கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள், அணு உலையின் கதிர் வீச்சால், புற்று நோய் வரும் என்கிற ஒரு பீதியை கிளப்பி வருகிறார்கள். அடையார் புற்று நோய் மருத்துவமனையின் தலைவரும், உலகப் புகழ் பெற்ற புற்று நோய் நிபுணருமான டாக்டர் சாந்தா அவர்கள் கூட பல பேட்டிகளில் தெளிவு படுத்தியும், கூடங்குளம் எதிர்ப்பாளர்கள், இந்த பீதியை மக்கள் மத்தியில் கிளப்பி வருகிறார்கள்.
இந்த பீதியை போக்க, அணுசக்தி துறையின் விஞ்ஞானிகளும், கதிர் வீச்சு மருத்துவ நிபுணர்களும், கடந்த 11 ஜனவரி 2012 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்கள். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாட்காஸ்டர் என்கிற முறையில் கலந்து கொண்டு, அவர்களிடம் பேட்டியும் எடுத்தேன்.
கல்பாக்கம் மற்றும் மும்பையிலிருந்து வந்திருந்த விஞ்ஞானிகளிடம் உணவு இடைவேளையின் போது பேசிக்கொண்டிருந்த போது, அவர்களது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. சில தொழில் அணு உலை சம்பந்தப்பட்ட தொழில் நுட்பங்கள் அமெரிக்கா, ரஷயா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவிடம் மட்டும் தான் உள்ளது என்பதை அறிந்த போது, மிகவும் பெருமையாக இருந்தது. போக்ரான் 2 விற்கு பிறகு, நமது விஞ்ஞானிகள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் என்று குறிப்பிட்டார்கள். பல முன்னேறிய நாடுகள் கூட, நம் நாட்டு அணு விஞ்ஞானிகளிடம் ஆலோசனை பெறுவதாக தனிப்பட்ட முறையில் அவர்கள் பகிர்ந்து கொண்ட போது, இந்திய விஞ்ஞானிகள் மீது மிகுந்த மரியாதை உண்டானது.
நான் எடுத்த பேட்டியையும், நிபுணர்களின் பவர்பாயிண்ட் பிர்சண்டேஷன் களையும், கீழே அளித்துள்ளேன்.இந்த் பேட்டிகளிலிருந்து சில முக்கியமான குறிப்புக்கள்.
கதிர்வீச்சு
ஒவ்வொரு மனிதரும் இயற்கையாகவும், செயற்கையாகவும் கதிர்வீச்சை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
நாம் வாழும் பூமி, அண்டம், நாம் வாழும் வீடு, நாம் உண்ணும் உணவு மற்றும் பழங்கள், ரேடியேஷன் என்கிற கதிர்வீச்சை வெளியிடுகின்றன. சராசரியாக 2.4 மில்லி செவார்ட் (2400 மைக்ரோ செவார்ட்) அளவில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மனிதரும், கதிர்வீச்சை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
இது தவிர, சி.டி.ஸ்கேன், எக்ஸ் ரே, அணு மருந்துகள், மொபைல் போன், டிவி, கம்யூட்டர் வழியாகவும், கதிர் வீச்சை சராசரியாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஆண்டும் 0.6 மில்லி செவார்ட் (600 மைக்ரோ செவார்ட்) அளவில் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே இயற்கையாகவும், செயற்கையாகவும், சுமார் 3.0 மில்லி செவார்ட் (3000 மைக்ரோ செவார்ட்) கதிரியிக்கத்தை நாம் ஓர் ஆண்டில் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
அணு உலையின் கதிர்வீச்சு
இதன் பின்னணியில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சில கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ளது. அதன்படி, அனு உலை இருக்கும் 1.6 கிலோ மீட்டர் வரையரைக்குள், கதிர்வீச்சு 1.0 மில்லி செவார்ட் (1000 மைக்ரோ செவார்ட்) அளவை தாண்டக்கூடாது என்பதுதான் கட்டுப்பாடு. கடந்த காலங்களில், இன்று வரை, 40 மைக்ரோ செவார்ட்டை தாண்டவில்லை என்பதுதான் உண்மை. இயற்கையாகவே வரும் 2400 மைக்ரோ செவார்ட் அளவில் கதிர்வீச்சை ஒப்பிடும்போது, இந்த 40 மைக்ரோ செவார்ட் ஒரு பொருட்டு இல்லை.
