This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 29 ஜூன், 2008

சென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை

நான் நேற்று மாலை (28 ஜீன் 2008) ஆறு மணி ஷோவிற்கு சென்னை தேவி தியேட்டருக்கு 'தாசாவதாரம்' படம் பார்க்க சென்றேன்.  சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் ஒரு தியேட்டருக்கு சென்றேன்.  என்னுடன் ஒரு வெளிநாட்டு நண்பரும் வந்திருந்தார்.  அவருக்கு த்சாவதாரம் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற் ஆசையில் இருந்தார்.  அத்னால் தான் அங்கு செல்ல வேண்டியிருந்தது.

ஆயிரக்க்ணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய மான தியேட்டரில் எவ்வளவு கேவ்லமாக கழிப்பறைக்ளை பராமரிக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.  கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை.  ஒரு துளி தண்ணீரும் குழாய்களில் வருவதில்லை.  கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஊழியர்கள் எவரும் இல்லை. மிகவும் அருவருப்பான நிலையிலிருந்த இந்த கழிவறையைப்பார்த்து அனைவரும் முகம் சுளித்தனர்.  அருகிலிருந்த தியேட்டர் ஊழியரிடம் இதை சொன்னபோது, அவரும் சட்டை செய்யவில்லை.

என்னுடன் வந்திருந்த வெளிநாட்டு  நண்பருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. அந்த கழிப்பறையை உபயோக்காமல் வேதனையுடன் அவதிப்பட்டார்.  

சென்னையின் பிரதான இடத்திலிருக்கும் ஒரு பிரபல்மான தியேட்டரில் இந்த நிலை என்றால், மற்ற ஊர்கள் எப்படி இருக்கும்?

பணம் சம்பாதிப்பதையே குறிகோளாகக் கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள், கொஞ்சம் செல்வு செய்து, கழிப்பறைகளை பராமரிக்கக்கூடாtதா?

தியேட்டர்கள் பராமரிப்பை கண்காணிக்கூடிய அரசு அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுத்துவிடுவதால்,  அவர்களுக்கும் இதில் அக்கரையில்லை.  அரசு மேலதிகரிகளுக்கு சொகுசு வாழ்க்கை.  அவர்களுக்கு பங்கு வந்தாலும் வ்ராவிட்டாலும்,  நாலு சல்யூட்டிற்கும், அதிகார தோரணைகளுக்கும் மயங்கி விடுவார்கள். மக்களை பற்றி அக்கறையில்லை.  ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளுக்கும் செல்வாக்கு இல்லை.

லஞ்ச ஊழலில் உன்னத்மான 74வது  இடத்தில் இந்தியா இருப்பதாக இரண்டு நாட்களூக்கு முன்பு தான் செய்திகள் வ்ந்தன. அதற்கு இதுவே அத்தாட்சி.

ஒருபக்கம் நம் இளைஞர்கள், உலக அளவில் ஐ.டி துறையில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டி கொடி கட்டி பறக்கும்  இந்த நாட்களில், தேவி தியேட்டர் , மற்றும்  தியேட்டரை கண்காணிக்கும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டினர் முன இந்தியாவை தலை குனிய வைக்கின்றனர்.

இந்த பதிவை படிக்கும் எந்த நண்பராவது, தங்களூக்கு தெரிந்த உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுகிறேன்.

வெள்ளி, 27 ஜூன், 2008

ஸ்ரீ இராமானுஜர் ஆற்றிய சமூக பணி - நடிகர் கமலின் பார்வையில்

Sri Ramanujarஎனக்கு எப்ப்வுமே ஸ்ரீ இராமானுஜர் மேல் அளவற்ற மதிப்பு உண்டு. அவரது ஆயிரம் ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் ஒரு பெரிய ஆன்மீக குருவாகவும் விளங்கியவர்.

என்னுடைய நெடுங்கால நண்பர் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு சுதாங்கன் அவருடைய பிளாகில் நடிகர் கமலை சந்தித்ததை குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஸ்ரீ இராமானுஜர் , நடிகர் கமலையும் எவ்வளவு தூரம் பாதித்துள்ளார் என்பதை பார்க்கும் போது, நெகிழ்வாக இருந்தது.

தலித் மக்களுக்காக 'கண்ணீர்' வடிக்கும் அரசியல்வாதிகள் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கவேண்டும். சுதாங்கனின் பிளாகிலிருந்து, கமல் கூறிய்தான வரிகள்:

quote

உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள். அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.

unquote

புதன், 25 ஜூன், 2008

பனகல் பார்க் காமெடி

இன்றைய ஹிந்து நாளிதழில் ( 26 ஜீன் 2008) ஒரு செய்தி வந்துள்ளது.
http://www.hindu.com/2008/06/25/stories/2008062557720100.htm

சென்னை பனகல் பார்க் பகுதியில், ப்ல பெரிய நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை, சட்டதிற்கு புறம்பாக கட்டியுள்ளனர். கட்டிட விதிமுறைகளுக்கு மாறாக கட்டினர். சென்னை ய உயர் நீதிமன்றம், அந்த கட்டிடங்களை இடிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள், டில்லி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, கட்டிடங்களை இடிப்பதற்கு ஒரு தடை உத்தரவு வாங்கி உள்ளார்கள்.

தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து உள்ளது. நேற்று இந்த கமிஷன் முன்பு, கட்டிட உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மனு அளித்துள்ளார்கள். இந்த மனுவில் அவர்கள் " சட்டதிற்கு புறம்பாக கட்டிடங்கள், அறியாமையாலும் (ஆச்சரியமாக இருக்கிறதா?) கட்டப்பட்டதாகவும், வியாபாரத்தின் மீதுள்ள உற்சாகத்தாலும் (passion) ( இன்னும் ஆச்சரிய்மாக இருக்கிறதா?) கட்டப்பட்டதாகவும், அதனால், விதிவிலக்கு அளித்து இடிக்காமல் விட்டுவிட வேண்டுமென்றும்' கோரியுள்ளார்கள். இதில் காமெடி என்னவென்றால், விதிமுறைகள் மீறப்பட்டது, 'பேராசையினால்' அல்ல என்றும் மனுவில் கூறியுள்ளார்கள்.

இந்த பெரிய கட்டிட்ங்களை ஒரு கொத்தனார் மட்டும் கட்டியிருக்க முடியாது. பெரிய பெரிய இன்ஜினீயர்களும், ஆர்க்கிடெக்டுகளும் இணைந்து தான் கட்டி இருக்க முடியும். அப்படியென்றால், அந்த கட்டிட பொறியாளர்களுக்கு தண்டனை உண்டா? இல்லை என்றால், அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து ச்மாளித்து விட்டதாக தோற்றமளிக்காதா? (கட்டிட உரிமையாளர்கள் மனுப்படி அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை போன்று தோன்றுகிற்து).

இந்த மனுவை ஏற்றுக்கொண்டால், கொலை செய்தவர்களும், திருடர்களூம் கூட 'அறியாமையாலும், பணம் சேர்க்க வேண்டுமென்ற் உத்வேகத்திலும் (passion) செய்ததாகவும், 'பேராசையினால்' அல்ல என்றும், தங்களை மன்னிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தால், அந்த மனுவையும் நீதி மன்றம் பரிசீலிக்குமா?

திங்கள், 23 ஜூன், 2008

பிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்? அண்ணா பல்கலைகழக துணைவேந்தருடன் ஒரு பேட்டி

Prof. Radhakrihnan, Vice Chancellor, Anna University, Coimbatoreதற்போது அட்மிஷன் சீசன் ஆரம்பமாகிவிட்டது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இன்ஜினீயரிங் படிப்பு, அதுவும் ஐ.டி. படிப்பு படித்தால் தான் தங்களுக்கு எதிர்காலம் என்கிற எண்ணத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். மீடியாக்களும், ஐ.டி. படித்த பி.ஈ. மாணவர்களுக்கு தான் எதிர்காலம் போல் தேவையற்ற ஒரு 'hype' ஐ உருவாக்குகிறார்கள். அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்து, டொனேஷன் கொடுத்தாவது கம்பூட்டர் படிக்க வேண்டும் என்று கல்லூரி கல்லூரியாக அலைகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் பொறியியல் படிப்பிற்கு ஒரு லட்சம் இடங்கள் 300 கல்லுரிகள், தனியார் பல்கலைகழகங்களில் உள்ளன. அதில் 75000 இடங்கள், ஐ.டி. சம்பந்தபட்ட B.E. படிப்பில் உள்ளன. மீதி 25000 இடங்கள் சிவில், மெகானிகல், ஆட்டோமொபைல் படிப்புகளில் உள்ளன.

பிளஸ் டூ முடித்தவுடன் ஐ.டி. படிக்கவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி, ஐ.டி. பொறியியல் படிப்பில் மோதுகிறார்கள். இது தேவையற்ற ஒன்று. ஐ.டி. படிக்கும் மாணவர்கள், 75000 சக மாணவர்களுடன் மோதவேண்டும். சிவில், மெகானிகல் படிப்பவர்களுக்கு போட்டி கம்மி. சிவில் அல்லது மெகானிகல் படித்தவர்கள், ஐ.டி. துறையிலும் பணியாற்ற முடியும். ஆனல், ஐ.டி. மட்டும் படித்தவர்கள், சிவில், மெகானிகல் துறைகளுக்கு போகமுடியாது.

தவிரவும், கலை கல்லூரியில் B.A அல்லது B.Sc படிப்ப்தையும் குறைவாக மதிப்பிடுகிறார்கள். தற்போது, ஒரு டிகிரியுடன், கம்யூட்டர் ஆறிவு இருந்தாலே, ஐ.டி. துறையில் வேலைகள் கிடைக்கின்றன. ஏன்? வங்கி துறைகளுக்கு சாஃப்ட்வேர் த்யாரிக்கும் லேசர் சாஃப்ட் நிறுவனத்தில், பத்தம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்களும் programmers களாக பணியாற்றுகிறார்கள். இது ஒரு புது முன்மாதிரி.

அடுதத வாரத்தில், கவுன்சிலிங் அண்ணா பல்கலைகழகத்தில் துவங்க உள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைகழ்கம், கோயம்பத்தூரின் துணைவேந்தர் பேராசிரிய்ர் ஆர். இராதாகிருஷ்ணனிடம் தொலைபேசியில் ஒரு பேட்டி எடுத்தேன். இந்த பேட்டியில், மாணவர்களூக்கும் பெற்றோர்களுக்கும் சிறந்த அறிவுரைகளை வழங்குகிறார். அதை நீங்களும் கேளுங்களேன். play பட்டனை கிளிக் செய்து கேட்கவும். (17 நிமிடம் - ஆங்கிலம்)


இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857185

இந்த பேட்டியை mp3 யாக பதிவிறக்கம் செய்ய விரும்பினால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் சேமிக்கவும் (16 mb)

புதன், 18 ஜூன், 2008

மக்கட்பண்புகள் குறைந்து வருகிறதா? - ராஜ் டிவியில் ஒரு நேர்முகம்

live telecast in Raj TV on soft skills of k. srinivasanஇன்று (18 ஜீன் 08) காலை ராஜ் டிவியின் காலை ஒளிபரப்பில், என்னுடைய பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகியது. ஒரு மணி நேரம் நீடித்த ஒளிபரப்பில், நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க்ல்லூரி மாணவி நிஷா சிறப்பாக உரையாடலை நடத்தி சென்றார்.

தற்போது, ஏன் இளைஞர்களிடையே மனித பண்புகள் (soft skills) குறைந்து வருகின்ற்ன என்பது பற்றிய உரையாடல். நான் கூறிய ஒரு சில கருத்துக்கள் :

1. பெரும்பாலான நகர்புற இளைஞர்களிடையே நல்ல attitude என்ப்படும் மனப்பாங்கு குறைந்து வருகிற்து. அதிக அளவில் பணம், போட்டி ஆகியவையால், அவர்கள் பழகும் தன்மையும் (inter personal skills) பாதிக்கப்படுகின்றன. கிராமப்புற இளைஞர்களிடையே முன்னேற வேண்டும் என்கிற attitude உள்ளது. ஆனால் தன்னம்பிகை குறைவாக உள்ளது.

2. பெரும்பாலான குடும்பங்களில், பெற்றோர்களும், தங்கள் குழந்தைகள் பாடத்தில் அதிக மார்க் வாங்கவேண்டும் என்கிற எண்ணம் தான் அதிகமாக உள்ளது. பள்ளிகளிலும் மாணவர்களை பரிட்சைக்கு த்யார் செய்வதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மனித பண்புகளை வளர்ப்பதற்கான சூழ்நிலை குறைவு.

3. soft skills குறைவாக இருப்பதால், மன அழுத்தம் அதிகமாகிற்து. 60 வயதில் வரக்கூடிய வியாதிகள் தற்போது 30 வயது இளைஞர்களை தாக்குகின்ற்ன. இரத்த அழுத்தம், இருதய நோய்கள், சர்க்கரை வியாதி, அமிலத்தன்மை ஆகிய நோய்கள் இளைஞர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகின்றன.

4. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடியே மனித பண்புகள் வளர பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிக பங்கு உண்டு. சமூக சேவையில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். சமுதாயத்துடன் இணைந்து ப்ணியாற்றும் திறன் மேம்படவேண்டும்.

5. தற்போதுள்ள பாட திட்டங்களில், நீதி போதனைகள் குறைந்து விட்டன அல்லது நீக்கப்பட்டு விட்டன. மேலும், நகர்புறங்களில், கூட்டு குடும்ப முறை குறைந்து விட்டன. அதனால. குழந்தைகள் வீட்டு பெரியவர்களுடன் பழக வாய்ப்புகள் குறைந்து விட்டன. குழந்தைகளுக்கு கதைகள் மூலம் நீதிகளை கூறும் திறமையை வளர்க்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடையே hard skills எனப்படும் அறிவுத்திறன் மட்டும் வளர்வது போதாது. soft skills என்ப்படும் மனிதப்பண்புகள் வளரும் போதுதான, இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.


அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...