This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 25 டிசம்பர், 2019

பாரளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் - தமிழகத்தில் முதலிடம் யாருக்கு? - ஒரு அலசல்

கடந்த டிசம்பர் 13ம் தேதி அன்று, மக்களையின் குளிரகால கூட்டத்தொடர் முடிவடைந்தது.  17வது பாராளுமன்றத்தின் முதல் நாள் முதல், நடந்து முடிந்த கூட்டத்தொடர் வரை தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.  இந்த ஆய்வு பி.ஆர்.எஸ் இந்தியா என்ற அமைப்பு வெளிடிடுள்ள விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.  

பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும் (Prime Point Foundation) , ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் (PreSense)  கடந்த பத்து ஆண்டுகளாக, அகில இந்திய அளவில் சிறந்த பாரளுமன்று உறுப்பினர்களுகு சன்சத் ரத்னா (Sabsad Ratba)  விருது ஒவ்வொரு ஆண்டும் மே மாத்த்தில் வழங்கி கவுரவிக்கிறது.  தவிர, பாரளுமன்ற ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்தவுடன், தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்றினர் என்று அலசி ஆய்வு கட்டுரை வெளியிடுகிறது.  

பணி மதிப்பிடு

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு  விவாதங்களில் பங்கேற்பது, தனி நபர் மசோதா தாக்கல் செய்வது, முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்புவது ஆகியவை முக்கிய பணிகாளாகும்.  அதன் அடிப்ப்டையில் அவர்களது பணி மதிப்பிடப்படுகிறது.

இந்த ஆய்வு, பாரளுமன்றத்தின்  முதல் அமர்விலிருந்து டிசம்பர் 13 வரையிலான உறுப்பினர்களின் பணிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

ஒட்டுமொத்த எண்ணிக்கை - முதலிடம்


விவாதங்கள், தனி நபர் மசோதா, கேள்விகள் ஆகியவற்றின் ஒட்டு மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழக எம்.பிக்களில், கன்னியகுரை  காங்கிரஸ் எம்.பி திரு வசந்தகுமார் 109 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார்.  கடந்த முதல் கூட்டத்தொடரிலும் அவர்தான் முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 28 விவாதங்கள், 2 தனியார் மசோதாக்கள் மற்றும் 79 கேள்விகள் கேட்டு, முதலிடம் வகிக்கிறார்.  95 சதவிகித கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். 

திரு வசந்தகுமர் கட்ந்த முதல் கூட்டத்தொடரில்  மொத்த மக்களவையிலும் 27ம் இடத்தை பெற்று இருந்தார்.  தற்போது, 2 இடங்கள் முன்னேறி 25ம் இடத்தை பெற்றுள்ளார்.  

தமிழகத்தில் இரண்டாம் இடத்தை திரு எம். செல்வராஜ் (சி.பி.ஐ - நாகப்பட்டினம்), இவர் 28 விவாதங்களில் பங்கேறும் 55 கேள்விகள் எழுப்பியும் (மொத்த பாயிண்டுகள் 84) இரண்டம் இடத்தை பெற்றுள்ளார்.  79 சதவிகிட அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். 

தேனி அண்ணாதிமுக எம்.பி திரு ரவீந்திரநாத் அவர்களும், காஞ்சிபுரம் திமுக எம்.பி  ஜி. செல்வம் அவர்களும் தலா 78 புல்ளிகள் பெற்றி மூன்றாம் இடம் வகிக்கிறார்கள்.  

விவாதங்கள்

தேனி எம்.பி. திரு ரவீந்திரநாத் தமிழ்நாட்டு எம்.பிக்களில் அதிக விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார்.  அவர் 42 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 

தனிநபர் மசோதா

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உறுப்பினர்கள் முக்கியமான பிரச்சனைகளில் தனி நபர் மசோதா கொண்டுவரலாம்.  கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் சேர்த்து 146 தனிநபர் மசோதாக்கள் அகில இந்திய அளவில்  அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.  இதில் தமிழகத்திலிருந்து 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

திரு வசந்தகுமார், திருமதி கனிமொழி, திரு நவாஸ்கனி தலா 2 மசோதாக்கள் தாக்கல் செய்துள்ளனர்.  திரு ரவிகுமார் 1 மசோதா தாக்கல் செய்துல்ளார்.  

கேள்விகள்

திரு வசந்தகுமார் 79 கேள்விகள் எழுப்பி முதலாமிடத்திலும், திரு ஜி. செல்வம் 75 கேள்விகள் எழுப்பி இரண்டாம் இடத்திலும் தமிழக அளவில் இருக்கிறார்கள்.  

கட்சிகளின் செயல்திறன்

தமிழகத்திலிருந்து சென்றுள்ள 39 எம்.பிக்களும், 7 கட்சிகளில் உள்ளனர்.  கட்சிகள் மொத்த செயல் திறன் எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.

24 எம்.பிகள் கொண்ட திமுக வின் சராசரி 38.4.  இரண்டு  உறுப்பினர்க்ள் கொண்ட சி.பி.ஐ (71.5), 
2 உறுப்பினர்கள் கொண்ட சி.பி.ஐ. எம் (57.5), 
8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் (51), 
ஒரு உறுப்பினர் கொண்ட வி.சி.கே (44), 
ஒரு உறுப்பினர் கொண்ட முஸ்லீம் லீக் (64) மற்றும்
ஒரு உறுப்பினர் கொண்ட அண்ண திமுக (78) சராசரி புள்ளிகள் பெற்று உள்ளனர். 

தமிழ்நாட்டின் சராசரி புள்ளி 45.5.  அகில இந்திய சராசரி 42.7. 

மகாராஷ்டிராவின் சராசரி 80.1
கேரளாவின் சராசரி 71.1
அகில இந்திய அளவில் இவை முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன.

அகில இந்திய அளவில், 6 உறுப்பினர் கொண்ட தேசிய்வாத காங்கிரஸ் 104.5 புள்ளிகள் எடுத்துள்ளது.  

பிரைம் பாயிண் ஃபவுண்டேஷன் சார்பிலும், ப்ரீசென்ஸ் மின் இதழ் சார்பிலும், தமிழகத்தின் சிறந்த எம்.பிக்களை பாராட்டுகிறோம்.  

தமிழக எம்.பிக்களின் செயல்திறன் தரவு கீழேகொடுக்கப்படுள்ளது.  

பிரைம் பாயிண்ட் சீனிவாசன்
Data Source : PRS India


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...