This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 15 மே, 2009

கருத்து கணிப்புகள் (exit poll) - நம்பக்கத்தக்கவையா? ஒரு சூடான விவாதம்

கடந்த மே 13ம் தேதி மாலை 5 மணிக்கு ஐந்து கட்டங்களாக நடந்த இந்திய மக்களவை தேர்தல் முடிந்து விட்டது. இந்த தேர்தலில், தேர்தல் ஆணையம், ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடியும் வரை, கருத்து கணிப்புக்களையோ அல்லது எக்ஸிட் போல் எனப்படும் கணிப்புக்களையோ வெளிடக்கூடாது என்று ஆணை பிறப்பித்திருந்த்து. அதனால், அனைத்து டி.வி. சேனல்களும் 13ம் தேதி, மாலை 5 மணிமுதல், அவரவர்களது கணிப்புக்களை வெளியிட்டார்கள்.

இது போன்ற கணிப்புக்கள், கடந்த 2004 பொது தேர்தல், குஜராத் மற்றும் உத்தர்பிரதேஷ் மாநில சட்டசபை தேர்தல்களில் பொய்த்து விட்டன. அதனால், இந்த கணிப்புக்கள் மக்களிடையே ஒரு பெரிய நம்பிக்கையை தோற்றுவிக்கவில்லை. டி.வி. சேனல்களையும் குறை கூறமுடியாது. அவர்களும், மக்களின் எதிர்பார்ப்புகளூக்கு ஏதாவது சூடாக கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டார்கள். அதன் நிலை அவ்வளவுதான்.

நான் இமேஜ் ஆடிட் என்கிற 'perception study' செய்யும் தொழிலில் இருப்பவன். www.imageaudit.com என்கிற இணைய தளத்தில் பல கருத்துக்களை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். எந்த கணிப்புக்களிலும், மக்களின் ம்ன ஓட்டத்தை அறிய வேண்டுமானால், கீழ்கண்ட மூன்று கருத்துக்களும் முக்கியமானவை.

1. sample size என்ப்படும், மாதிரி கருத்துக்கள். அந்த sample, பொர்துவாக அனைத்து மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்குமாறு தேர்ந்து எடுக்கவேண்டும். இதில் தவறு இருந்தால், முடிவுகள் சரியாக வராது.

2. எவ்வாறு கருத்து கணிப்புக்களை நடத்துவது என்பது இரண்டாவது முக்கியமான ஒன்று. அதில் கேட்கப்படும் கேள்விகள், அதை செயல் படுத்துவரின் திறமை, அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி முக்கியமானவை.

3. முதல் இரண்டும் சரியாக இருந்தாலும், கடைசியாக, அந்த கருத்துக்களை சொல்லும் மக்கள், ஒளிவு மறைவு இல்லாமல், வெளிப்படையாக கருத்து சொல்ல வேண்டும். அவை honest அல்லது transparent கருத்துக்களாக இருப்பது மிகவும் இன்றியமையாதது.

ஆனால் நடைமுறையில், இந்த கருத்து கணிப்புக்கள், அவசர அவசரமாக நடத்த்ப்படுகின்றன. sample size சரியாக இருப்பதில்லை. பயிற்சி பெறாத பல மாணவர்கள் இந்த கணிப்புகளுக்காக அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு, அவர்கள் எடுக்கும் பாரங்களூக்கு தகுந்தவாறு அல்லது நாட்கணக்கில் ஊதியம் வழ்ங்கப்படுகிறது. அதில் அதிக தவறுகள் நடக்கின்றன. மேலும், கருத்து சொலலும் மக்கள், பல காரணங்களூக்காக தங்கள் உண்மையான கருத்துக்களை தேர்தல் சம்பத்தப்பட்ட விஷயங்களில் சொல்வதில்லை. இந்த தேர்தல் கணிப்புக்கள் மிகவும் சென்சிடிவான் விஷயம். மிகவும் நுட்பமாக கையாள வேண்டும்.

கருத்து கணிப்புக்கள் அறிவு சார்ந்த, அறிவியல் பூர்வமான ஒன்று. அதில் குறை கூற முடியாது. ஆனால், பல நடைமுறை சிக்கல்களால், இந்தியாவில், பொய்த்துப்போகின்றன. அவர்கள் மதிப்பிடும் எண்களில் தவறு நேரிட்டாலும், ஒரு மாதிரியாக trend தெரிய் வாய்ப்பு உள்ள்து.

இது ச்ம்பந்தமாக, நேற்று இரவு (14 மே 2009) 9.30 மணிக்கு என் நண்பர் மாலன் நடத்தும் 'மக்கள் தீர்ப்பு 2009' நிகழ்ச்சியில், என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள , ஒரு 'வல்லுநர்' என்கிற முறையில் என்னையும் அழைத்து இருந்தார்கள். இந்த் முழு நிகழ்ச்சியையும், (29 நிமிடங்கள்), 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த வீடியோவை, பிராட்பேண்டில் சீராக கேட்க முடியும். சீராக வரவில்லை என்றால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து கேட்கவும்.



இந்த வீடியோவை, கீழ்கண்ட த்ளத்டிலும் கேட்கலாம்.
http://blip.tv/file/2115592/

1 கருத்துகள்:

  1. Dear Srininvasan,

    தங்கள் வலைக்கு இது என் முதல் வருகை. நண்பர் அண்ணாகண்ணன் பேட்டியின் மூலம் தங்களை பற்றி அறிந்தேன். அருமையான பணி.

    வாழ்த்துகள்.

    மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..



    தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

    http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

    பார்க்கவும்.

    நன்றி.

    மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...