This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

’தூறல்’ (drizzle) புயலாகிறது - சாதனை படைக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள்

வினோ, விஜய், சந்த்ரு
வினோ, விஜய் மற்றும் சந்த்ரு மூவரும், அண்ணா பல்கலை கழகத்தில், 2004ல் மீடியா துறையில் முதுகலை முடித்த நண்பர்கள். முதுகலை பட்டம் பெற்றபின், ஒவ்வொருவரும் ஒரு துறையில் சேர்ந்து அதில் தனித்துவம் பெற்று வந்தனர். ஆனாலும், அவர்கள் மூவரும், ஒவ்வொரு வாரமும், தவறாமல் சந்தித்து தங்கள் துறைகளைப் பற்றி விவாதித்து, திறமையை மேம்படுத்திக் கொண்டு வந்தனர்.

வினோ, ரேடியோ ஒன் மற்றும் ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்து பிரப்லமடைந்தார்.  விஜய், ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, இயக்குநராக பயிற்சி பெற்றார்.  சந்த்ரு, திரைப்படம், டாகுமெண்டரி படங்கள் தயாரிப்பில் திறமையை வளர்த்துக்கொண்டார்.

இந்த நண்பர்கள், ஒவ்வொரு வாரமும் சந்தித்து உரையாடுவது மட்டும் தவறுவதில்லை.  கடந்த ஜனவரி 2011ல், அவர்கள் சந்தித்தபோது, நண்பர்களிடையே ஒரு பொறி தட்டியது.  தங்கள் தனிப்பட்ட திறமைகளை இணைத்து, ஏன் ஒரு முயற்சி செய்யக்கூடாது என்று சிந்தித்து விவாதித்தார்கள்.

அடுத்து என்ன பெயர் வைப்பது என்பது பற்றி விவாதித்தார்கள். “Drizzle productions"  என்கிற பெயரை தேர்ந்தெடுத்தார்கள்.

“பிரவாகமாக ஓடும் கங்கையும் ஒரு சிறிய ஓடையில் தான் துவங்குகிறது.  எந்த ஒரு பெரிய மழையும், ஒரு தூறலில் தான் துவ்ங்குகிறது.  தவிர, தூறலில் நனைவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனப்த்தைத் தரும். அதனால் தான் Drizzle Productions  என்று பெயர் வைத்தோம்”  என்கிறார் விஜய் அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும்.

விஜய் கிரியேடிவ் டைரக்டராகவும், வினோ நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்தார்கள்.  சந்த்ரு, நட்பு முறையில், புரொடக்‌ஷன் பணிகளை ஏற்கவும் முடிவாயிற்று.  தங்கள் திறமைகளை இணைத்து, விளம்பரப் படங்களையும், குறும் படங்களையும் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தனர்.  தேவைப்பட்டால், டிவி சீரியல்களையும் , நல்ல திரைப்படங்களையும் தயாரிக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

அடுத்த கட்டத்தில், தங்கள் திறமைகளை காண்பிக்கும் முறையில், ஒரு குறும் படம் தயாரித்து வெளியிட்டால் என்ன என்று சிந்தித்தார்கள்.  அந்த குறும் படம் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகவும், அதே சமயத்தில் நகைச்சுவையாகவும் சொன்னால் என்ன என்று பல பிரச்சனைகளை ஆய்வு செய்தார்கள்.

குழந்தைகளுக்கு, நடுத்தர வர்க பெற்றோர்கள் எவ்வாறு மன அழுத்தம் கொடுத்து தங்கள் கருத்துக்களை திணிக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு தீமை மையமாக வைத்து, விஜய் கதை தயார் செய்ய, மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்.

தங்கள் நண்பர்களையே இந்த குறும் படத்தில் நடிக்க வைத்ததுடன், ஒரு சிறிய குழந்தையும் நடிக்கவைத்து சாதனை படைத்தார்கள்.  டிவி தொகுப்பாளரான வினோ, இந்த குறும் படத்தில், தன்னுடைய நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி உள்ளார்.

சாதனை படைக்க துடிக்கும் இந்த இளைஞர்களை emaildrizzle@gmail.com என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

”சின்ன கண்ணன் சிரிக்கிறான்” என்கிற இந்த குறும் படத்தை, நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.  உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்தால், இந்த இளைஞர்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும்.

இந்த மூவரும் அண்ணா பலகலையில் என்னுடைய மாணவர்கள் என்பதால், நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.  இந்த ‘தூறல்’ (Drizzle) ஒரு ‘’புயலாக” க வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இந்த வீடியோவை, கீழ்கண்ட தளத்திலும் பார்க்கலாம்.

1 கருத்துகள்:

  1. Hi Chandru(Raju), Vino, Vijay,

    Congratulations!!! nice theme... presented in a cool way.... all the very best for the upcoming projects...

    cheers,
    Sangeetha

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...