கட்ந்த டிசம்பர் 2012, மூன்றாவது வாரத்தில், இந்திய தலைநகர் டில்லியில் ஒரு மாணவி ஓடுகின்ற ஒரு பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தற்போது மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஒரு பெரிய போராட்டத்தை தூண்டி விட்டு விட்டது. பாராளுமன்றத்திலும் ஒரு புயலை கிளப்பிவிட்டது.
இந்த பின்னணியில், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள், ஏதோ இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடாக சித்தரிக்கின்றன.
என்.சி.ஆர்.பி (NCRB - National Crime Record Burea) என்கிற தேசிய குற்ற ஆணவ அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தகவல் படி, 2007ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1.85 லட்சம் பெண்கலுக்கு எதிரான குற்றங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு, 16.3 ஆக் இருந்தது. 2011ம் ஆண்டில், 2.29 லட்சம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 18.9 ஆக உயர்ந்துள்ளது. இவை, பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 11 வகையில் வகைபடுத்தப்பட்டுள்ளன.
2011ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆந்திரா (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 33.4 குற்றங்கள்). கேரளா (33.8), திருபுரா (39), மேற்கு வங்காளம் (32) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 9.6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலே கூறியவை பெண்களுக்கு எதிரான அனைத்து பிரிவுகளிலும் உள்ள மொத்த குற்றங்கள்.ஆனால், கற்பழிப்பு குற்ற்ங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் (376 ஐ.பி.சி), 2011ல் இந்தியா முழுவதும் 24,206 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 2 வழக்குகள்.
தலைநகர் டில்லியில் மட்டும் 453 வழக்குகளும், மும்பையில் 221 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 76 வழக்குகள் மட்டுமே பதிவு செய்ய்பபட்டுள்ளது.
இந்தியாவில், 2011ல் ஒரு லட்ச்ம் மக்கள் தொகைகு 2.0 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்படி, அமெரிக்கா (27.3), இங்கிலாந்து (28.8), சுவீடன் (63.5), தென் ஆப்ரிக்கா (120) ஆகிய நாடுகள் உலக அளவில் முன்னணியில் உள்ளன.
இந்தியா ஒரு பாரம்பரியம் மிக்க கலாச்சாரம் மிக்க ஒரு நாடு. இந்த நாட்டில், ஒரு லட்சத்திற்கு 2.0 வழக்குகளே அதிகம் என்று கருதுகிறார்கள். மேலை நாட்டு கலாச்சாரம் இந்தியாவில் பரவி வரும் போது, இந்த பாலியல் குற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2003ல் லட்சம் மக்கள் தொகைக்கு 1.6 ஆக இருந்த குற்றங்கள், 2011ல் 2.0 ஆக உயர்ந்துள்ளது.
2008ம் ஆண்டில், டில்லி ஜே.என்.யூ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், காண்டோம் விற்பனை செய்யும் மிஷின்களை நிறுவி உள்ளனர். Moral values என்ப்படும் பண்பாடுகளை போதிக்கும் நிலை மாறி, அரசே ‘safe sex' என்கிற ஒரு கலாச்சாரத்தை ஊக்கு விக்கிறது. இதை கண்டிப்பவர்கள் பிற்போக்குவாதிகளாகவும், ஆதரிப்பவர்கள் முற்போக்குவாதிகளாகவும் சித்திரிக்கப்படுவதுதான் கொடுமை. இது தவிர இளைஞரகளிடையே மது கலாச்சாரமும் பெருகி வருகிறது. பண்பாடு கலாச்சார சீரழிவு ஏற்படும் போது, பெண்களின் மீது பாலியல் பலாத்காரமும் நடைபெறுகிறது.
டில்லியில், பாதிக்கப்பட்ட பெண் சாலையில், நிர்வாணமாக கிடந்த போது, 50 பேர் சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று செய்தி வந்துள்ளது. ஒருவரும் போலீசுக்கு தகவல் தரவில்லை. இது போன்ற சுய்நலம், அலட்சியம், சமுதாயத்தின் மீது அக்கறையின்மை இருக்கும் வரை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதே மக்கள் தான் அரசு மீது குற்றம் சுமத்தி போராடி வருகிறார்கள். அரசுக்கு மட்டும் மல்ல, சமுதாயத்திற்கும் பொறுப்புணர்வு தேவை.
இந்த பின்னணியில், வெற்றிகுரல் சார்பாக, தொலைபேசி வழியாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தோம். கோவையிலிருந்து இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்தும், சென்னையிலிருந்து பிரபல சமூக ஆர்வலரும் இளைய தலைமுறையைச் சார்ந்த பானு கோம்ஸும் கலந்து கொண்டார்கள்.
இந்த சுவையான கலந்துரையாடலை, கேட்க்வும். (17 நிமிடங்கள்).
இந்த கலந்துரையாடலை, கீழ்க்கண்ட யூடியூபிலும் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக