This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 13 மே, 2009

தேர்தல் குளறுபடிகள் - யார் பொறுப்பு?

தமிழகத்தில் ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது. பல இடங்களில், பலர் வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெற வில்லை. பலர் வாக்காளர் அடையாள அட்டைகள் பெற்றிருந்தும், அவர்கள் பெய்ர் பட்டியலில் இல்லை. பல குளறுபடிகள்.

மக்களவை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், இந்தியா விஷன் சார்பாக ""Celebrate Democracy - Vote India" என்கிற பிரச்சாரத்தை, டாக்டர் அப்துல் கலாமின் வாழ்த்துரையுடன் நான் துவங்கியது நினைவிருக்கலாம். இது தவிர, மற்ற அமைப்புகளீலும் சேர்ந்து, அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வோட்டளிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்திருந்தேன்.

கட்ந்த மாதம், இந்த பிரச்சாரத்தை துவக்கியபின், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணைய தளத்தில், எங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியலை பார்த்தேன். எங்கள் குடும்பத்தில் அனைவரது பெயரும் காணப்படவில்லை. தற்போதுள்ள விலாசத்திலேயே கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் வாக்க்ளித்துள்ளேன். வாக்காளர் பட்டியலை திருத்தும் போது, அதிகாரிகள் வீட்டிற்கு வந்து, புகைப்படம் எடுத்துள்ளார்கள். அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதன் அடையாளமாக ஒரு ஸ்டிக்கரையும், வீட்டு நிலைப்படியில் ஒட்டி சென்றுள்ளனர். இருந்தும், எங்களது பெயர்கள் விடுபட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனடியாக தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி திரு நரேஷ் குப்தாவிடமும் தொலைபேசியில், இது போன்று பலரது பெயர்கள் விடுபட்டிருக்கும் என்று முதல் தகவல் கொடுத்தேன். அவரது அறிவுரையின், பேரில், சென்னை மாநகராட்சியின் எட்டாவது மண்டலத்தின் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தேன். உடனடியாக அவர் ஒரு அதிகாரியை அனுப்பி, எனது புதிய விண்ணப்த்தை வாங்கிக் கொண்டார்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனது பெயர், துணை பட்டியலில் சேர்ந்ததா என்பது பற்றி விஜாரிக்க ஆரம்பித்தேன். துணை பட்டியலை அவர்களது இணைய தளத்திலும் வெளியிடவில்லை. அரசியல் கட்சியின் எங்கள் பகுதி பொறுப்பாளர்களிடமும் இந்த துணை பட்டியல் இல்லை.

இன்று காலை (13 மே 2009), ஒரு மணி நேரம், தேர்தல் சாவடியில், கியூவில் நின்று, அங்கிருந்த பொறுப்பாளர்களீடம் கேட்டதில், அவர்கள் என் பெயர் பட்டியலில் இல்லை என்று கை விரித்து விட்டார்கள்.

மற்றவர்களை ஓட்டு போடும் படி பிரச்சாரம் செய்த எனக்கே ஓட்டு இல்லை என்கிற வருத்தத்தில், மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இந்த த்கவலை தெரிவித்தேன். அவர்கள் ஒரு மணி நேரத்தில், என்னுடைய பெயர் துணைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், என்னுடைய நம்பரையும் தெரிவித்தார்கள். நான் ஒரு பத்திரிகைத்துறையைச் சேர்ந்தவன் என்பதாலும், பல உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ள் வாய்ப்பு உள்ளவனாதனாலும், என்னுடைய நீக்கப்பட்ட பெயர்கள் திரும்பவும் சேர்க்கப்பட்டன. (அப்படியும் எங்கள் குடும்பத்தில் ஒரு பெயரை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த தேர்தலில் பலரது பெயர்கள் பட்டியலில் விடுபடுள்ளன. தங்கள் பெயர் இல்லை என்று தெரிந்து ஏமாற்றத்துடன் பலர் திரும்பியதை நான் பார்த்தேன். எந்த ஒரு சிபாரிசும் இல்லாத ஒரு சராசரி குடிமகனுக்கு இதுபோன்று, பெயர் நீக்கப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள். துணைப்பட்டியலிலும் பல பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். துணைப்பட்டியலும் வெளியிடுவதில் தாமதம். வாக்காளர் பட்டியலிலும், போட்டோக்கள் மாறி மாறி ஒட்ட்ப்பட்டுள்ளன. சொதப்பல் அதிகமாக இருந்தது.

வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு, தேர்தல் ஆணையம் ஆயிரக்கணக்கான கோடிரூபாய்களை செலவு செய்கிறது. இவ்வளவு செலவு செய்தும், எனோ தானோ என்று பொறுப்பற்ற முறையில், அரசு உழியர்கள் பணியாற்றுகிறார்கள். கணினி யுகத்தில், ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது தெரியவில்லை.

தேர்தல் ஆணையம் உடனடியாக, வாக்காளர் பட்டியலை திருத்தும் பணீகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை களைய வேண்டும். இந்த செலவுகளை, இந்திய தபால் துறைக்கு கொடுத்தால், அவர்கள் இந்த பட்டியலை சரி செய்து கொடுப்பார்கள். த்பால் துறை ஊழியர்கள், நாட்டின் அனைத்து கிராமங்கள், நகரங்களையும் சிறப்பான முறையில் அறிந்து வைத்துள்ளார்கள்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

2 கருத்துகள்:

  1. .தேர்தலை எதிர்பார்த்து, நமது கடமையைக் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கெல்லாம் இந்தத் தேர்தல் ஏமாற்றத்தையே கொடுத்து இருக்கிறது.

    50 சத விகிதம்தான் ஓட்டுப் போட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
    எஙகள் தெருவிலேயே பல நபர்களின் பெயர்கள் விட்டுப் போயிருந்தன.

    இந்த இடத்திலேயே தான் இருக்கிறோம் 30 வருடங்களாக.
    என்ன பயன். சலிப்புத்தான் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு மக்கள் தொகை இருக்கும் நாடுகளில் இதெல்லாம் சகஜம் என்று போய்கொண்டே இருக்கவேண்டியது தான்!!
    எனக்கு ஒரு சந்தேகம்....
    18 வயதில் ஓட்டுரிமை என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்தார்கள்?இந்த வயதில் அந்த அளவுக்கு அரசியல் ஞானம் வந்துவிடுமா? பலரிடம்(18 வயது குழந்தைகளிடம்) பேசியதில் அவர் புரிந்துணர்வு மிகவும் குறைவாக இருந்தது தெரிய வந்தது அதோடிலில்லாமல் காஞ்சி பெரியவரின் “தெய்வத்தின் குரலில்” இதைப்பற்றி விரிவாக சொல்லியிருந்ததும் ஞாபகத்துக்கு வந்தது.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...