This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள்? ஒரு அலசல்









தற்போதுள்ள 15வது மக்களவையின் மழைக்கால தொடர், கட்ந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.  பொதுவாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் அவர்களது (1) பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளும் விவாதங்கள், எழுப்பபடும் கேள்விகள், தனியார் மசோதாக்கள் ஆகியவற்றாலும், (2) பாராளுமன்ற வருகை பதிவேடு மற்றும் (3) எம்பிலேட் எனப்படும் தொகுதி நிதியை செலவிடும் தன்மை ஆகியவைகளால் மதிப்பிடப்படுகிறது.  

ஒவ்வொருமுறை பாராளுமன்றம் கூடும் போதும், பாரளுமன்ற உறுப்பினர்களின் விவாத்ங்கள், மற்றும் அனைத்து தகவல்களும், பாராளுமன்ற இணையதளங்களீல் வெளியிடப்படும்.  PRS Legislative Research போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் அந்த விவரங்களை தொகுத்து வெளியிடுகிறது.  
அமைச்சர்களுக்கும், எதிர்கட்சி தலைவருக்கும், வருகை பதிவேடு கிடையாது.  மற்ற உறுப்பினர்கள், வருகை பதிவேடில் கையெழுத்து இட வேண்டும் அமைச்சர்கள், விவாதங்களீல் பங்கேற்பதில்லை.  கேள்விகள் எழுப்ப முடியாது.  அவர்கள், பதில் சொல்லும் பதவியில் இருக்கிறார்கள்.  
தமிழ்நாட்டிலிருந்து, 39 எம்.பிக்கள் மக்களவையில் உள்ளார்கள்.  அவர்களில் 8 பேர் அமைச்சராக உள்ளார்கள்.  ஆகவே, இதர 31 எம்.பிக்கள் எவ்வாறு தங்கள் பணியினை செய்தார்கள் என்பதை, கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம். 
நடந்து முடிந்த மழைக்கால தொடரில், மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பங்கேற்ற விவாதங்கள், எழுப்பிய கேள்விகளின் விவரங்களும், அவர்கள் வருகை பதிவேடு விவரங்களும் அட்டவணை 1 ல் கொடுக்க்ப்பட்டுள்ளது.  விருதுநகர் தொகுதி திரு மாணிக் தாகூரும், வட சென்னை தொகுதி திரு இளங்கோவனும், அனைத்து அமர்வுகளிலும் (100 சதவிகிதம்) கலந்து கொண்டுள்ளார்கள்.
திரு எஸ். எஸ். இராமசுப்பு
மக்களவையில் விவாதங்களில் பங்கேற்பது, மற்றும் கேள்விகள் எழுப்புவது என்கிற் வகையில், திருநெல்வேலி எம்.பி திரு எஸ். எஸ். இராமசுப்பு முன்னிலையை தக்கவைத்துள்ளார்.  கடந்த பட்ஜெட் கூட்ட தொடரின் முடிவில், அகில இந்திய அளவில், 8வது இடத்தில் இருந்த அவர், தற்போது அகில இந்திய அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  கடந்த மே மாதம், அவருடைய பணிகளை பாராட்டி, பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சார்பில், விருது வழங்கப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது. அவரை பாராட்டி நான் தொலைபேசியில் பேசியபோது, அவர் இந்த பாராளுமன்றத்தில், முதலிடத்தை பிடித்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உறுதி அளித்தார்.  வெற்றிபடிகள் சார்பாக, அவருக்கு நம் பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.  
திரு இராமசுப்பு தவிர, காஞ்சி திரு விசுவநாதன், கிருஷ்ணகிரி திரு சுகவனம், தர்மபுரி திரு தாமரை செல்வன் ஆகிய எம்.பிக்களும் சிறந்த பங்கேற்றுள்ளார்கள்.  
இந்த மழைக்கால தொடரில், ம்காராஷ்டிரா எம்.பிக்களின் சராசரி பங்கேற்பு (விவாதங்கள், கேள்விகள், தனியார் மசோதா)  32.80.  தமிழ்நாட்டு எம்.பிக்களின் சராசரி 32.70.  பாராளுமன்றத்தில் சிறந்த பணியாற்றிய அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக பாராட்டுக்க
மழைக்கால தொடரின் மக்களவை எம்.பிக்களின் பங்கேற்பு விவரங்கள் அட்டவணை 1ல் கொடுக்கப்பட்டுள்ளது.  15வது மக்களவை அமைக்கப்பட்டது முதல், மழைக்கால தொடர் வரை, இந்த மக்களவையில், தமிழ்நாட்டு எம்.பிக்களின் பங்கேற்பு விவரங்கள், அட்டவணை 2ல் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்டவணை 1


அட்டவணை 2, 15வது மககளவையின் ஆரம்பம் முதல், மழைக்கால தொடர் வரையிலான விவரங்கள்.  Total என்பது, ஆரம்பம் முதல், மழைக்கால தொடர் வரை, உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதங்கள், கேட்ட கேள்விகள் மற்றும், அறிமுகப்படுத்திய தனியார் மசோதாக்களின் கூட்டுத்தொகை.  நான் முன்பே கூறியபடி, திரு இராம சுப்பு, அகில இந்திய அளவில் 8ம் இடத்திலிருந்து, 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அட்டவணை 2








புதன், 11 ஆகஸ்ட், 2010

தமிழ் வாழ வேண்டுமென்றால், தமிழன் வாழ வேண்டும்

இந்தியா மற்றும் ப்ல நாடுகளிலுள்ள தமிழ் அன்பர்கள் இணைந்து நடத்தும் ‘மின் தமிழ்’ என்கிற இணைய குழுமத்தில், நண்பர் தேவ் அவர்களீன் அறிமுகத்துடன் அண்மையில் இணைந்தேன். இந்த குழுமத்தில், ப்ல அரிய கருத்துக்களை விவாதிக்கிறார்கள்.
மின் தமிழ் இணைய குழுமம்
இந்த குழுமத்தின் சார்பாக, நண்பர் செல்வன், அமெரிக்காவிலிருந்து என்னை தொலைபேசி மூலம் ஒரு பேட்டி கண்டார். இந்த பேட்டியை மின் தமிழ் குழுமத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்கள். என்னுடைய அந்த பேட்டியை அவர்களது அனுமதியுடன் வெற்றி படிகளில் வெளியிடுகிறேன்.
இந்த பேட்டியில், மக்கள் தொடர்பு பணிகள், இந்தியா விஷன், தமிழ் வளர்ச்சிக்கான உத்திகள், தொழில் நுட்ப பயன்பாடு பற்றிய பல கேள்விகளுக்கு என்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளேன். மேலும், தமிழி மொழியில், தேவைப்பட்டால்,ஆங்கில மொழி போல் தகுந்த பிற மொழி சொற்களையும் இணைத்துக்கொள்வதில் தயங்கக்கூடாது என்பதையும் விளக்கியுள்ளேன்.  
இந்த பேட்டியை, (20 நிமிடங்கள்) கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் கிளிக் செய்து கேட்கவும்.


இதை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

வியாழன், 15 ஜூலை, 2010

கம்யூனிகேஷன் திறமையை வளர்ப்பது பற்றிய ஒரு ஜெயா டிவி நேர்முகம்

கடந்த ஜூலை 7ம் தேதி, (07/07/2010) அன்று, மதியம் 12 மணிக்கு என்னுடைய பேட்டி ஜெயா டிவியில் நேரலையாக "டயல் ஜெயா டிவி" என்கிற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியில், நேயர்கள் தங்கள் தொலைபேசி மூலம் கேள்விகள் கேடகவும் வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 'கம்யூனிகேஷன் திறமைகளை' வளர்ப்பது பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு என்னை இதன் தயாரிப்பாளர் திரு சரவணராஜு அழைத்திருந்தார்கள்.  பிரபல தொகுப்பாளர் வினோ சுப்ரஜா இந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒளிப்பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.  (22 நிமிடங்கள்)
இந்த வீடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்க்கவும். 



இந்த வீடியோவை, கீழ்கண்ட தளத்திலும் பார்க்கலாம்
http://blip.tv/file/3890035
இதன் ஆடியோவை மட்டும் கேட்க வேண்டுமானால், கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
பாட்பஸார்
ஓடியோ

செவ்வாய், 13 ஜூலை, 2010

பாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி

"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை " என்று சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பாரதி கண்ட கனவு இப்போது நடைமுறையில் வரத்துவங்கி விட்டது.  பாரதி,  புதுமை பெண், ஆணுக்கு நிகராக கல்வி  மற்றும் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று விரும்பினான்.

மகாகவி பாரதியின் கனவுகளை நனவாக்கும் விதத்தில், பவிகா பாரதி (படத்தில் இட புறம் இருப்பவர்)  என்கிற இளம் நங்கை (21 வயது), தற்போது உலகின் இளம் விமானியாக திகழ்கிறார்.  தன்னுடைய 16 வ்யதில், பிள்ஸ் 2 முடித்தவுடன், விமானியாவதற்கான பயிற்சிகளில் இறங்கினார்.  18 வயதில், விமானம் ஒட்ட உரிமம் பெற்றார்.  தன்னுடைய 21 வது வயதில், கமாண்டர் ஆவதற்கும் தகுதி பெற்று கேப்டன் பவிகா பாரதி ஆனார்.  இதுவரை 2100 மணிகள் விமானம் ஓட்டியுள்ளார்.  இவரது சாதனனகள் லிம்கா சாதனைகள் புத்தகத்திலும் வெளியிடப்ப்ட்டுள்ளன. 

இதில் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், அவரது தாயார் திருமதி  ஜுடித் ஜெஸ்லின் பாரதியும் (படத்தில் வலது புறம் இருப்பவர்) , ப்விகாவுடன் விமான பயிற்சி பெற்று, அவரும், பவிகா இருக்கும் அதே விமான கம்பெனியில் விமானியாக பணிபுரிகிறார். 

பவிகாவின் தந்தை வழி பாட்டனார் திரு தாமஸ், முண்டாசு கவிஞன் பாரதியாரின் ஒரு பக்தர்.  அதனால், அவரது குடும்பத்தில் உள்ள அனைவரது பெயருக்கும் பாரதி என்கிற பெயரை இணைத்து விட்டார்.  அதனால் தானோ என்னவோ பவிகாவும் அவரது தாயும் இணைந்து பயிற்சி எடுத்து, சாதனை படைக்கிறார்கள்.

பவிகா மற்றும் அவரது தாயாரின் ஆங்கில பேட்டியை,  கிளிக் செய்து கேட்கவும்.  இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் டவுன் லோடு செய்து, கேட்கவும்.  (12 நிமிடங்கள்)


இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளங்களிலும் கேட்கலாம்.
பாட்பஸார்
ஓடியோ 

வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - ஒரு விமர்சனம் - ஏன் கலாம் அவர்கள் புறக்கணிக்கப்ப்ட்டார்?

செந்தமிழ் மாநாடு கோவையில், கடந்த மூன்ற் நாட்களாக நடந்து கொண்டு வருகிற்து.  சுமார் 600 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்த ஆடம்பர விழாவைப்பற்றிய விமரசனங்களும் வரத்தொடங்கிவிட்டன.

துவக்க விழாவில், பத்திரிகையாளர்களுக்கு சரியாக இடம் ஒதுக்கப்படவில்லை.  நடிக ந்டிகையர் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.  மேடையில் பேசிய பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசினர் என்றும் அதை மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யாததால், கிராமத்து மக்கள் அவதிப்ப்ட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.

எல்லாவற்றையும் விட, ஜெயலலிதா குற்றம் சாட்டியபடி, இந்த மாநாடு 'தன்னல தம்பட்ட விழாவாகவும் குடும்ப விழாவாகவும்' இந்த மூன்று நாட்களில் மாறிவிட்டது. பேசிய அனைவரும், கலைஞரை புகழ்வதில்தான் கவனம் செலுத்தியது, டி.வி. நேரடி ஒளிபரப்பில் தெரிந்தது.  வைரமுத்து ஒரு படி மேலே போய், "கலைஞர், வள்ளுவரை விட மேலானவர்" என்று பாடினார்.  வள்ளுவர் அறம், பொருள், இன்பம் மூன்று தான் தந்தார்.  ஆனால், கலைஞரே,  வீடும் கொடுத்தார், என்று கவிதை பாடியது, முகம் சுளிக்க வைத்தது.  இதனால் தான் என்னவோ, கலைஞரும், மூன்றாவது நாள் இறுதியில்,  தன்னை புகழ்ந்தது போதும், இனி தமிழை புகழுங்கள் என்று கூறினார்.  நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். இந்த குறிப்பை புரிந்து கொண்டவர்கள்,  கலைஞரையும் தமிழையும் ஒன்றாக்கி பேச ஆரம்பித்து விடுவார்கள். 

ஜால்ரா அடிப்பதில், எல்லோருக்கும் போட்டி.  பத்திரிகைகளும் சளைக்கவில்லை.  விளம்பரங்களை வாரி வாரி கொடுத்து விட்டதால், கொஞ்ச நஞ்சம் விமரிசித்தவர்களும், ஜால்ரா போட ஆரம்பித்து விட்டனர். அரசு பிரிண்ட் மற்றும் டி.வி. களைத்தான் வரிந்து வரிந்து கவனித்துக் கொண்டார்கள்.  ஆனல், இணைய தளத்துடன் சம்பந்தப்பட்ட பதிவாளர்களை கண்டு கொள்ளவில்லை.  அதனால், கூகுளில் 'செம்மொழி மாநாடு' என்று தேடினால், நூற்றுக்கு 90 பதிவுகள், எதிர்மறை விமர்சனமாக இருக்கிற்து.

இது தவிர இலங்கை தமிழர்கள், அதிக அளவில், இணைய தளத்தில் பதிவு எழுதுகிறார்கள்.  அவர்களுக்கும் கலைஞர மேல் அதிக கோபம்.  இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு காண முயலவில்லை என்கிற கோபம் வெறு.  சென்ற ஆண்டு கலைஞர இருந்த உண்ணாவிரத டிராமா (காலை டிபனுக்கும், மதிய உணவுக்குமிடையில்)வேறு அவர்களை வெறுப்பேற்றியுள்ளது.  அத்னால், இணைய தளங்களில், எதிமறையான விமர்சனங்களே அதிகம் காணலாம்.  இதனால், உலக அளவில், தமிழர்களிடையே, கலைஞருக்கு, அதிக அளவில், இந்த செம்மொழி விழா ஒரு பெருமையை சேர்க்காது.   



முதல் நாள் விழா ஆரம்பித்தவுடன், ஏன் க்லாமை அழைக்க வில்லை என்று ஒரு  குறுஞ்செய்தி ( sms), தமிழ்நாடு முழுவதும் உலாவர ஆரம்பித்து விட்டது.  கலாம்  அவர்கள், குடியரசுத்தலைவராக இருந்த போது தான், தமிழை செம்மொழியாக்கி, உத்தரவு பிறப்பித்தார்.  அவர் எந்த நாட்டில் போசினாலு, இன்றுவரை, தமிழிலிருந்து மேற்கோள் காட்டாமல் பேசுவதில்லை.  உல்கம் மூழுவதும், தமிழனை தலை நிமிரச் செய்த கலாம்  போன்றவர்களை, அரசு அழைக்காதது ஒரு துரதிருஷ்டமே.  கலாம் வந்திருந்தால், அனனத்து இளைஞர்கள் மற்றும், மீடியா பார்வையும், அவர் பக்கம் போயிருக்கும்.  மேலும், கலைஞர், தமிழ் நாட்டு சட்டசபைக்கு வந்து கலாம், தன்னை புகழ வேண்டும் என்று விரும்பியபோது, கலாம் அவர்கள் தவிர்த்து விட்டதால், கலைஞர் , கலாம் அவர்களை அழைக்க விரும்பாமலும் இருந்திருக்கலாம்.

