கடந்த மார்ச் 12ம் தேதி, (12.3.2012) அம்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாடு விஷன் 2023 என்கிற ஒரு ஆவணத்தை வெளியிட்டார். இதன் முக்கிய நோக்கம், தமிழகத்தை இன்னும் பத்து ஆண்டுகளில் ஒரு முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பது தான்.
இந்த தொலை நோக்கு திட்டத்தில், விவசாயம், கட்டமைப்பு, உற்பத்தி, சேவைதுறை பற்றிய ப்ல வகைகளில், தமிழகத்தை முன்னேற்றுவது குறித்து பேசப்படுகிறது. இந்த தொலைநோக்கு திட்டத்தின் ஆவ்ணத்தை கீழ்கண்ட தளத்தில் பெறலாம்.
இந்த விஷன் 2023 பற்றிய விவரங்களை, என்.டி.டி.வி - ஹிந்து தொலைகாட்சி, நேற்று இரவு (28 ஏப்ரல் 2012), திரு அப்துல் கலாமின் ஆலோசகர் திரு வி. பொன்ராஜ் அவர்களுடன் கல்ந்துரையாடி வெளிட்டது.
சுமார் 26 நிமிடங்க்ள ஒளிப்ரப்பான இந்த பேட்டியில், திரு பொன்ராஜ் பல முக்கிய தகவல்களை தருகிறார். இந்த பேட்டியை பதிவு செய்து வெளியிடுகிறோம்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக