அண்மையில் உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை DTH மூலம் தியேட்டர்களில் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பாகவே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரைப்பட உலகத்திலும், கேபிள் ஆபரேட்டர்கள் மத்தியிலும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.
கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தை இந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட இருக்கிறார். வழக்கமாக, திரைப்ப்டம் வெளியிட்ட சில நாட்களுக்கு பிறகுதான் DTHல் வெளியிடுவார்கள். இந்தியிலும், தெலுங்கிலும் DTHl வெளியிட அந்த மாநில்ங்களிலுள்ள திரைப்ப்டத்துறையினர் அனுமதிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழில் மட்டும் முதல் நாளே DTHல் வெளியிடப்போவதாக அறிவித்து இருப்பது, ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
DTH மூலம் வெளியிடுவதன் மூலம், டிவிடி குவாலிடி சிடிக்கள் தயாரிக்ப்பட்டு தியேட்டர்களில் படம் பார்க்க வ்ருபவர்களை தடுத்துவிடும் என்று திரைப்படத் துறையினர் அச்சப்படுகிறார்கள்.
சென்னையில் கேபிள் இணைப்புக்கள் முழுவதும் டிஜிட்டல் ஆகாத நிலையில், இந்த முயற்சி அதிக அளவில், கேபிள் இணைப்புக்களை, DTHக்கு மாற்றி விடும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் அச்சப்படுகிறார்கள்.
மேலும், கமலஹாசனை வைத்து, கேபிள் முழுவதும் டிஜிடல் ஆகாத குழப்ப நிலையில், DTH கம்பெனிகள் தங்கள் இணைப்புக்களை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்றும் குறை கூறுகிறார்கள்.
இந்தியையும், தெலுங்கையும் விட்டு விட்டு, தமிழ் நாட்டை மட்டும் ஏன் கமல்ஹாசன் குறி வைக்கிறார் என்றும் அங்கலாய்க்கிறார்கள்.
கமலை ஆதரிப்பவர்கள், தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாத்து என்றும், DTH மூலம் வெளியிடுவது ஒரு வியாபார யுக்தி என்றும் கூறுகிறார்கள். எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் உரிமை என்றும் வாதிக்கிறார்கள்.
எல்லா வாதங்களும், ஒரு ஹேஷ்யத்தின் அடிப்படயில்தான் செய்யப்படுகின்றன. இந்தியாவில் DTH மூலம் வெளியிடப்படுவது இதுதான் முதல் முறை. கேபிள் ஆபரேட்டர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் அச்சம் ஏற்படுவது இயற்கைதான்.
பல லட்சம் மக்களுக்கு வாழ்வளிக்கும் இந்த துறையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்களுடன் மன்ம் விட்டு பேசி, அவர்கள் அச்சத்தை தவிர்த்து, கமல் ஒரு முடிவை எடுப்பது தான் அனைவருக்கும் நல்லது.
இது பற்றி வெற்றி குரலுக்காக நாங்கள் ஒரு கலந்துரையாடலை தொலைபேசி மூலம் பதிவு செய்தோம். கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குநருமான திரு தனபால் பத்மநாபன் அவர்களும், தமிழ்நாடு கேபிள் ஆப்ரேட்டரகள் சங்கத்தின் மாநில தலைவர் திரு காயல் இளவரசும் இந்த விவாததில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
விறுவிறுப்பான இந்த கலந்துரையாடலில், இரு தரப்பு நியாயங்களும் வெளிவந்தன. இந்த விவாதத்தை நீங்களும் கேட்கலாம். (17 நிமிடஙகள்).
இந்த விவாதத்தை யூடியூபிலும் கேட்கலாம்.
http://youtu.be/B3yjt2i6IJI
0 கருத்துகள்:
கருத்துரையிடுக