கலாம்  அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்த போது, ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றத்தில், அவர்களது, பொன்விழாவை ஒட்டி ஒரு சிறப்பு உரை ஆற்றினார்.  அந்த சமயம், "யாதும் ஊரே' யாவரும் கேளிர்" என்கிற பாடலை கூறி அதன் விளக்கத்தையும், ஆங்கிலத்தில் கூறி, தமிழின் பெருமையை உலகறிய செய்தார்.  அதை கேட்ட அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்தினர்.  அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர், கலாம் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார். 

அந்த நிகழ்ச்சியை, எனது நண்பர் தனபால் தயாரித்த "லிட்டில் டிரீம்" என்கிற கலாம் அவர்கள் பற்றிய குறும்படத்திலிருந்து,  கீழே கொடுத்துள்ளேன். 

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை" என்கிற் கண்ணதாசன் வரிகள் தான் என் நினைவுக்கு வருகிற்து.



இந்த குறும்படத்தை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=Uu-0vTOHJ44

செவ்வாய், 22 ஜூன், 2010

ஆர்பாட்டம் இல்லாமல் வைணவம் வளர்க்கும் தமிழ் - செம்மொழி மாநாட்டு சிறப்பு பதிவு

வெற்றி குரல் இதழ் 17

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் மிகுந்த ஆடம்பரத்துடனும், பிரும்மாண்டமுமாய் துவங்கிவிட்டது.  பல அறிஞர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பேச இருக்கிறார்கள்.  சுமார் ரூபாய் 600 கோடி செலவில் நடத்தப்படும் இந்த மாநாட்டைப்பற்றி பல விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.   கலைஞர் தன்னை பாராட்டுவதற்காக  அரசு  செலவில்  நடத்தப்ப்டும் ஒரு தன்னல தம்பட்ட  விழா என்று  எதிர் கட்சிகள்  குற்றம்  சாட்டுகின்றன.

மற்றும், கலைஞர் இந்த மாநாட்டிற்கக எழுதிய "யாதும் ஊரே..யாவரும் கேளீர்" என்கிற பாடலை ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்து வெளியிட்டுள்ளார்கள்.  அதைப்பற்றியும் பல விமர்சனங்களும் வரத்தொடங்கி விட்டன.  தமிழ் மாநாட்டிற்கான இசையை, மேல் நாட்டு பாணியில் இசை அமைக்க வேண்டுமா என்றும், தமிழின் மென்மையை வெளிக்காட்டாமல், ஒரே காட்டுக்கூச்சலாக இருப்பதாகவும், பலர் எரிச்சல் படுகிறார்கள்.  பண்டைய தமிழ்நாட்டில், யாழ், வீணை, குழல், மத்தளம், வரிசங்கம் போன்ற பல இசைகருவிகள் இருநதன.  அவைகளில் பல, இன்றும் நம்மிடையே உள்ளன.  அந்த கருவிகளை உப்யோகித்து,  தமிழ் க்லாச்சாரத்திற்கு ஏற்ப மென்மையான இசையாக இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது என்றும் கூறுகிறார்கள். .  ஏ. ஆர். ரஹ்மானே அதை செய்திருக்கலாம். 

இந்த பாடலை கேட்ட ஒரு மூத்த பத்திரிகை நண்பர், "கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர், அவரது பாரம்பரிய உடையில் இருந்தால் தான் மரியாதை.  அதைவிட்டு, அவர், ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்டுக்கொண்டு அர்ச்சனை செய்தால் எப்படி இருக்கும்.  அது போன்று தான் இந்த செம்மொழி பாடல் இருக்கிறது" என்று விமர்சித்தார்.

எது எப்படி இருந்தாலும், செம்மொழி மாநாடு தமிழை வளர்க்க முயற்சித்தால், நல்லது தான்.  தமிழ் செம்மொழி ஆவதற்கு முக்கிய காரணமே, பல ஆயிரக்க்ணாகான ஆண்டுகளாக தமிழுக்கு ஏற்றம் கொடுத்து, இறைவனது கருவறையிலிருந்து, வீதிவரை தமிழை உபயோகிக்கும் சைவ, வைணவ திருக்கோவில்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.  ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை தமிழில் வழிபட வழிகாட்டினார்கள். . 

பாடல் பெற்ற அனைத்து திருத்தலங்களின் இறைவன், இறைவியின் திருப்பெயர்கள் தமிழில் உள்ளன.  அனத்து வைணவ திருத்தலங்களிலும், கோவிலின் கருவறை திறக்கும் போது 'திருப்பள்ளி எழுச்சி" பாடுவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.  திருவரங்கத்தில்,   இந்த தமிழ் பாசுரம், பண்டைய தமிழ் இசை க்ருவியான வீணையில் இசைக்கபடும்.   திருப்பாவை, மற்றும் ப்ல்லாண்டு பாசுரம் பாடியபிறகுதான, அனைத்து வைணவக் கோவில்களிலும், (திருப்பதி உட்ப்ட), தினந்தோறும் தீர்த்த பிரசாதம் வழங்கப்படும்.  இது தவிர, இறைவனை இரவில், பள்ளியறையில் எழுந்தருளச் செய்யும்  போதும், தமிழ் பாசுரங்கள் தான் பாடப்படும். 

அனைத்து வைணவ திருக்கோவில்களிலும், மார்கழிமாதம், தமிழ்த் திருவிழாவாக கொண்டாடப்படும்.  திருவரங்கத்தில், 'அரையர்கள்' என்கிற ஒரு பிரிவினர், தமிழ் பாசுரங்களுக்கு, அநத மார்கழி மாதத்தில், பண்ணிசைத்தும், நடனமாடியும். இறைவனை வழிபடுவார்கள்.

இன்றும் பல  வைணவ இல்லங்களிலும், திருக்கெண்ணமுது (பாயசம்), அக்கார வ்டிசில் (பாயசம்), நெகிழ் கறி அமுது (சாம்பார்), சாற்றமுது (ரசம்), கறி அமுது (பொறியல்), மடப்பள்ளி (சமையலறை), திருமஞ்சனம் (அபிஷேகம்), திருமண் (நெற்றியில் இடப்படும் திரு நாமம்). அகம் (வீடு), அமுது செய்வது (இறைவனுக்கு  உணவு படைப்பது)   போன்ற தூய தமிழ்சொற்கள் வழக்கத்தில் உள்ளன.  இந்த தூய தமிழ் சொற்களை பிறர் (டி.விகள் உட்பட) கேலி செய்வதால், பலர் வெளியில் உபயோகப்படுத்தவும் தயங்குகிறார்கள்.  இதுதான்,  தமிழ் பேசுபவர்களுக்கு ஏற்படும் இன்றைய நிலை. 
வைணவ திருக்கோவில்களிலும், இல்லங்களிலும்  தமிழை உபயோகப்படுத்தும்  முறையை இராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  தோற்றுவித்தார்.   செம்மொழி மாநாடு போல ஆர்ப்பாட்டம்   ஆரவாரம்  இல்லாமல், ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக,   சைவ மற்றும்  வைணவ திருக்கோவில்கள் தமிழை வளர்து வருகின்றன.   இந்த மாநாட்டில், ஆன்மீகத்தமிழிற்கு அதிக முக்கியத்துவம் இல்லாததால், வெற்றிகுரலின் பங்களிப்பாக, "வைணவத்தில் தமிழ்" என்கிற தலைப்பில்,  வைணவப்பிரபந்தங்களில் பிரபல ஆராய்ச்சியாளர் தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்) திரு கோசகன் அவர்களுடன் தொலைபேசியில். ஒரு பேட்டி க்ண்டேன். 

இந்த பேட்டியை (20 நிமிடங்கள்) 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும்.  இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து கேட்கவும்.



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857495

வியாழன், 17 ஜூன், 2010

அரசியல் கட்சிகளுக்காக நடத்தப்படும் சர்வேக்களின் நம்பகத்தன்மை

சென்ற மாத இறுதியில், ஜூ.வியின் மிஸ்டர் கழுகு பாணியில், மிஸ்டர் மதியின் சூடான செய்திகளை http://www.ilakku.in/ என்கிற இணைய தளத்தில் யாரோ வெளியிட்டு வருகிறார்கள். ஆரசியலில் தினந்தோறும் அரங்கேறும் நகழ்வுகளை சூடாகவும் சுவையாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சோ, ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அரசியல் ஆலோசனைகளை சோ அளித்ததாகவும் எழுதியிருந்தார்கள். அதே செய்தியில், இலவசமாக தரும் ஆலோசனைகளை யாரும் மதிப்பதில்லை என்றும், ஏதாவது வெளிநாட்டு நிறுவனங்கள் சர்வே என்கிற பெயரில், பல லட்சங்களை பெற்றுக்கொண்டு அழகான பைண்டு செய்து கொடுக்கும் ஆலோசனைகளை தான் நம்புவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய இதழில், அண்ணா திமுக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் அரசியல் சர்வேயை ஒப்படைக்க இருப்பதாக ஒரு செய்தியும் வெளியிட்டுள்ளார்கள்.

நானும் கார்ப்பொரேட் நிறுவனங்களில், ஊழியர்களீன் ஆழ் மனத்தில் இருக்கும் மன ஓட்டங்களை (perception) அறியும் இமேஜ் ஆடிட்டையும் செய்பவன்.  அத்னால், இந்த அரசியல் சர்வேக்களின் நம்பகத்தன்மை பற்றி எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து உண்டு.  அந்த நிறுவனங்கள் செய்யும் முறை பற்றி நான் குறை கூறவில்லை. 

பொதுவாக ஒவ்வொருவருடைய ஆழ்மனத்தில் இருக்கும் அடிப்படை எண்ணங்கள் மாறுபாட்டுக்கு உட்பட்டவை.  பொதுவாக கார்ப்பொரேட் நிறுவனங்களில், நாங்கள் நடத்தும் இமேஜ் ஆடிட்டிற்கும், அரசியல் கருத்து கணிப்பிற்கும் அதை நட்த்தும் முறையில் வித்தியாசம் இருக்காது. இரண்டுமே, இரகசியமாகத்தான் நடக்கும்.   ஆனால், கருத்து கூறுபவர்களின் மன ஓட்டத்தில் வித்தியாசம் உண்டு.  கார்ப்பொரேட் நிறுவன ஊழியர்கள், தங்கள் கருத்துக்களை கூடியவரையில் அதாவது 90 சதவிகததிற்கு மேல் சரியாக தங்கள் மனதில் தோன்றியதை frank  ஆக பதிவு செய்வார்கள்.  

