This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஊழலுக்கு எதிராக இடது சாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

தா. பாண்டியன், ஜி. இராமகிருஷ்ணன், இரா. செழியன்
பிரைம்பாயிண்ட் சீனிவாசன்
கடந்த சில மாதங்க்ளில் வெளியான அலக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்ற மெகா ஊழல்களால்,  இந்திய மக்கள் கதிகலங்கி நிற்கிறார்கள்.  சோனியா காந்தி, மன்மோகன் சிங், கபில் சிபல், சிதம்பரம் போன்றவர்கள், இந்த ஊழல்களை மூடி மறைக்க முயன்றாலும், இந்திய மக்கள், குறிப்பாக, நடுத்தரவர்க மக்கள் அரசின் மீது அதிக அளவில் கோபமாக இருக்கிறார்கள்.
இந்த சமயத்தில், காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வரவேண்டும் என்று போராடி வருகிறார்.  கபில் சிபல், சிதம்பரம், மனீஷ் திவாரி, திகவிஜய் சிங் போன்றோர் அவரை பழி சுமத்தியும் ஏளனப்படுத்தியும் வந்தனர்.  காங்கிரசின் இந்த் அணுகுமுறை, மக்களை அதிக அளவில் கோபப்ட்டுத்தியுள்ளது.
இந்நிலையில், அன்ன ஹசாரே கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார்.  இதனால் பயந்த மத்திய அரசு, உடனடியாக அவரை கைது செய்து, திகார் சிறையில் ஏழு நாட்களுக்கு ரிமாண்ட் செய்தனர்.  வேடிக்கை என்னவென்றால், ஊழலை எதிர்க்கும் அன்னா ஹசாரே, ஊழல் மன்னர்களான ராஜா, கனிமொழி, கல்மாடி இருக்கும் சிறையில் அடைத்ததுதான்.
அரசின் தவறான அணுகுமுறையால், நாடே கொந்தளித்தது.  அன்று இரவே, அன்ன ஹசாரேயை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.  இதற்குள், அன்னா அவர்கள், சிறையிலேயே தனது உண்ணவிரதத்தை துவக்கினார்.  நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.  பல இடங்களீல் இளஞர்கள் காலவரையற்றா உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.
அன்னா ஹசாரேயும் , சிறையிலிருந்து வெளிவந்து, ரம்லீலா மைதனத்தில், தனது உண்ணவரதத்தை தொடர்கிறார்.  இன்றுடன் 8 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் அவரது உடல் நிலை மோசமாகி வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த பின்னணியில், நாடு முழுவதும், ப்ல அமைப்புக்கள், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றன.  சென்னையிலும், இடது சாரி கட்சிகளின் சார்பில், ஒரு பொதுகூட்டத்தை வடசென்னையில், இன்று (23 ஆகஸ்ட் 2011) நடத்தினர்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு இரா. செழியன் அவர்களுடன், இடது சாரி மூத்த தலைவர்கள் தா.பாண்டியன், ஜி. இராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சிக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கங்களில் முன்னணியில் உள்ள சமூக ஆர்வலர்கள் சார்பாக என்னையும், ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சென்னையின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான பாவனா உபாத்யாயா அவர்களையும் பேச அழத்திருந்தனர்.
வணிகர் சங்கத்தின் தலைவரான வெள்ளையனும், மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சவுந்தரராசன் மற்றும் பீம்ராவ்,  பார்வர்ட் பிளாக் தலைவர் யூ. ஆர். முத்து, வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். பிரசாத், சி.பி.எம். தலைவர்கள் ஏ. பாக்கியம், டி. கே. சண்முகம் மற்றும் பல தலைவர்க்ள் பங்கேற்றார்கள்.
இந்த பொதுகூட்டம், வடசென்னையின் முக்கிய பகுதியில் மாலையில்  நடந்ததால், சுமார் 3000 பேர் திரண்டிருந்தனர். இடது சாரி கட்சிகள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும்,  என்னைப்போன்ற அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்கள் கல்நது கொண்டதால், அரசியல் சாயம் இல்லாமல், ஊழலுக்கு எதிரான தகவல்களையே அனைவரும் பேசியது பாராட்டத்தக்கதாக இருந்தது.

நான் பேசும் போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியா விஷன் உறுப்பினர்கள், உணர்வு பூர்வமாக தங்களையும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுடன் இணைத்துக்கொள்ள, அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை நிறுத்தும் வரை, தினதோறும் தங்கள் இடங்களிலேயே ஒரு வேளை உண்ணாமல் இருப்பதை தெரிவித்தேன்.  கூட்டம் முடிந்தபிறகு, ப்லர் என்னை சந்தித்து, தாங்களும் இது போல் ஒரு வேளை உணவை தவிர்த்து, உணர்வு பூர்வமாக போராடுவதாக தெரிவித்தார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல ஊழல் குற்றாச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அனைத்து கட்சிகளிலும், நல்ல தலைவர்கள், தொண்டர்கள் உள்ளனர்.  ஊழல் எதிர்ப்பு போன்ற முக்கியமான போராட்டங்களில், அரசியல் கட்சிகள், தங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, சமூக ஆர்வலர்களையும் இணைத்துக்கொண்டு போராடினால், பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
இந்த நிகிழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்க:



1 கருத்துகள்:

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...