சென்னை தி.நகரில் தற்போது பல பிரபல நிறுவனங்கள் தங்கள் பிரும்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். இன்று காலை (19.12.08) வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள ARR சீவல் கட்டிடத்தை அதிகாரிகள் போலீஸ் துணையுடன் இடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த கட்டிடத்தில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், வரை முறைகள் மீறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அங்கீகாரமற்ற கட்டிடங்களை இடிக்க உத்திரவு கொடுத்தும், அதிகாரிகள் - அரசியல் வாதிகள் துணையுடன், பல கட்டிடங்கள் வரைமுறையை மீறி தி.நகரில் கட்ட்பபட்டு வருகின்றன.

இந்த கட்டிடம் மட்டுமல்ல. இன்னும் ப்ல கட்டிடங்கள் வரைமுறையை மீறி கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு எல்லாம் என்று விடிவு வருமோ?
இந்த கட்டிட உரிமையாளர்கள், வரைமுறையை மீறி கட்டிக்கொடுத்த பொறியாளர்கள், இந்த வரைமுறைகளை கண்காணிக்க தவறிய (அல்லது லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்களை மூடிக்கொண்ட) அதிகாரிகள், அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த அரசியல் வாதிகள் அனைவரையும் 'குண்டர் சட்டத்தில்' கைது செய்தால்தான், இனி இது போன்ற அப்பட்டமான விதிமீறல்கள் தவிர்க்கப்படும்.
நம் ஊரில் கட்டப்படும் பல கட்டுமான வேலைகள் கொஞ்சம் சட்டத்தை தட்டித்தான் கட்டுகிறார்களாம்.
பதிலளிநீக்கு