அணு உலையில் ஒரு ஊழியர் 20 ஆண்டுகள் பணிபுரியும்போது அவர் உள்வாங்கும் கதிரியக்கமும், நாம் ஒரு முறை மார்பக எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளும் போது உள்வாங்கும் கதிரியக்கமும் ஒன்றே.
கதிர்வீச்சு எப்போது ஆபத்து?
ஒவ்வொரு மனிதருக்கும், சுமார் 20,000 மில்லி செவார்ட் (2 கோடி மைக்ரோ செவார்ட்) வரை கதிர்வீச்சை தாங்கும் சக்தி உள்ளது. ஆனால், 40,000 மில்லி செவார்ட் (4 கோடி மைக்ரோ செவார்ட்) கதிர்வீச்சை தாங்கினால், மரணம் ஏற்படும்.
அணு உலை கதிர்வீச்சால் புற்று நோய் வருமா?
அணு உலை விஞ்ஞானிகள் மற்றும் அணு கதிரியிக்க மருத்துவர்கள் கருத்துப்படி, அணு உலையிலிருந்து வரும் கதிரியிக்கம் கட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக மிக குறைவாக இருப்பதால், புற்று நோய் பாதிப்பு வராது. அதனால், மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்கிறார்கள்.
புற்று நோய் பாதிப்பு விவரங்கள்
மருத்துவ உலக கணக்குப்படி, புற்று நோயால் பாதிப்பவர்கள் விகிதம் (incidence rate), இந்தியாவில் ஒரு லட்சம் மக்கட்தொகைக்கு 98.5 நபர்கள். அதாவது, இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், 98.5 பேர் புற்று நோயால் இயற்கையாகவே சராசரியாக பாதிக்கப்படுகிறார்கள்.
அணு உலைக்கழகம் (NPCIL) தங்களிடம் பணியாற்றும் தங்கள் ஊழியர்களை மருத்துவ ரீதியாக பரிசோதித்து வருகிறார்கள். அவர்கள் வெளியிட்ட தகவல்படி, 1995 ,உதல் 2010 வரையான காலத்தில், புற்று நோய் பாதிப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 54.05 ஆக இருக்கிறது. இது தேசிய சாராசரிக்கு (98.5) குறைவாகவே உள்ளது.
மேலும் புற்று நோயால் இறப்பவர்கள் விகிதம் தேசிய சாராசரி, ஒரு லட்சம் மக்கட்தொகைக்கு 79 பேர். ஆனால், அணு உலையில் பணிபுரியும் ஊழியர்களின் புற்று நோயால் இறப்பு சராசரி விகிதம் 68. இதுவும் தேசிய சராசரிக்கு குறைவாகவே உள்ளது.
ஆகவே, அணு உலைக்கும், புற்று நோய் பாதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெற்றி குரல் இதழ் 24
இது பற்றி கல்பாக்கத்தில் பணிபுரியும் அணு விஞ்ஞானி திரு வெங்கடாசலம் அவர்களை வெற்றி குரலுக்காக ஒரு பேட்டி கண்டேன். அவரது பேட்டியை (7 நிமிடங்கள்) கேட்கவும்.
இந்த் பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.youtube.com/watch?v=DGdL9eCaDtQ
இந்திய அணு சக்தி கழகத்தின் தொழில் நிட்ப இயக்குநர் திரு பாரத்வாஜ் அவர்கள் சென்னை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பேச்சின் தொகுப்பு.
கதிரியக்கம் என்பது என்ன?

புறு நோயும் கதிரியக்கமும் என்பது பற்றி மும்பை டாடா மெமோரியல் மருத்துவ மனையின் அணு மருத்துவத்துறையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரங்கராஜன் அவர்களின் பேச்சு தொகுப்பு.
Radiation and cancer
இந்திய அணு சக்தி கழகத்தின் ஊழியர்களைப்பற்றிய மருத்துவ ரிப்போர்ட். இந்த கழகத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் எஸ். கே. ஜெயின் அவர்களின் பேச்சு தொகுப்பு.
Health profile of NPCIL employees
Health profile of NPCIL employees
0 கருத்துகள்:
கருத்துரையிடுக