நான் நேற்று மாலை (28 ஜீன் 2008) ஆறு மணி ஷோவிற்கு சென்னை தேவி தியேட்டருக்கு 'தாசாவதாரம்' படம் பார்க்க சென்றேன். சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் ஒரு தியேட்டருக்கு சென்றேன். என்னுடன் ஒரு வெளிநாட்டு நண்பரும் வந்திருந்தார். அவருக்கு த்சாவதாரம் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற் ஆசையில் இருந்தார். அத்னால் தான் அங்கு செல்ல வேண்டியிருந்தது.
ஆயிரக்க்ணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய மான தியேட்டரில் எவ்வளவு கேவ்லமாக கழிப்பறைக்ளை பராமரிக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. ஒரு துளி தண்ணீரும் குழாய்களில் வருவதில்லை. கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஊழியர்கள் எவரும் இல்லை. மிகவும் அருவருப்பான நிலையிலிருந்த இந்த கழிவறையைப்பார்த்து அனைவரும் முகம் சுளித்தனர். அருகிலிருந்த தியேட்டர் ஊழியரிடம் இதை சொன்னபோது, அவரும் சட்டை செய்யவில்லை.
என்னுடன் வந்திருந்த வெளிநாட்டு நண்பருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. அந்த கழிப்பறையை உபயோக்காமல் வேதனையுடன் அவதிப்பட்டார்.
சென்னையின் பிரதான இடத்திலிருக்கும் ஒரு பிரபல்மான தியேட்டரில் இந்த நிலை என்றால், மற்ற ஊர்கள் எப்படி இருக்கும்?
பணம் சம்பாதிப்பதையே குறிகோளாகக் கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள், கொஞ்சம் செல்வு செய்து, கழிப்பறைகளை பராமரிக்கக்கூடாtதா?
தியேட்டர்கள் பராமரிப்பை கண்காணிக்கூடிய அரசு அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுத்துவிடுவதால், அவர்களுக்கும் இதில் அக்கரையில்லை. அரசு மேலதிகரிகளுக்கு சொகுசு வாழ்க்கை. அவர்களுக்கு பங்கு வந்தாலும் வ்ராவிட்டாலும், நாலு சல்யூட்டிற்கும், அதிகார தோரணைகளுக்கும் மயங்கி விடுவார்கள். மக்களை பற்றி அக்கறையில்லை. ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளுக்கும் செல்வாக்கு இல்லை.
லஞ்ச ஊழலில் உன்னத்மான 74வது இடத்தில் இந்தியா இருப்பதாக இரண்டு நாட்களூக்கு முன்பு தான் செய்திகள் வ்ந்தன. அதற்கு இதுவே அத்தாட்சி.
ஒருபக்கம் நம் இளைஞர்கள், உலக அளவில் ஐ.டி துறையில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டி கொடி கட்டி பறக்கும் இந்த நாட்களில், தேவி தியேட்டர் , மற்றும் தியேட்டரை கண்காணிக்கும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டினர் முன இந்தியாவை தலை குனிய வைக்கின்றனர்.
இந்த பதிவை படிக்கும் எந்த நண்பராவது, தங்களூக்கு தெரிந்த உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுகிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா பொது கழிவறைகளின் நிலையும் இதுதான் என்பது தங்களுக்குத் தெரியாதா? முதலில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இடங்களில் கழிப்பறைகளே இருப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
பதிலளிநீக்குஇதுக்குதான் எல்லாரும் திருட்டு டிவிடி-ல படம் பாக்கிறாங்களோ!?!?!
பதிலளிநீக்குகடல்நீரை எட்டும் தூரத்தில் வைத்துக்கொண்டு சென்னையின் நிலை இப்படியென்றால் என்ன செய்வது?தேவிபாலா போன்ற கட்டிடங்கள் கட்டிய காலத்திலிருந்து எவ்வளவு சம்பாதித்துக் கொடுத்திருக்கும்?கழிவறைச் செலவீனம் என்பது இதில் எத்தனை சதம் ஆகியிருக்கும்?
பதிலளிநீக்குடிஸ்கி:இன்னும் பிளேடு கேசுகள் உள்ளதா?
இந்தியா வல்லரசு ஆகும்போது இந்த மாதிரி சின்னச்சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும்... அதையெல்லாம் கண்டுக்காதீங்க....
பதிலளிநீக்கு( இது சத்தியமா நக்கல்தாங்க... என்னை திட்டாதீங்க...)...:-((((
//சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் ஒரு தியேட்டருக்கு சென்றேன். என்னுடன் ஒரு வெளிநாட்டு நண்பரும் வந்திருந்தார்//
பதிலளிநீக்குஹா ஹா ஹா அதனால தான் தெரியாம உங்க நண்பரை அங்கே கூட்டிட்டு போய்ட்டீங்க போல.. :-)))
தேவி திரை அரங்கம் தற்போதுதான் புதுப்பிக்கப்பட்டதாக கேள்வி பட்டேன், அதன் பிறகும் திருந்தவில்லை என்றால் என்ன தான் சொல்வது.
