This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 15 மே, 2011

தமிழகம் மீண்டது - ‘ஜெயா சுனாமியில்’ சுருண்ட திமுக தோல்வியின் பின்னணி

கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி நட்ந்த சட்டமன்ற் தேர்தலின் முடிவுகள், நேற்று (மே 13) வெளிவந்தன.  தேர்தலுக்கு முன்பும், பின்பும் நடந்த பல கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, அதிமுக அணிக்கு அமோக வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். அதிமுக அணி 234 தொகுதிகளில் 203 தொகுதிகளை (86 சதவிகித இடங்களை) கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  
செல்வி ஜெயலலிதா
கடந்த 2006ம் ஆண்டில் 45 சதவிகித வாக்குகள் பெற்ற திமுக அணி, தற்போது 37 சதவிகிதம் பெற்று 31 இடங்களைப் பெற்றுள்ளது.  அதே சமயம் அந்த தேர்தலில் 40 சதவிகிதம் பெற்ற அதிமுக அணி, தற்போது 52 சதவிகிதம் பெற்று 203 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.  
இந்த தேர்தலில், திமுகவிற்கு ஒரு எதிர்ப்பு அலை சுனாமியாக உருவாகி, அதுவே, அதிமுகவிற்கு ஆதரவாக மாறி விட்டது. மக்கள் அளித்த வாக்குகள், யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து போடப்பட்டதாக உள்ளது.  அதனால் தான், திமுகவின் அனைத்து அமைச்சர்களும் (ஒரு சிலர் தவிர) தோல்வியுற்றனர்.  அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படும் பேராசிரியர் அனபழகனையும் மக்கள் நிராகரித்தது, திமுகவினரை சிந்திக்கவைக்க வேண்டும். 
வோட்டு பதிவுக்கு முன்பும், பின்பும், நான் பல அரசியல் அடிமட்ட தலைவர்களையும்,  வாக்காளர்களையும் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துகளை கணித்தேன்.  அதனால் தான், வாக்கு பதிவு முடிந்த 5வது நாளே, ஒரு பதிவு எழுதினேன்.  அந்த பதிவில் முடிவுரையாக நான் குறிப்பிட்ட்தாவது:
”அனைத்து விவரங்களையும், கூட்டி, கழித்து பார்த்தால், எனது கணிப்பில், அதிமுக முழு மெஜாரிடி பெறும் என்றும், அதிமுக கூட்டணியினர் 160 முதல் 180 இடம் வரை கைப்பற்றுவார்கள் என்றும் எண்ணுகிறேன்.  திமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியுறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன். ” 
பல ஊடகங்கள், போஸ்ட் போல் சர்வே என்கிற பெயரில், திமுக வெற்றி பெறும் என்றும், தொங்கு சட்டசமை அமையும் என்றும் அள்ளி விட்டன.  திமுகவோ, அதிக வாக்கு பதிவு (78%), த்ங்கள் சாதனைகளி பாராட்டி, மக்கள் அளிக்கும் ஆதரவு என்றனர்.  வேடிக்கை என்னவென்றால், திமுக தலைவர்கள், இப்படி கூறினாலும், கீழ்மட்ட தலைவர்கள், இதை நம்பவில்லை.  ஏதோ கெட்டது நட்க்க இருக்கிறது என்று மட்டும் உள்ளூர நம்பினார்கள்.  அது, இந்த அளவு, சுனாமி யாக திமுகவை வேரறுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  தற்போது, திமுக, கலைஞர் கண் முன்பு, எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்து பரிதாபமாக நிற்கிறது.  
திமுக பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டது.  பல பெரும் தலைவர்களை உருவாக்கிய இயக்கம்.  பல் சோதனைகளை தாங்கிய ஒரு இயக்கம், இன்று ஒரு பரிதாப நிலைக்கு ஆளானது எப்படி என்பதை தொண்டர்கள், உணர்ச்சி வயப்படாமல் சிந்திக்க வேண்டும்.  என்னுடைய ஒரு சில முக்கியமான் கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.
க்லைஞர் கருணாநிதி
1.   செயலிழந்த நிர்வாகம்
கலைஞர் எப்போதுமே ஒரு சிறந்த நிர்வாகி என்று பெயர் பெற்றவர்.  1996-2001 ஆட்சியில், ஒரு சிற்ந்த நிர்வாகத்தை அபோது அளித்தார்.  சாதனைகளுக்காக அப்போது, நானே 2001ல் அவருக்கு வாக்களித்தேன். ஆனல் மக்கள் மாற்றம் வேன்டி,  2001ல் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்தனர்.   அப்படிபட்ட ஒரு நிர்வாகி, வயது காரணமாகவும், குடும்பத்தினரின் தலையீட்டாலும், 2006 முதலான ஆட்சியில், நிரிவாகத்தில் கவனம் செலுத்தவில்லை.