ஆனால், அரசியல் கருத்துகணிப்பில், பொதுவாக, மக்கள் தங்கள் கருத்துக்களை சரியாக frank  ஆக பதிவு செய்ய தயங்குவார்கள்.  எதிர்மறையான கருத்து கூற தயக்கம் காட்டுவார்கள்.  டி.வி. காரர்களீடம் பேசும் போதும் மிகவும் ஜாக்கிரதையாக பேசுவார்கள். கலைஞர் டிவிக்கு ஒரு மாதிரியாகவும் ஜெயா டிவிக்கு வேறு மாதிரியாகவும் பேசுவார்கள்.   தங்களை சுற்றி இருப்பவர்கள், பல கட்சிகளை சார்ந்தவராக இருப்பதாலும்,  'ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டும்' என்கிற எண்ணத்தாலும், பல சமயங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகிவிடுகின்ற்ன.  கடந்த சில் ஆண்டுகளில், இந்திய வாக்காளர்களின் மன ஓட்டத்தை கணிப்பது மிகவும் கடினமன ஒன்றாகி விட்டது.  அமெரிக்காவில் நிலையே வேறு.

தற்போது நடத்தப்படும் கருத்து கணிப்பிற்கும், ஆறு மாதங்களுக்கு பிறகு நடத்தப்ப்டும் கருத்து கணிப்பிற்கும் அதிக அளவில் வித்தியாசம் இருக்கவும் வாய்ப்புண்டு.  இதற்கு பல காரணங்கள் உள்ளன.  ஒரு கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருப்பது போன்ற ஒரு கருத்து கணிப்பு மாயையை தோற்று வித்து, அதையே பல தடவை, டி.வி மற்றும் மீடியாக்களில் பரவ் விட்டால், அது கூட மக்கள் கருத்துக்களை பாதிக்க வாய்ப்புண்டு.  

இந்த கருத்து கணிப்பால், ஓரளவு, மக்கள் மனத்தை பாதிக்கும் பிரச்சனைகளை கணக்கிட்டு,  அதை களைய முயற்சி செய்யலாம்.   இந்த சர்வேக்களை முழுவதுமாக நம்பி கெட்டவர்கள்தான் அரசியலில் அதிகம்.  

ஞாயிறு, 6 ஜூன், 2010

கோலங்கள் புகழ் 'தோழர் பாலகிருஷ்ணனுடன்' ஒரு சுவையான பேட்டி

வெற்றிகுரல் இதழ் 16
சன் டி.வியில் அண்மைக்காலம் வரை, 'கோலங்கள்' மெகா தொடர் ஒளிபரப்பாகி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.  அந்த கோலங்கள் தொடரில், 'தோழர் பாலகிருஷ்ணன்' என்கிற க்தாபாத்திரத்தில் நண்பர் ஆதவன் என்கிற ஆவுடையப்பன் அழகு தமிழில் பேசி அசத்தியதை எவரும் மறந்திக்க முடியாது.  சன் டிவி தொடரில், அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற க்தாபாத்திரமும் 'தோழர் பாலகிருஷ்ணனே'.

ஆதவன் அவர்கள்,  தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு தோழர் பாலகிருஷ்ணனாகவே வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 
அவரது சுவையானதும், காரசாரமானதுமான பேட்டியை, கீழ்கண்ட ஃபிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்டில், சீராக வரும்.  தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து, mp3  பிளேயரில், கேட்கவும்.

இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

புதன், 12 மே, 2010

பட்ஜெட் கூட்டத்தொடரின் தமிழ்நாட்டு முதன்மை எம்.பி எஸ்.எஸ். இராமசுப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மக்களவைக்கு நாற்பது  உறுப்பினரிகளை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தேர்தல் முடிந்த பிறகு அடுத்த தேர்த்ல் வரை அவர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள் என்பதை யாரும் கேட்பதில்லை. பாராளுமன்ற இணைய தளத்தில் ஒவ்வொரு உறுப்பினர் பற்றிய தகவல்களை வெளிடுகிறார்கள். 

PRS India ;என்கிற ஒரு அமைப்பு அந்த விவரங்களை தொகுத்து வெளியிருகிறது.  அந்த அடிப்படையில், 2010 மார்ச் வரையிலான விவரங்களீன் அடிப்படையில், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை, அகில் இந்திய அளவில் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்றல், கேள்வி கேட்பதில் முதலாவதாக வந்த திரு ஹன்ஸ்ராஜ் என்கிற மாகராஷ்டிர எம்.பிக்கும், தமிழக அளவில் முதலாவதாக வந்த திருநெல்வேலி எம்.பி திரு எஸ். எஸ். இராமசுப்புவிற்கும் கடந்த மே 1ம் தேதி, விருது அளித்து கவுரவித்தது.  (அந்த செய்தி)


PRS India அமைப்பு தற்போது, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளது.  பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 22 முதல் மே 7 வரை நடந்த 32 அம்ர்வுகளில் எப்படி உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் என்கிற அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.  


சிறந்த முறையில் பங்கேற்ற எம்.பிக்கள் :)

திருநெல்வேலி எம்.பி. திரு இராமசுப்பு, இந்த தொடரில்,  109 கேள்விகள் கேட்டும், 11  முறை விவாதங்களீல் பங்கேற்றும் தமிழ்நாட்டிலேயே, முதலாவதாக வந்துள்ளார்.  இது தவிர அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று 100 சதவிகித வருகையையும் பதிவு செய்துள்ளார்.  அவரது பணிகளுக்கு, வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தமிழ் நாட்டு மக்கள் சார்பில் தெரிவிக்கிறோம்.

மேலும் தென்காசி உறுப்பினர் திரு லிங்கம் அவர்களும், சென்னை உறுப்பினர் திரு டி. கே. எஸ். இளங்கோவனும், 100 சதவிகித வருகையை ப்திவு செய்துள்ளார்கள்.

கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. திரு சுகவனமும், தேனி தொகுதி எம்.பி. திரு ஆருணும் கேள்வி கேட்பதில் திரு இராமசுப்புவிற்கு அடுத்த அளவில் தமிழ்நாட்டில் வந்துள்ளார்கள்.

கேள்வி கேட்காத எம்.பிக்கள் :(

கள்ளகுறிச்சி எம்.பி. திரு ஆதிசங்கர் இந்த பட்ஜெட் தொடரில் எந்த கேள்வியும் கேட்கவில்லை, விவாதங்களிலும் பங்கேற்கவில்லை.

சிதம்பரம் தொகுதி எம்.பி. திரு திருமாவளவன் 14 சதவிகித வருகையை பதிவு செய்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.

திரு தனபால் (திருவண்ணாமலை(, திரு ஓ.எஸ். மணியன் (மயிலாடுதுறை), திரு வேணுகோபால் (திருவள்ளூர்) ஆகிய மூன்று எம்.பிக்களும் த்லா இரண்டு முறை கேள்விகள் அல்லது விவாதங்களில் பங்கேற்றுள்ளார்கள்.

அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இந்தியாவிலேயே முதன் முறையாக ஐ.எஸ்.ஒ தர சான்றிதழ் பெற்ற லஞ்சமற்ற ஆர்.டி.ஓ ஆபீஸ்

K V Karthalingan, Regional Transport Officerவெற்றிகுரல் இதழ் 16

போக்குவரத்து துறையில் ஆர்.டி.ஓ ( Regional Transport officer) ஆபீஸ் என்றாலே,பொதுவாக மக்களுக்கு ஞாபகம் வருவது லஞ்சம், அலட்சியம்,தரகர்கள் மற்றும் தாமதம் தான். அண்மையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பல ஆர்.டி.ஓ ஆபீஸ்களில் அதிகாரிகள் மேஜையிலிருந்து கட்டு கட்டாக பணத்தை கைப்ப்ற்றியதெல்லாம் பத்திரிகைகளீல் வந்தன. ஒரு எல்.எல்.ஆர் வாங்கவேண்டுமென்றால் கூட லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு மனநிலை. இது ஒரு புறமிருக்க படித்த மக்களே, தங்கள் சுய நலத்திற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சுலபமாக சாதித்துகொண்டு, அரசு அதிகாரிகளின் மீது லஞ்ச பழி சுமத்துவ்தாகவும் ஒரு வாதம் உண்டு.

எனது டிரைவிங் லைசென்ஸை புதுப்பிப்பதற்கும் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு 15 ஆண்டுகளூக்கு பிறகு ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கவும் இன்று சென்னை கே.கே. நகரிலுள்ள ஆர்.டி.ஓ ஆபீசிற்கு போகவேண்டியிருந்தது. எந்த இடை தரகர்களும் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் எனது காரியம் நடக்குமா என்பதை சோதனை செய்வதற்காக, நானே நேரில் சென்றேன்.
people waiting in the waiting hall for their turn
சென்னை கே.கே. நகர் ஆர்.டி. ஓ ஆபீஸ் ஐ.எஸ். ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. நான் அங்கே போனவுடன் ஆச்சரியப்பட்டேன். எப்போதுமே, அரசு அலுவலகத்தை அசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று தங்கள் பாரம்பரியத்தை கட்டி காக்கும், அரசு ஊழியர்களிடையே ஒரு மாற்றம். ஒரு ஐ.டி. கம்பெனிக்குள் நுழைந்த உணர்வு. காற்றோட்டமான விசாலமான ஒரு வெயிட்டிங் ஹால். பல கம்யூட்டர் இணைப்புகள். எல்.எல்.ஆர் லைசென்ஸ் வாங்குவதற்கு கூட கம்யூட்டர் மூலம் டெஸ்ட் வைக்கிறார்கள். எல்காட் மற்றும் , என்.ஐ.சி நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவி அளிக்கிறார்கள்.

சரியாக காலை 9.30 மணிக்கு மக்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் வந்து விட்டனர். அவரவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். சுமார் 3 மணி நேரத்தில், நான் வந்த வெலைகள் முடிந்து விட்டன. அரசு குறிப்பிட்ட தொகை மட்டும் தான் கட்டினேன். ரசீதும் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் கூட லஞசம் கொடுக்காமல் என்னால், என் செயல்களை முடித்து கொண்டேன்.

Mr Karthalingan in discussion with the customers in the waiting hall
இந்த அமைதியான புரட்சிக்கு வித்திட்ட அந்த அலுவலகத்தின் ஆர்.டி.ஓ கே.வி. கார்த்தலிங்கன் (49) அவர்களும், அந்த வெயிட்டிங் ஹாலில் ஒரு டேபிளில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார். பிறகு என்னை அவ்ரிடம் அறிமுகப்ப்டுத்திக் கொண்டு, அவரை பாராட்டிவிட்டு, ஒரு பேட்டியும் எடுத்தேன்.

அரசு ஊழியர்கள் மக்கள் தான் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானர்கள் என்ற எண்ணத்துடன் லஞ்சம் பெறாமல் வேலை செய்தால், மக்கள் வாழ்த்துவார்கள். மக்களும், தங்கள் சுயநலத்திற்காக, அரசு ஊழியர்களுக்கு இடை தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்து விட்டு, பிறகு லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடுவதில் பயனில்லை.

திரு கார்த்தலிங்கனின் பேட்டியை கீழ்காணும் 'பிளாஷ் பிளேயரில்' 'பிளே' பட்டனை கிளிக் செய்து கேட்கவும். ( 8 நிமிடங்கள்). இந்த ஆடியோவை பிராட்பேண்டில் சீராக கேட்க முடியும். தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து உங்கள் டெஸ்க் டாப்பில் mp3 ஃபைலாக டவுன்லோடு செய்து கேட்கவும். ( 7 mb)






இந்த ஆடியோவை, கீழ்கண்ட் தளங்க்ளிலும் கேட்கலாம்.



திரு கார்த்தலிங்கனை kvkarthalingan (at) gmail.com என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். அவரது அலுவலக போன் நம்பர் 24898240 அல்லது 24894466


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

அதிமுகவால் நீக்கப்பட்ட எஸ். வி. சேகர் எம். பி. ஆகிறார் - ஒரு பரபரப்பு பேட்டி

S V Sekar honouring Kalignar Karunanidhi
வெற்றிகுரல் 15

கடந்த வாரம், மயிலாப்பூர் எம்.எல்.ஏ எஸ். வி. சேகர், அண்ணா திமுக வால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆரம்ப காலங்களீல், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறியவ்ராக இருந்த எஸ். வி. சேகர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அவரது கட்சியால் ஒரம் கட்டப்படு வந்தார். அண்ணா திமுக வின் மற்ற எம்.எல். ஏக்கள் கூட அவருடன் பேசுவதில்லை.

இந்த சூழ்நிலையில் தான், சேகர் கட்சியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியேற்றப்பட காரணம் என்ன, அவர் எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்வாரா, வேறு கட்சிகளில் சேருவாரா என்று அரசியல் வட்டாரங்களில் தற்போது விவாதிகப்படுகிறது.

இதன் பின்னணியில், நான் எஸ். வி. சேகருடன் இன்று தொலைபேசியில் வெற்றிகுரலுக்காக ஒரு பேட்டி கண்டேன். இந்த பேட்டியில், மெற்கண்ட அனைத்து கேள்விகளூக்கும், மனம் திறந்து பேட்டி அளித்தார். இது தவிரவும், இடைதேர்தலில், அண்ணா திமுக எடுத்த 'தேர்தல் புறக்கணிப்பு' கொள்கை பற்றியும் அவர் கருத்துகளை கூறினார்.

மேலும், அவருக்கு பராளுமன்றத்தில், ஒரு எம்.பி. ஆகக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக பேட்டி அளித்தார்.

இந்த பரபரப்பான பேட்டியை கீழ்கண்ட் பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும் (18 நிமிடங்கள்0 . இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் mp3 ஃபைலாக சேமித்து (18 mb) கேட்கவும்.
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்

புதன், 15 ஜூலை, 2009

சைபர் குற்றங்கள், பிரவுசிங் செண்டர் வழியாக நடக்கின்றனவா? - ஒரு சூடான விவாதம்

தமிழ்நாட்டில், பிரவுசிங் செண்டர் வைப்பதற்கு போலீஸ் அனுமதி தேவை. அத்துடன், பிரவுசிங் செண்டரில், அங்கு உப்யோகிப்பாளர்களின் பெயர், விலாசம், போன் நம்பர், கையெழுத்து உள்ள ரிஜிஸ்டர் இருக்க வேண்டும். இண்டர்நெட்டை உபயோகிக்குமுன், வாடிக்கையாளர்கள், அவர்களது போட்டோ அடையாள அட்டையை கண்பிக்க வேண்டும். மேலும், அந்த பிரவுசிங் செண்டரில், ஒரு CCTV யும் வைத்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும்.

அண்மையில், சென்னையில், தமிழ்க முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் இமெயில் வந்தது. அதனை புலன் விஜாரணை செய்த போலீசார், அந்த இமெயில் ஒரு பிரவுசிங் செண்டரிலிருந்து வந்ததாக கண்டுபிடித்தனர். உடனடியாக பல பிரவுசிங் செண்டர்களை போலீஸ் அதிரடி சோதனையிட்டு , விதிமுறைகளை பின்பற்றாத மையங்களை மூடிவிட்டனr. இது தமிழ்நாடிடில் கடந்த சில தினங்களாக பரபர்ப்பாகிவிட்டது.

பிரவுசிங் செண்டர் உரிமையாளர்கள், தங்கள் மீது போலீஸ் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் கூறின்ர். மேலும், போலீஸ், இந்த மையங்கள், லைசென்சை புதுப்பிக்க சமர்ப்பித்த விண்ணப்பங்களையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்காமல் வீணாக இழுத்தடிப்பதாகவும் குற்றச்சட்டு எழுந்துள்ளது.

இந்த பின்னணீயில், ஸீ-தமிழ் (Zee Tamil) சேனல், இன்று காலை 'முதல் குரல்' நிகழ்ச்சியில், ஒரு பேட்டியை ஒளிபரப்பியது. அதில், என்னையும், இந்திய சைபர் சொசைட்டியின் (Cyber Society of India) நிறுவனர்களில் ஒருவர் என்கிற முறையில் அழைத்து இருந்தார்கள்.

இந்த பேட்டியை 'பிளே' பட்டனை அழுத்தி, நீங்களூம் கேளுங்களேன். இந்த வீடியோ ஒளிப்பதிவு, பிராட்பேண்டில் சீராக வரும். சீராக வரவில்லை என்றால், இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து கேட்கவும்.



இந்த் வீடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...