சென்ற மாத இறுதியில், ஜூ.வியின் மிஸ்டர் கழுகு பாணியில், மிஸ்டர் மதியின் சூடான செய்திகளை http://www.ilakku.in/ என்கிற இணைய தளத்தில் யாரோ வெளியிட்டு வருகிறார்கள். ஆரசியலில் தினந்தோறும் அரங்கேறும் நகழ்வுகளை சூடாகவும் சுவையாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சோ, ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அரசியல் ஆலோசனைகளை சோ அளித்ததாகவும் எழுதியிருந்தார்கள். அதே செய்தியில், இலவசமாக தரும் ஆலோசனைகளை யாரும் மதிப்பதில்லை என்றும், ஏதாவது வெளிநாட்டு நிறுவனங்கள் சர்வே என்கிற பெயரில், பல லட்சங்களை பெற்றுக்கொண்டு அழகான பைண்டு செய்து கொடுக்கும் ஆலோசனைகளை தான் நம்புவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய இதழில், அண்ணா திமுக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் அரசியல் சர்வேயை ஒப்படைக்க இருப்பதாக ஒரு செய்தியும் வெளியிட்டுள்ளார்கள்.
நானும் கார்ப்பொரேட் நிறுவனங்களில், ஊழியர்களீன் ஆழ் மனத்தில் இருக்கும் மன ஓட்டங்களை (perception) அறியும் இமேஜ் ஆடிட்டையும் செய்பவன். அத்னால், இந்த அரசியல் சர்வேக்களின் நம்பகத்தன்மை பற்றி எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து உண்டு. அந்த நிறுவனங்கள் செய்யும் முறை பற்றி நான் குறை கூறவில்லை.
பொதுவாக ஒவ்வொருவருடைய ஆழ்மனத்தில் இருக்கும் அடிப்படை எண்ணங்கள் மாறுபாட்டுக்கு உட்பட்டவை. பொதுவாக கார்ப்பொரேட் நிறுவனங்களில், நாங்கள் நடத்தும் இமேஜ் ஆடிட்டிற்கும், அரசியல் கருத்து கணிப்பிற்கும் அதை நட்த்தும் முறையில் வித்தியாசம் இருக்காது. இரண்டுமே, இரகசியமாகத்தான் நடக்கும். ஆனால், கருத்து கூறுபவர்களின் மன ஓட்டத்தில் வித்தியாசம் உண்டு. கார்ப்பொரேட் நிறுவன ஊழியர்கள், தங்கள் கருத்துக்களை கூடியவரையில் அதாவது 90 சதவிகததிற்கு மேல் சரியாக தங்கள் மனதில் தோன்றியதை frank ஆக பதிவு செய்வார்கள்.
ஆனால், அரசியல் கருத்துகணிப்பில், பொதுவாக, மக்கள் தங்கள் கருத்துக்களை சரியாக frank ஆக பதிவு செய்ய தயங்குவார்கள். எதிர்மறையான கருத்து கூற தயக்கம் காட்டுவார்கள். டி.வி. காரர்களீடம் பேசும் போதும் மிகவும் ஜாக்கிரதையாக பேசுவார்கள். கலைஞர் டிவிக்கு ஒரு மாதிரியாகவும் ஜெயா டிவிக்கு வேறு மாதிரியாகவும் பேசுவார்கள். தங்களை சுற்றி இருப்பவர்கள், பல கட்சிகளை சார்ந்தவராக இருப்பதாலும், 'ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டும்' என்கிற எண்ணத்தாலும், பல சமயங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகிவிடுகின்ற்ன. கடந்த சில் ஆண்டுகளில், இந்திய வாக்காளர்களின் மன ஓட்டத்தை கணிப்பது மிகவும் கடினமன ஒன்றாகி விட்டது. அமெரிக்காவில் நிலையே வேறு.
தற்போது நடத்தப்படும் கருத்து கணிப்பிற்கும், ஆறு மாதங்களுக்கு பிறகு நடத்தப்ப்டும் கருத்து கணிப்பிற்கும் அதிக அளவில் வித்தியாசம் இருக்கவும் வாய்ப்புண்டு. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருப்பது போன்ற ஒரு கருத்து கணிப்பு மாயையை தோற்று வித்து, அதையே பல தடவை, டி.வி மற்றும் மீடியாக்களில் பரவ் விட்டால், அது கூட மக்கள் கருத்துக்களை பாதிக்க வாய்ப்புண்டு.
இந்த கருத்து கணிப்பால், ஓரளவு, மக்கள் மனத்தை பாதிக்கும் பிரச்சனைகளை கணக்கிட்டு, அதை களைய முயற்சி செய்யலாம். இந்த சர்வேக்களை முழுவதுமாக நம்பி கெட்டவர்கள்தான் அரசியலில் அதிகம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக