This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வியாழன், 13 நவம்பர், 2008

சட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயிலும் இரு பிரிவு மாணவர்களிடையே நேற்று நடந்த வன்முறை, இன்றைய (நவம்பர் 13, 2008) நாளிதழ், மற்றும் தொலைகாட்சிகளில் தலைப்பு செய்தியாகி விட்டது.

(போட்டோ" நன்றி தி இந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)

விஷயம் இதுதான்.


தேவர் திருமகனாரின் ஜயந்தி விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் அடித்த போஸ்டரில், கல்லூரியின் பெயரை குறிப்பிடும் போது 'டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி' என்று குறிப்பிடாமல் 'அரசு சட்டக்கல்லூரி' என்று குறிப்பிட்டு இருந்ததுதான் காரணம் என்கிறார்கள். அதுதான், வன்முறையில் முடிந்து விட்டது.

தவிரவும், மாண்வர்கள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டதுதான் விவகாரமாகிவிட்டது.

1. டாக்டர் அம்பேத்கார் மற்றும் தேவர் திருமகனார் இருவருமே, ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறந்து இருந்தாலும், அவர்கள் தங்கள் சாதனையால் , தேசிய தலைவர்களாக உருவானவர்கள். அவர்களை, அந்தந்த வகுப்பினர், தங்க்ள் பிரிவிற்குள் அடக்குவதால் தான், இந்த வன்முறைகள் நிகழ்கின்ற்ன. ஒவ்வொரு ஆண்டும், அனைத்து அரசியல் தலைவர்களும், தேவர் திருமகனாரின் குரு பூஜைக்கும், டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினத்திற்கும் வரிசை வரிசையாக சென்று அதை பெரிய நிகழ்ச்சியாக ஆக்கிவிட்டனர். அந்த மாபெரும் தேசிய தலைவர்களை ஒரு 'வோட்டு வங்கியாக' ஆக்கி விட்டனர். அதனால் தான், இந்த பிஞ்சு குழந்தைகளின் மனத்தில் விஷ விதை விதைத்து, நஞ்சை வளர்கின்றனர்.

அந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களின் மீது மரியாதை இருந்தால், அவர்களை ஒத்த மற்ற தலைவர்களான இராஜாஜி, நேதாஜி, பாரதியார், சி. சுப்ரமணியன், பக்தவத்சலம், சத்யமூர்த்தி, காமராஜர், போன்ற மற்ற மாமனிதர்களுக்கும் அல்லவா, போட்டி போட்டுக் கொண்டு மரியாதை செலுத்த வேண்டும். அவர்களையெல்லாம், வோட்டு வங்கியாக, மற்ற அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் உருவாக்க வில்லை.

டாக்டர் அம்பேத்கார், தேவர் திருமகனார், ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட தேசிய தலவர்கள். அவர்களுக்கு ஜாதி சாயம் பூசி அவர்களை சிறுமைப்படுத்த வேண்டாம். தங்களுடைய குறுகிய நோக்கத்திற்காக, அரசியல் தலைவர்களும், ஜாதி தலைவர்களும் மாபெரும் மனிதர்களை இழிவு படுத்த வேண்டாம். அவர்கள் இன்று நம்மிடையே உயிருடன் இருந்தால், அவர்களே விரும்ப மாட்டார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்.

2. இரண்டாவது, ச்ட்டத்தை காப்பாற்ற வேண்டிய சட்ட மாணவர்களே, அரிவாள், கத்தி, கட்டை ஆகிய வன்முறை ஆயுதங்களை எடுத்துக் கொள்வது, கவலை அளிக்கிறது. நாளைய நீதிபதிகள், இந்த மாணவர்களிலிருந்துதான் வருகிறார்கள். சுதந்திர போராட்டங்களை வழிநடத்தி வெற்றி பெற்ற் காந்தி, நேரு, இராஜாஜி, சதியமூர்த்தி, அம்பேத்கார், போன்றவர்களெல்லாம், சட்டத்துறை வல்லுநர்களே. நம் நாட்டில், சட்ட வல்லுநர்களுக்கு, எப்போதுமே, ஒரு தனி மரியாதை உண்டு.

3. மூன்றாவது, தங்கள் கன் முன்னால் வன்முறை நிகழும் போது, போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த செய்தி மிகவும் வேதனையானது. கல்லுரி வளாகத்தில், அனுமதியில்லாமல் நுழைய கூடாது என்று ஒரு சப்பைகட்டு கட்டி கொண்டு, வேடிக்கை பார்ப்பது போலீஸ் நிர்வாகத்திற்கு அழகல்ல. ஒரு கல்லூரியில், பகிரங்கமாக, போலீஸ் முன்னிலையில் ஒரு கொலையோ, அல்லது, கற்பழிப்போ நடந்தால், போலீஸ் என்ன செய்வார்கள். கல்லூரி நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருப்பார்களா?

9 கருத்துகள்:

  1. காவல் துறையை நினைத்தால் வயிறு எரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. நாடு எங்கே செல்கிறது....
    விதையிலேயே விஷம் இருந்தால், நாளைய பழம் என்ன இனிக்கவா செய்யும் ???

    பதிலளிநீக்கு
  4. நாடு எங்கே செல்கிறது....
    விதையிலேயே விஷம் இருந்தால், நாளைய பழம் என்ன இனிக்கவா செய்யும் !!!

    பதிலளிநீக்கு
  5. இதை இன்று வலையில் பார்க்கும் பொது அரண்டுவிட்டேன்....சினிமாவில் வன்முறையை காட்டும் போதெல்லாம் மிகைபடுத்திக்காட்டுகிறார்கள் என்ற எண்ணம் வரும்...இனிமேல் அந்த எண்ணம் வராது :(((
    இந்த மாணவர்கள் எல்லாம் நாளைய வக்கீல்கள் நீதிபதிகள்...வெளங்கிடும்....
    முதலில் கல்லூரியில் மாணவர் தேர்தலை தடை செய்ய வேண்டும்...அரசியல் நுழைவது அங்குதான்...:(((கொடுமை ..வேற என்னத்த சொல்றது !!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. தமிழ்நாட்டின் மற்ற சட்ட (மற்ற) கல்லூரிகளின் மாணவர்களும் இன்று களத்தில் இறங்கி, அமைதியாக இருந்த போலீஸின் மீது குறை கூறுகிறார்கள். போலீஸின் செயல் ஒரு வெட்கக்கேடான செயல் என்றால், சட்ட கல்லூரி மாணவர்களின் 'அராஜகமான வன்முறையினை' என்ன வென்று சொல்வது. தங்கள் சக மாணவர்களே, தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணாவர்களை காட்டுமிராண்டத்தனமாக தாக்கியதை எப்படி நியாயப்படுத்த முடியும்.

    சில மாதங்களுக்கு முன்பு, வக்கீல்களே, நீதிமன்ற்த்தில், நீதிபதிகளின் முன்னிலையில், வன்முறை நிகழ்த்தி, ஜன்னல்களை அடித்து நொறுக்கியதை மறக்க முடியாது.

    தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் இருக்கின்ற்ன. எந்த கல்லூரிகளிலும் சட்ட (மற்ற) கல்லூரிகளில் நடப்பதுபோல், வன்முறை நடப்பதில்லை. எந்த மாநிலத்திலும், நம்மூர் சட்ட (மற்ற்) கல்லூரிகளின் மாணவர்கள் போல் நடந்து கொள்வதில்லை.

    இனி வ்ருங்காலங்களில், சட்ட மாணவர்களும், சட்டம் பயின்ற ஒரு சில வக்கீல்களும், சட்டத்தை தங்கள் கையில் எடுத்து, வன்முறை நிகழ்த்தினால், அவர்களை கைது செய்து, தகுந்த தண்டனை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று உணர்த்தப்படுத்த வேண்டும்.

    மகாத்மா காந்தி, இராஜாஜி, நேரு, அம்பேத்கார் போன்ற மாமனிதர்கள் பெருமை சேர்த்த இந்த தொழிலை, ஒரு சிலர் களங்கப்ப்டுத்தி, கேவலப்படுத்துகிறார்களே என்று வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. ///இராஜாஜி, நேதாஜி, பாரதியார், சி. சுப்ரமணியன், பக்தவத்சலம், சத்யமூர்த்தி, காமராஜர், போன்ற மற்ற மாமனிதர்களுக்கும் அல்லவா///

    ரொம்ப அப்பாவியா இருக்குறீங்களே. பார்ப்பன ஹிந்துத்வா முத்திரை பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. I don't know how they hit a person, when he is surrendered completely. There is no humanity and they behaved like rowdys, not like law college students. Police is watching the clash as if nothing happening there. We have to those students and punish them.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...