
"டாக்டர் கலாம் என்கிற மாமனிதரின் தூண்டுதல் இல்லையென்றால், இன்று எங்களைப்போன்ற இளைஞர்கள், சமுதாயத்தைப்பற்றியே சிந்தித்து இருக்க மாட்டோம்." என்று பெருமையுடன் கலாமைப்பற்றி உணர்ச்சிபொங்க கூறும் கார்த்திபன், தன்னுடன் பணிபுரியும் 2000 நண்பர்களையும் இணைத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில், கல்விப்பணி ஆற்றுகிறார். நிதி வசதியற்ற, நல்ல மார்க் எடுத்துள்ள ஏழை மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பெற உதவியுள்ளார்கள். அவர்கள் விடுக்கும் ஒரே கண்டிஷன், இந்த மாணவர்கள், தங்கள் கல்வி முடிந்தவுடன், அவர்களும் , தங்களைப்போன்ற மற்ற எழை மாணவர்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பதே!
இந்த டீமிலுள்ள அனைவரும், விடுமுறை நாட்களில், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கும் விஜயம் செய்து, அங்கு உள்ளவர்களுடன் தங்களது அன்பையும் கொடுக்கிறார்கள். "நகரத்திலுள்ள இல்லங்களுக்கு நிதி உதவி தேவையில்லை. அங்கு உள்ள குழந்தைகளுக்கும், முதியோர்களூக்கும் தேவை அன்பு மட்டுமே. ஆனால் கிராமப்புறங்களிலுள்ள அனாதை ஆசிரமங்களூம், முதியோர் இல்லங்களுக்கும் நிதி உதவியும், அன்பும் தேவை" என்கிறார் கார்த்திபன். அதனால், யாருக்கு என்ன தேவையோ, அதை மட்டும் அளிக்கிறார்கள்.
"இந்த உலகில் கடைசி இரண்டு மனிதன் இருக்கும் வரை, யாருமே அனாதை இல்லை" என்று தத்துவமாக பேசி, நெகிழவைக்கிறார்.
இராஜராஜன் கட்டிய கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டு விட்டு, அதன் வெளிச்சமே தெரியாதவகையில், தங்களுடைய பெயரை பெரிய எழுத்தில் போட்டு அசத்தும், இந்த காலங்களில், ஆரவாரமே இல்லாமல், டாகடர் கலாமின் 2020 கனவுகளை, ந்னவுகளாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டாயிரம் இளைஞர்களும், தங்களுக்குள் கம்பெனியின் 'இண்டிரானெட் பிளாக்" மூலமாக தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். இது வெளி உலகிற்கும் தெரிய வாய்பில்லை.
"எவரெஸ்ட் பாஸிடிவ்" என்கிற் ஒரு இணைய இதழையும் விரைவில் துவக்கி, பத்திரிகைகளில் வெளிவரும் பாசிடிவான விஷயங்களை (வருகிறதா என்ன?) தொகுத்து, தங்களது உறுப்பினர்களுக்கு இமெயிலில் சர்குலேட் செய்ய இருக்கிறார்கள்.
இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது, எதிர்கால இந்தியாவைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
"டீம் எவரெஸ்ட்" இளைஞர்களை வாழ்த்துவோம். இந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி teameverest@yahoo.co.in
Thanks for your post Srinivasan. Hope this post will bring like mided people together and make India a developed country by 2020.
பதிலளிநீக்குTogether we can. Let us join hands and illuminate this world!!!
நன்றி கார்த்தி. இதற்காகவே ஒரு வெப் சைட் உள்ளது. www.indiavision2020.org என்கிற தளத்திற்கு சென்று, இந்தியா விஷன் என்கிற யாஹூ குரூப்பில் சேரலாமே. இந்திய் நாட்டைப்பற்றி சிந்திக்கும் நல்ல உள்ளங்கள் இந்த குரூப்பில் இணையலாம். - சீனிவாசன்
பதிலளிநீக்குYa Srinivasan. I have already joined in that Yahoo group.
பதிலளிநீக்கு