சென்னையில் உருப்படியான திரை அரங்கம் என்றால் எனக்கு தெரிந்த வரை முதலில் சத்யம் (சிங்கையில் கூட நான் இவ்வளோ தரமான திரை அரங்கம் காணவில்லை, ஒலி ஒளி இரண்டும்) மாயாஜால், சங்கம் காம்ப்ளெக்ஸ், ஐநாக்ஸ், அபிராமி சமீபத்தில் செல்லவில்லை..மற்ற திரை அரங்கங்களின் நிலை மிக மோசம் ஆல்பட் கொஞ்சம் பரவாயில்லை.
இவை தவிர தேவி போன்ற திரை அரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்றால் பலவித மனத்தாங்கலுக்கு உள்ளாக நேரிடும். அசிங்கமான கமெண்ட்களையும் கேட்டு கூசி போக வேண்டும், இதற்க்கு பணம் போனாலும் பரவாயில்லை என்று பலர் மேற்கூறிய திரை அரங்குகளுக்கு செல்கின்றனர்.
///சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் ஒரு தியேட்டருக்கு சென்றேன்.///
பதிலளிநீக்கு:)
பெரும்பாலும் தியேட்டர்களில் கவனிக்கப்படாத விசயங்களில் இது முக்கியமான ஒன்று, கட்டாயம் தியேட்டர் நிர்வாகம்தான் கவனம் எடுக்க வேண்டும்...
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஇதுக்குதான் எல்லாரும் திருட்டு டிவிடி-ல படம் பாக்கிறாங்களோ!?!?!
//
கண்டிப்பா... குடுக்கிற காசுக்கு இவங்களால இதைக்கூட பண்ண முடியல்லைன்னா ,நாம நம்ம வழியை(திருட்டு டி.வி.டி) பார்த்துக்கிட்டு போக வேண்டியதுதான்.
'அறை எண்305' படத்துல சிம்புதேவன் திருட்டு விசிடி பார்க்கிறவங்களுக்கு தண்டனை குடுப்பாரு.. ஆனா அதை பார்க்கத் தூண்டுற தியேட்டர் காரங்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது....
என்ன கொடுமை சார் இது? (தியேட்டர் கக்கூஸ்கள் அவர் படத்துல காட்டுன மேன்ஷன் கக்கூஸ்களை விட மிகக் கேவலமா இருக்கு...?!)
நல்ல பதிவு !
பதிலளிநீக்குஇந்தியாவை பொருத்தவரை தூய்மையான பொதுக்கழிவரைகள் இல்லாது இருப்பது சாபக்கேடா ?
1. அளவுக்கு அதிகமான மக்கள் தொகை
2. பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மை
பொதுவில் மட்டுமல்ல. தனிவீடாக 1000 சதுரடியில் வீடு கட்டினாலும் மாடிப்படிக்கு அடியில் உள்ள இடத்தைத் தான் பலரும் கழிவரைக் கட்ட ஒதுக்குகிறார்கள். அங்கு 0 வாட் பல்பு என்ற சிக்கனமாக இருக்கிறார்கள். :(
i happened to come to mount road a month back from the anna flyover side.
பதிலளிநீக்குwhen the bus reached 2 signals b4 LIC i got down to have a walk on the pavement right side of the mount road (LIC side)
but nature call did a lot of trouble
searched for any toilet nearby
Humpf
Nothing
no other go
have to stealthily get into a private property (a dilapidated site)
then pissed after which a watchman came shouting
What to do,
no other go
have to face such a hardship for even to go for a piss
think of women folks
Hoh pity
that too at the capital city which houses so many MNCs
calles for a thinking amongh our so called politicians who tell that they strive for the development of our state
but go on installing statues
but not at all think for providing a basic amenity at a so much busy spot in Chennai
தேவி தியேட்டரின் வலது பக்கம் இருக்கும் பழைய கழிவறைக்கு போய் விட்டீர்கள் போலிருக்கிறது :-)
பதிலளிநீக்கு(தசாவதாரத்துக்காக) புதுசாக கட்டப்பட்ட கழிவறை இடதுபக்கம் இருக்கிறது. அது சத்தியம் சினிமாஸ் அளவுக்கு பராமரிக்கப்படுகிறது.
நகரிலேயே சுத்தமாக கழிவறை பராமரிக்கப்படுவது இரண்டே இரண்டு திரையரங்குகளில் தான். ஒன்று சத்யம் சினிமாஸ்.
இன்னொன்று நம்பினால் நம்புங்கள். சைதை ராஜ் தியேட்டர். பழைய பாணி கழிவறை தானென்றாலும் காட்சிக்கு காட்சி சுத்தப்படுத்தி பளிச்சென்று வைத்திருக்கிறார்கள். தியேட்டருக்குள் செல்பவர்கள் பான்பராக், மாவா போட்டு துப்பிவிடக்கூடாதென்று நுழைவாயிலிலேயே செக் செய்து அனுப்புகிறார்கள்.