து வருந்திய பெத்தான்வலசு கிராமத்தில் , தீண்டாமை இல்லை என்று கூறும் கிருத்துவ மதத்தில், தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கும் பெரிய மனிதர்களை ஏன் கண்டிப்பதில்லை. பிரகாஷ் காரத் போன்ற தேசிய தலைவர்களை அழைத்து வந்து பத்திரிக்கைகளில் பரபரப்பாக்கவில்லை.
ஏன் இந்த இரட்டை வேடம்? விளக்க முடியுமா? உங்கள் 'தீண்டாமை ஒழிப்பு' உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.