கடந்த வாரம், மயிலாப்பூர் எம்.எல்.ஏ எஸ். வி. சேகர், அண்ணா திமுக வால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆரம்ப காலங்களீல், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறியவ்ராக இருந்த எஸ். வி. சேகர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அவரது கட்சியால் ஒரம் கட்டப்படு வந்தார். அண்ணா திமுக வின் மற்ற எம்.எல். ஏக்கள் கூட அவருடன் பேசுவதில்லை.
இந்த சூழ்நிலையில் தான், சேகர் கட்சியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியேற்றப்பட காரணம் என்ன, அவர் எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்வாரா, வேறு கட்சிகளில் சேருவாரா என்று அரசியல் வட்டாரங்களில் தற்போது விவாதிகப்படுகிறது.
இதன் பின்னணியில், நான் எஸ். வி. சேகருடன் இன்று தொலைபேசியில் வெற்றிகுரலுக்காக ஒரு பேட்டி கண்டேன். இந்த பேட்டியில், மெற்கண்ட அனைத்து கேள்விகளூக்கும், மனம் திறந்து பேட்டி அளித்தார். இது தவிரவும், இடைதேர்தலில், அண்ணா திமுக எடுத்த 'தேர்தல் புறக்கணிப்பு' கொள்கை பற்றியும் அவர் கருத்துகளை கூறினார்.
மேலும், அவருக்கு பராளுமன்றத்தில், ஒரு எம்.பி. ஆகக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக பேட்டி அளித்தார்.
இந்த பரபரப்பான பேட்டியை கீழ்கண்ட் பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும் (18 நிமிடங்கள்0 . இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் mp3 ஃபைலாக சேமித்து (18 mb) கேட்கவும்.
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
போன பதிவில் மோடிக்கு அவர் வாழ்த்து சொன்ன போது திரும்ப அவர் கூப்பிட்டு விஜாரித்ததாகச் சொன்னார் ஆனால் நான் கொடுத்த மினஞ்சலுக்கு இன்று வரை அவரிடம் இருந்து பதில் இல்லை.கொடுத்து 1 மாதத்திற்கு மேல் இருக்கும்.ரொம்ப பிசியாக இருக்கார் போல் இருக்கு,இல்லை அதையும் அதிமுக முடக்கிவிட்டதா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஇப்பதிவில் உள்ள போட்காஸ்டில் குரல் கீச்சு கீச்சு என்று கேட்கிறது.
தங்கள் கருத்துக்களுக்கும்,செயல்பாடுகளுக்கும் அதீத சுதந்திரத்தை எதிர் பார்க்கிறவர்கள் ஒரு தலைமையின் கீழ் இயங்குவது கடினம். அந்த வகையில் என் அபிமான ஹ்யூமரிஸ்ட் சேகர் தனி இயக்கம்தான் தொடங்க வேண்டும்!
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com