இன்று (டிசம்பர் 9, 2007) காலை சென்னை ஃபிலிம் சேம்பரில் டிரீம்ஸ் டே ( dreams day ) என்கிற ஒரு இளைஞர்களின் அமைப்பு பத்து குறும் படங்களை திரையிட்டது. இந்த குறும் படங்களை தயாரித்தவர்களும் இளைஞர்களே. இந்த பத்து குறும் படங்களிலும் அவர்களுடைய துடிப்பும், புதுமையான கருத்துக்களும் வெளிப்பட்டன. சில குறும்படங்களை dreamsday அமைப்பினர் தங்களது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார்கள். இந்த குறும் பட்ங்களை தயாரித்த இளைஞர்களை, விழாவின் சிறப்பு விருந்தினர்களுடன் படத்தில் காணலாம்.
ராம் என்கிற இளைஞர் இயக்கிய 'The way" என்கிற ஒரு குறும்படமும், பரத் சிம்மன் (மேல் படத்தில் இடமிருந்து இரண்டாவது) இயக்கிய "பாவி" என்கிற குறும்படமும் என்னை கவர்ந்தன.
குளத்திலிருந்து சாலைக்கு வந்துவிட்ட ஒரு தவளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'The way' என்கிற படத்தில், எல்லோராலும் அலட்சியப்படுத்தப்பட்ட அந்த தவளையை ஒரு ஏழை சிறுவன், மீண்டும் குளத்தில் எடுத்து விடுகிறான். ஒரு மெசேஜ் அழகாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த பத்து படங்களும், இயக்கிய இளைஞர்களின் வெற்றிப்பயணத்தின் முதல் படி.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக