This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

காங்கிரஸ்காரர்களே! ஜால்ராவையும், கோஷ்டி சண்டையையும் சற்றே நிறுத்தி, ராஜீவிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை பாருங்கள்.

இரண்டு நாட்கள் முன்பு, பிரியங்கா காந்தியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், வேலூர் சிறையில் இரகசியமாகவும், விதி முறைகளை மீறியும் சந்தித்தது பற்றிய பத்திரிகைகளில் வந்த செய்திகளை குறிப்பிட்டு இருந்தோம். அந்த இடுகையில், ஏன் பிரியங்காவோ, ராஜீவ் குடும்படத்தினரோ, மீடியாவோ அந்த துயர சம்பவத்தில், தீவிரவாததிற்கு பலியான பல குடும்பங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று எழுதியிருந்தோம்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா இதை ஒரு பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில், இந்த சம்பவத்தில் உயிர் நீத்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலரது உணர்வுகளை வெளியிட்டுள்ளார்கள். மற்றும், உச்ச நீதிமன்றத்தில் தண்ட்னை குறைப்பு அப்பீலில், நீதிபதிகள் 1999ல் வெளியிட்டுள்ள தீர்ப்பையும் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த தீர்ப்பில், நீதிபதிகள், இந்த துயர சம்பவத்தில் உயிர் நீத்த மற்றவர்களைப்பற்றி குறிப்பிடு உள்ளார்கள்.

சென்ற ஆட்சியில், ஜெயலலிதா, உயிர் நீத்த அனைத்து காவல் துறையினருக்கும் ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தார். ஆட்சி மாறியது; காட்சிகள் மாறிவிட்டன.

ராஜீவ் காந்தியை ஏன் கொலை செய்தார்கள் என்று அறிய வேண்டுமானால், இந்த வழக்கை புலனாய்வு செய்த கார்த்திகேயனிடமோ அல்லது, உளவுத்துறையிடமோ கேட்டிருக்கலாமே. அதை விட்டு விட்டு, ஏன் விதிமுறைகளை மீறி, இரகசிய்மாக நளினியை சந்திக்க வேண்டும்? இது பல சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளதே!

ராஜீவிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் பலத்த காயங்களுடன் தப்பிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் (ஓரிரு காங்கிரஸ்காரர்கள் உட்பட) ஆகியோரது குடும்பத்தினரை 17 ஆண்டுகளாக ஏன் சோனியா குடும்பத்தினர் சந்திக்கவில்லை. நளினிக்கு மகள் இருப்பதுபோல், பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தில் குழந்தைகள் இல்லையா? தலைவனை இழந்த அந்த குடும்பத்தினர் எவ்வாறு பாடுபட்டிருப்பார்கள்?

ஜால்ரா தட்டுவதிலும், கோஷ்டி சண்டையிலுமே காலத்தை தள்ளும் காங்கிரஸ்காரர்கள் என்ன செய்தார்கள்? (ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கூறிய அர்ஜுன் சிங்கை, 'sycophant' அதாவது ஜால்ரா என்று ஜெயந்தி நடராஜன் கூறியது குறிப்பிடத்தக்கது)

கோகிலவாணி என்கிற ஒரு சிறிய பெண் குழந்தை, ராஜீவ் பற்றி தான் எழுதிய கவிதையை, ராஜீவிடம் படித்துக்கொண்டிருக்கும் போது, வெடிகுண்டில் சிதறியதே; அந்த பிஞ்சை இழந்த குடும்பம் இது நாள் வரை என்ன வேதனை பட்டுக்கொண்டிருக்கும்.

காங்கிரஸ் காரர்களே! கொஞ்ச நேரம் உங்கள் ஜால்ராவையும் , கொஷ்டி சண்டையையும் நிறுத்துங்கள். உங்கள் தலைவருக்காக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட வர்களது குடும்பங்களை சந்தியுங்கள். புண்ணியமாக இருக்கும்.

கொலை குற்றத்தில் தண்டனை அனுபவிப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் சோனியா மற்றும் காங்கிரஸ்காரர்கள், பாதிக்க்ப்பட்டவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வெட்கக்கேடானது.

1 கருத்துகள்:

  1. உங்களின் பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. முக்கியமாக ‘ஜால்ரா' கேசுகள் காங்கிரஸ் காரர் என்பதில். ஆனால் நீங்கள் எழுதிய ஜோக் “ராஜீவ் காந்தியை ஏன் கொலை செய்தார்கள் என்று அறிய வேண்டுமானால், இந்த வழக்கை புலனாய்வு செய்த கார்த்திகேயனிடமோ அல்லது, உளவுத்துறையிடமோ கேட்டிருக்கலாமே. ” என்பது தான் எனக்கு மிகச்சிரிப்பை வரவழைத்தது. 27 பேருக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்து ‘சத்தியமே வெல்லும்' என கோசமிட்டவர் கார்த்திகேயன். பின்னர் என்ன நடந்தது. 4 பேர் தவிர எல்லோருக்கும் தண்டனை மாறியது. பெரும்பாலானவர் விடுதலை செய்யப்பட்டனர். நினைத்துப்பாருங்கள் இவர்கள் தூக்கிலிடப்பட்டிருந்தால்!!!! இதில்ல் ‘சத்தியமே வெல்லுமாம்!!!
    ரஜீவ் கொலைவிசாரனை கூட ‘ஜால்ரா' தட்டலோ எனவே நினைக்கவைக்கிறது. என்ன வேறுபாடு காங்கிரசார் ரஜீவ் குடும்ப ஜால்ரா கார்த்திகேயன் காங்கிரஸ் ஜால்ரா!!!!அதனால் தானோ என்னவோ பிரியங்காவே அவரை நம்பவில்லை!!!

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...