கடந்த திமுக ஆட்சியில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே சீரான மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்காக செப்டம்பர் 2006ல், முன்னாள் துணைவேந்தர் திரு முத்து குமரன் அவர்கள் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஜூலை 2007ல், அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் தனது அறிக்கையை அளித்தது. முத்துகுமரன் அறிக்கையில், தரமான கல்வி அளிக்க 109 சிபாரிசுகள் செய்யப்பட்டிருந்தன. பாடப்புத்த்கங்களின் தரத்தை உயர்த்துவதுடன், மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதம், தேர்வு முறையில் மாற்றம் போன்ற பல சிறந்த சிபாரிசுகள் கொடுக்கப்பட்டிருந்தன.
முத்துகுமரன் குழு அளித்த சிபாரிசுகள் எதையும் கண்டுகொள்ளாமல், திமுக அரசு தங்களுடைய ஆட்சியின் கடைசி கால கட்டத்தில், அனைத்து வகுப்புகளுக்கும் சம்ச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. அவசர அவசரமாக பாடபுத்த்கங்களும் அச்சடிக்கப்பட்டன. அந்த கால கட்டத்திலேயே, பல கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடந்த மே மாததில், ஜெயலலைதா ஆட்சி வந்தவுடன், சமச்சீர் கல்வியை ஓர் ஆண்டிற்கு ஒத்தி வைத்தார். அரசியல் நெருக்கடி காரணமாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவும், இந்த ஆண்டிலேயே, புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கபட்டு, சமச்சீர் கல்வி அறிமுகமாகி உள்ளது.
முத்துகுமரன் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்காமல், அவசர அவசரமாக பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்று சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் மனவேதனைப்படுகிறார்கள்.
மாணவர்கள் பயிலும் பாடபுத்தகங்கள் தவறாகவும், உண்மைக்கு மாறாகவும், திமுகவின் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் கருவியாகவும் இருந்தால், பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பது போலாகாதா என்று வினவுகிறார்கள்.
பத்திரிகையாளர் திரு வேதா ஸ்ரீதரன், கல்வி பற்றிய ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் எழுதி வருபவர். சமச்சீர் கல்வி புத்தகங்களீல், ஆயிரக்கணக்கான தவறுகள் இருப்பதாக வேதனைப்படுகிறார். அவரது பேட்டியை, ‘பிளே’ பட்டனை அழுத்தி பார்க்கவும்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=DajVg8uoURA
வேத ஸ்ரீதரன், சூப்பர். சிரிச்சு சிரிச்சு மாளலை. கிரேட் போஸ்ட்.
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குவேதா ஸ்ரீதரன் சார்
பதிலளிநீக்குபல மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்லமுடியாமல் தவிக்கும் விஷயத்தை தெளிவாக எடுத்து சொல்லி விட்டீர்கள் ............ நன்றி
எல்லாம் சரி சாமி... இதற்கு முந்திய புத்தகத்தில் "ஹிந்தி" நமது தேசிய மொழி என்று அப்பட்ட பொய்யை அச்சிட்டு இருந்தார்களே அப்போ எங்கே போனீர்கள்? ஏனென்றால் அப்போது அது வெறும் மாநில கல்வி மாணவர்கள் மட்டும் அதை படித்ததால் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இப்போது இத்தனை தவறு கண்டுபிடிதிருகீர்கள். இதுவே சமச்சீர் கல்வின் வெற்றி என்பேன். தவறுகளை கண்டறிந்து அதை திருத்தி அனைத்து மாணவர்களும் தரமான சமமான கல்வியை கல்ல உதவுங்கள்.
பதிலளிநீக்குஅப்புறம் அரசு கல்வி கூடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் பற்றி திடீரென உங்களுக்கு இவ்வளவு அக்கறை? அதை காரணம் காட்டி பொது கல்வி முறையை ஒழித்துக்கட்ட ரொம்பவும் முயல்கிறீர்கள்!!! இது நிச்சையம் முதலை கண்ணீர்தான.
பொது கல்வி ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் இப்போது கூட அரசு பள்ளிகளுக்காக போராடலாமே!!! உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால்? உங்கள் உண்மை அக்கறை அப்போது வெளிப்படும்.
//என்று சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் மனவேதனைப்படுகிறார்கள்.//
இவர்கள் பெயர்களையும் குறிபிட்டீர்கள் என்றால் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
ஹபி, இது சிரிக்க வேண்டிய விஷயமா? வருத்தப்பட வேண்டிய விஷயமா?
பதிலளிநீக்குவேதா அவர்களுக்கு - ரொம்ப தெளிவா இருந்தது உங்கள் விளக்கம். தமிழ், வரலாறு இதில் எல்லாம் தான் இப்படி உள்நோக்கில் பாடங்கள் வைக்க முடியும். இந்தப் பாடங்களைத் தவிர்த்து, மற்ற பாடங்களை மட்டும் இந்த வருடம் அமுல்படுத்தி இருக்கலாமோ? இதில் மானப் பிரச்சனையை முன் வைக்காமல் நியாயமான முறையில் ஆராய்ந்து இருந்தால் இப்படி மூன்று மாத இழுவையையும் அவப் பெயரையும் தவிர்த்து இருக்கலாம்.
Who were gone to supreme court, they must see this video.
பதிலளிநீக்குGreat work
ஜெயலலைதா ஆட்சி வந்தவுடன், சமச்சீர் கல்வியை ஓர் ஆண்டிற்கு ஒத்தி வைத்தார்.
பதிலளிநீக்குஇல்லை நிரந்தரமாக ஒத்தி வைத்தார்
நெற்றியில் அந்த கோட்டை பார்த்ததும், இதை பார்ப்பதில் அர்த்தமில்லைன்னு தெரிஞ்சிடுச்சி...
பதிலளிநீக்குஇவாளுக்கு சம்பந்த பட்டதை மட்டும் சொல்கிறார் உண்மை என்னவோ
பதிலளிநீக்குசார் நெத்தியில கோட்ட பாத்த உங்களுக்கு புத்தகத்தை எடுத்து பார்க்கணும்னு ஏன் சார் தோன மாட்டேங்குது
பதிலளிநீக்கு