இதனால், விலைவாசி உயர்ந்தது.  ஏழைகள் அவதிப்பட்டனர்.  பல இடங்களில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிகப்படவில்லை.  கொலை, கொள்லை , திருட்டு அதிக அளவில், மக்களை அவதிக்கு உள்ளாக்கியது.  கட்சியினரின் த்லையீட்டால், காவல் துறையும் செயல் இழந்தது.  கட்ட பஞ்சாயத்துகள் என்கிற பெயரில், அடவடி நடந்தது. சென்னையில், மாநகர் கவுன்சிலர்கள், இன்னோவா காரில், வலம் வந்து தண்டல் வசூலித்தனர்.

தமிழக அரசின் நிதிநிலையும் சீரழிந்தது.  சரியான் நிதி நிர்வாகம் இல்லாததால், தமிழக அரசு ஒரு லட்சம் கோடி கடன் சுமைக்கு த்ள்ளப்பட்டுள்ளது.  
கடந்த ஐந்து ஆண்டுகளும், அதிக அளவு தனக்கு பாரட்டு விழா நடத்தச் சொல்லி, அதிலேயே கலந்து கொண்டார்.  நிர்வாகத்தில் செலவிட்ட நேரத்தை விட பாராட்டு விழாக்கள், மானாட மயிலாட நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்பட விழாக்கள், வசனம் எழுதுவது போன்ற பணிகளில் தான், அதிக நேரம் கலைஞர் செலவழித்தார். பல முறை மீடியாக்கள் எடுத்துக்காட்டியும், அதை அவர் போருட்படுத்தவில்லை.  மாறாக, மீடியாக்களை திட்டினார். இந்த நிலையை மக்கள் அமைதியாக பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். 
2.  மின்வெட்டு
கலைஞரின் இந்த ஆட்சியில், எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு மின்வெட்டு அம்ல படுத்தப்பட்டது.  ‘மின் வெட்டு துறை அமைச்சர்’ என்று மீடியாக்கள் கிண்டல் அடிக்கும் அளவுக்கு இருந்தது. அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமியோ, ஐந்து ஆண்டுகளும் ஒய்வில் இருந்தார்.   மின்வெட்டால், உற்பத்தி பாதிக்க்பபட்டது.  பலர் வேலை இழந்தார்கள்.  கலைஞ்ருக்கும், இதை கவனிக்க நேரம் இல்லை. பாவம், அவரது நண்பர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்று கூறிகொண்ட ‘காக்காய்’ கூட்டம், கலைஞரை, பாராட்டு விழாக்களில் குளிப்பாட்டி, சினிமா வசனங்களை எழுத வைத்து, நிர்வாகத்தை முடக்கி விட்டார்கள்.
3.  இமாலய் ஊழல்
இந்திய வரலாற்றிலேயே, முதன்முறையாக ஒரு இமாலய 2ஜி ஊழலை நடத்தி, திமுகவினர் தமிழக மக்களை உலகத்தின் முன் தலை குனிய வைத்தனர்.  ஆ. ராசா கைது செய்யப்ப்டட போது கூட ‘தலித்துகளூக்கு எதிரான ஆரிய சூழ்ச்சி’ என்று சப்பை கட்டு கட்டி, ‘எவரும் எங்களை அசைக்க முடியாது’ என்று இருந்ததை மக்கள் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார்கள்.  கிராம மக்களுக்கு 2ஜி ஊழல் ஒன்றும் புரியாது என்று ஆணவத்துடன் திமுகவினர் அலைந்ததையும், மக்கள் நமட்டு சிரிப்புடன் அமைதியாக பார்த்து கொண்டு இருந்ததை திமுகவினர் கவனிக்க தவறி விட்டனர்.  இதுதான் ஒரு பூகம்பமாக, தெர்தல் நாளன்று வெடித்தது.  ”சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது” என்று வழக்கு உண்டு.  கலைஞர் வழங்கிய இலவச டிவி வழியாக,  அனைத்து ஊழல்களூம் மக்களிடம் சென்றடைந்தன.

கலஞர் இலவச கலர் டிவி கொடுத்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், தமிழகம் முழுவதும், மக்கள் கேபிளுக்காக அவர்கள் குடும்பத்திற்கு தான் பணம் செலுத்தினர்.  கலர் டிவி மூலமாக அவர்கள் குடும்பம் ஆயிரக்கணக்கான கோடிகள் பயன் பெற்றன.  இந்த ஊழலையும், மக்கள் கவனிக்க தவறவில்லை.
கருணாநிதி குடும்பம் - நன்றி இந்தியாடுடே
4. குடும்பத்தினரின் தலையீடு

கலைஞரின் முந்தைய ஆட்சி காலங்களில், ஸ்டாலினைத்தவிர, குடும்பத்தினர் யரும், நிர்வாகத்தில் தலையிட்டதில்லை.  ஸ்டாலினும், 40 ஆண்டுகளூக்கு மேலாக திமுகவில், வளர்ந்து வருவதால், அனைவரும் அவரை, கட்சி தொண்டராகத்தினராகத்தான் பார்க்கிறார்கள்.  2006க்கு பிறகு, மூன்றாவது தலைமுறை குடும்பத்தினரும், நிர்வாகத்தில் தலையிட்டதில் நிர்வாகம் சீரழிந்தது.  அது தவர, ஒவ்வொருவரும் ஒரு ‘அதிகார மையங்களாக’ செயல்படத்துவங்கினர்.  கோவையில் நடந்த செம்மொழி மாநட்டில், குடும்பத்தினர் அனைவருக்கும், மேடையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதை தமிழக மக்கள் நேரடியாகவே, டிவிக்களீல் பார்த்தனர்.

கலைஞர் குடும்பத்தினர்,  தங்களுக்கு வேண்டிய சொத்துக்களை, பினாமி பெயரில், பல இடங்களில் வாங்கி குவித்ததாக மீடியாக்களில் செய்திகள் அடிபட்டன.  அதையும் கலைஞர் அமைதியாக ரசித்துக் கொண்டு இருந்தார். 
இது தவிர, இளைய தலைமுறையினர், ஆணவத்துடன், தங்க்ளை யாரும் என்னவும் செய்யமுடியாது என்கிற நினைப்பில், ஹோட்டல்களில் கலாட்டாவில் ஈடுபட்டது, மீடியாக்களீல் அடிபட்டபோது கூட, கலைஞர், அவர்களை கண்டிக்கவில்லை.  இவைகளையும், மக்கள் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தனர்.

5. அலட்சியம் கலந்த ஆணவம்

திமுக அரசு, மைனாரிட்டி அரசாக இருந்தாலும், ’யாரும் நம்மை அசைக்க முடியாது’ என்கிற ஆணவப்போக்கை கலைஞர் இந்த முறை அதிகம் கொண்டிருந்தார்.  இலங்கை, காவேரி, முல்லை பெரியார், விலைவாசி போன்ற பல பிரச்சனைகளுக்கு மத்திய அரசுக்கு தந்தி அடித்து, கடிதம எழுதிய, கலைஞர் தன் குடும்பத்தினருக்கு நல்ல பணம் கொழிக்கும் மந்திரி சபையில் இடம் வேண்டும் என்கிற போது, தள்ளு வண்டியில் டில்லி சென்று, போராடியதையும் மக்கள் டிவி மூலம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார்கள்.

கோடிக்கணக்கான இந்து மக்கள் வழிபடும் இராமர் பாலத்தையும், “இராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்’ என்கிற போதும், கலைனரின் ஆணவம் வெளிப்பட்டது. மூசுசுக்கு முன்னூறு முறை ‘நான் பத்திரிகையாளன்’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே,  கலைஞரின் தவறுகளை சுட்டிகாட்டிய பத்திரிகைகளை மிரட்டி பணிய வைத்ததையும், மக்கள் அமைதியாகத்தான் பார்த்துகொண்டு இருந்தார்கள்.தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை சிறையில் அடைத்தார்.

2ஜி விவகாரம் வெளியில் வந்தும், தமிழகத்தில், தேர்தல் அறிவித்தபிறகும் கூட  ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள்.  ஏதோ 2ஜி ஊழல் ஒன்றுமே இல்லாத மாதிரி நடித்தார்கள்.  இது போதாதென்று,  நீரா ராடியா டேப்பிலும், 2ஜி ஊழலிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழியையும் தன்னுடம் பிரச்சாரம் செய்ய கலைஞர் அழைத்துச் சென்றார்.  கனிமொழியையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார்.  இதெல்லாம், மக்களை ‘முட்டாள்கள்’ என்று நினைத்தும், நாலு இலவசங்களை அறிவித்தாலும், 500 ரூபாய் பணம் கொடுத்தாலும், மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற ஆணவத்தின் அடிப்படையில் உருவானதே.

இந்த நாடகங்களயும் அமைதியாக வடிவேலு காமெடி போல மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

6. தேர்தல் பிரச்சாரம்


தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக கூட்டணி தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் தோன்றி தாங்கள் ஒன்றாக இருப்பது போல நடித்தார்கள்.  ஆனால், கூட்டணி கட்சிகளிடையேயும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் உட்குத்து நடந்தது மீடியாக்களில் வந்தன. கலைஞர் எப்போதுமே, ஜாதி அரசியல் செய்பவர்.  இந்த முறை ப்ல ஜாதி கட்சிகளை இணைத்தும், ஜாதி கட்சிகளும் சுருண்டன.

எப்போதுமே, திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளர்கள் இருப்பார்கள்.  கருத்துகளை தெளிவாக பேசுவார்கள்.  ஆனால் த்ற்போது, பரிதாபமாக, வடிவேலுவும், குஷ்புவும் நடசத்திர பேச்சாளர்களாக வலம் வந்தனர்.  இருவருமே, தங்களின் தரக்குறைவான பேச்சினால், மக்களை முகம் சுளிக்க வைத்தனர்.  ஆனால், அதிமுக அணியில், தலைவர்கள் அதிக அளவில் ஒரே மேடையில், தோன்றவில்லையென்றாலும், அடிமட்ட தொண்டர்கள் மத்தியில், திமுக எதிர்ப்பினால், ஒன்று பட்டு பணியாற்றினர்.  இதையும் மக்கள் அமைதியாக எந்த சலமுமின்றி கவனித்து வந்தனர்.

7. தேர்தல் முடிவுகளும், திமுகவின் நிலைப்பாடும்


தேர்தல் நாளான ஏப்ரல் 13ம் தேதியன்று, மக்கள் காலை 7.30 மணிமுதல் திரண்டு வந்து வாக்கு அளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  பல இளைஞ்ரகள், வாக்கு சாவடிகளை தேடித்தேடி வாக்கு அளித்தனர். வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பெண்கள் வாக்களித்தனர்.  தேர்தல் கமிஷனின் கெடுபிடியால், சிறந்த முறையில் தேர்தல் நடைபெற்றது.  முறைகேடுகள் இல்லாத ஒழுங்கான தேர்தலாக இருந்தது.  திமுகவோ, இந்த எழுச்சி, தங்கள் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி என்று இறுமாப்புடன் இருந்தனர்.  சில ஊடகங்களும், திமுக ஆட்சி அமைக்க போகிறது என்று கணித்தனர். வெற்றி படிகளில், நாம் மட்டும் அதிமுக 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும் என்று பதிவிட்டிருந்தோம்.

வோட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற்றவரை, ஒரு மாத காலத்தில், மக்களும், தங்கள் கடமை முடிந்த எண்ணத்துடன், அரசியல் கட்சிகளையும், மீடியாக்களையும் குழ்ப்பி விட்டனர்.  தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல்,  திமுகவிற்காகவும் மாற்றம் வேண்டியும் ஒரு அலை உருவாகி வந்ததை ஏன் திமுகவும், மீடியாக்களும் கவனிக்க தவறி விட்ட்ன என்பதுதான் எனக்கும் புரியவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், நாகரீகம் கருதி, அனைத்து கட்சிகளும், மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாக அறிக்கை வெளியிடுவார்கள்.  இரண்டு மாநிலங்களில் ஆட்சியை இழந்த கம்யூனிஸ்டுகளும், தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாகவும், தோல்வி பற்றி ஆராய இருப்பதாகவும் அறிக்கை விட்டனர்.  தமிழ்நாட்டில், தங்கள் தோல்வியையும், காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றது. அதுதான் அரசியல் நாகரீகம்.  மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.

ஆனால், கலைஞரோ, “மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள்.  வாழ்த்துக்கள்’ என்று கிண்டல் அடித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு அழகு அல்ல.  முந்தைய தேர்த்ல்களில், தோற்ற சம்யங்களில், மக்களை “சோற்றால் அடித்த பிண்டங்கள்” என்றும்,. “நன்றி கெட்ட ஜன்மங்கள்’ என்றும் திட்டுவார்.  இந்த முறை நல்ல வேளை திட்டவில்லை.

தேர்தல் முடிவு பற்றி தொலைகாட்சிகளில் பேட்டி அளிக்க்க்கூட நல்ல தலைவர்கள் இல்லை.  குஷ்பு தான் பேட்டி அளித்தார்.  “மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து தவறு செய்து விட்டார்கள்’ என்று மக்களை குறை கூறினார்.  திமுக வை பல முறை அரியணை ஏற்றிய மக்கள், ஏன் இந்த முறை விரட்டி அடித்தார்கள் என்று அமைதியாக ஆராயாமலும், மக்கள் தீர்ப்பை ஏற்காமலும், மக்களை குறை கூறுவது அரசியல் முதிர்ச்சி ஆகாது.  இதையும் மக்கள் அமைதியாக பார்த்துகொண்டு இருக்க்றார்கள்.

8.  படிப்பினைகள்


தமிழக மக்கள், இலவசங்களுக்கு மயங்கி ஒட்டு போடுவார்கள் என்றும், பணம் கொடுத்தால், வோட்டு கிடைக்கும் என்றும் ஒரு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடந்தது, தமிழ்நாட்டு மக்களை தலை குனிய வைத்தது.  அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த முறை தமிழக மக்கள், “எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது” என்று உலகத்திற்கு உணர்த்தி, அமைதி புரட்சி செய்துள்ளார்கள்.  வரும் காலங்களில், மக்களிடம் பணம் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று எந்த கட்சிகளும் நினைக்க மாட்டார்கள்.

இனிவரும் நாட்களில், மக்கள் குஜராத், பீகார் போன்று, வளர்ச்சி திட்டங்களுக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள்.  முத்ல்வராக பொறுப்பு ஏற்கும் செல்வி ஜெயலலிதா அவர்கள் திறமையான நிர்வாகி.  முந்தைய காலங்களில் நடந்த தவறுகளால், ஆட்சியை இழந்தவர்.  கலைஞரை சுற்றி பல் ஜால்ரா கூட்ட்ங்கள் அவரை தவறாக வழி நடத்தியது போல், ஜெயலலிதாவை சுற்றியும், ஜால்ரா கூட்டங்கள் அவரிடம் தவறான தகவல்களை கொடுத்து, அவரது புகழை வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

அப்துல் கலாம், நரேந்திர மோடி போன்றவர்கள், தங்களுக்கு ஒரு குடும்பம் இல்லாததால், 24 மணி நேரமும், நாட்டை பற்றியே சிந்தனை செய்கிறார்கள். நாடே அவர்கள் குடும்பம் தான்.  அதேபோல், ஜெயலலிதா அவர்க்ளுக்கும்,  எவரும் தன்னுடைய குடும்பம் என்று கூறிக்கொண்டு தலையீடு செய்ய வாய்ப்பில்லை.  இதனால், அவர்கள், தன்னுடைய ஆட்சி காலத்தில், அப்துல் கலாம் போன்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, தமிழகத்தை இந்தியாவில், ஒரு முன்னணி மாநிலமாக ஆக்குவார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுகவின்
தேர்தல் அறிக்கையிலும் இதைத்தான் விளக்கியுள்ளார்கள். இந்த தேர்தல் அறிக்கையை பாராட்டி வெற்றி படிகளில் முன்பே பதிவு செய்திருந்தோம். இதை செய்தால், 2020ம் ஆண்டில், இந்தியா ஒரு வளர்ந்த நாடாக ஆகும் போதும், ஜெயலலிதா அவர்கள் தான் தமிழக முத்ல்வராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
புதிய முத்ல்வராக பொறுப்பேற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கு வெற்றி படிகள் சார்பில் வாழ்த்துகள்.  

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...