வழக்கமாக, ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு நிறுவனத்தின் மேலதிகாரியோ பதவி ஏற்ற 100 நாட்கள் கழித்து தங்கள் சாதனைகளை ஒரு பட்டியலிட்டு பார்ப்பது வழக்கம். ஆனால், ஒரு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர், தான் வெளிவந்த 100 நாட்களின் சாதனைகளை நோக்குவதில்லை.
வழக்கமாக பதவியிலிருந்து ஓய்வு பெறும் அனைவரும், தங்கள் வேலை பணிகளை குறைத்து கொள்வ்துதான் வழக்கம். ஆனால் நம் 'மக்கள் ஜனாதிபதி' டாக்டர் கலாம் எதையுமே ஒரு புதுமையாக செய்யப் பழகியவர்.
ஜனாதிபதி மாளிகையிலிருந்ததைவிட அதிக 'பிஸி' ஆகிவிட்டார். அவர் ஓய்வு (?) பெற்ற கடந்த 100 நாட்களில் 90 கூட்டங்களில் பேசியுள்ளார்; மூன்று நாடுகளில் சுற்றுபயணம் செய்துள்ளார்'; சுமார் ஆறு லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம், மக்கள் அவருக்கு ஜனாதிபதிக்குரிய் மதிப்பையும் மரியாதையையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு நெருங்கிய நண்பரும், விஞ்ஞானியுமான திரு பொன்ராஜ், டாக்டர் கலாமின் ஒவ்வொரு பேச்சையும் பதிவு செய்து, அதை www.abdulkalam.com என்கிற இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார். அது தவிர, ஒரு e-paper ம் துவங்கி அதன் மூலம் கலாமின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
டாக்டர் கலாமை போன்ற தேசபற்றுள்ள மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய ஒரு மாமனிதரை பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறோம். அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.