This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

திங்கள், 25 ஜூலை, 2011

மாணவர்களுக்கான கல்வி கடன் பற்றிய ஒரு நேர்முகம்

கட்ந்த ஜூலை (2011) 22ம் தேதி, சென்னை அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப். எம் 101.4 அலைவரிசையில்ம் கல்வி கடன் பற்றிய ஒரு நேரடி ஒலிபரப்பிற்கு அழைத்து இருந்தார்கள்.
எஃப். எம். ஸ்டூடியோவில் இடமிருந்து வலம்:
ஆர். ஜே மகி, பிரைம்பாயிண்ட் சீனிவாசன்
நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராமசாமி சுதர்சன்
இந்தியா விஷன் அமைப்பின் வழியாக நாங்கள் ‘'Education Loan Task Force' என்கிற அமைப்பு வழியாக பல மாணவர்களூக்கு கல்வி கடன் பற்றிய ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் வழங்கி வருகிறோம்.  அதிக மார்க் வங்கிய ஏழை மாணவர்களை வங்கிகள் அலட்சியப்ப்டுத்தும்போது, நாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி வரை எடுத்துச் சென்று தகுந்த நீதி கீடைக்க பாடுபட்டுள்ளோம்.
கல்வி கடன் பற்றிய அனைத்து விவரங்களும் www.eltf.co.cc என்கிற இணைய தளத்தில் கொடுத்துள்ளோம்.  இந்த பதிவை படிக்கும் வாசகர்கள், இந்தியாவின் எந்த பகுதியிலும், அதிக மார்க் வாங்கிய ஏழை மாணவர்கள் வங்கிகளால், பாதிக்கப்பட்டால், எங்களுக்கு action2020eltf@gmail.com  என்கிற இமெயிலுக்கு அந்த மாணவர்களைவிட்டு முழு விவரங்களையும் எழுத சொல்லுங்கள்.  கூடிய் வரையில், 24 மணி நேரத்தில், தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குகிறோம்.
என்னுடைய நேரடி ஒலிபரப்பை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில், ‘பிளே’ பட்டனை அழுத்தி கேட்கவும்.  (24 நிமிடங்கள்).  இந்த ஒலிபரப்பில், கல்வி கடன் சம்பந்தமாக எழும் பல வினாக்களுக்கு விடையளித்துள்ளேன். இந்த ஒலிபரப்பை எம்.பி.3 ஆக ஆடியோவில் டவுன்லோடு செய்ய வேண்டுமானால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமிக்கவும்.

இந்த ஒலிபரப்பை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/view/144115188075857546

ஞாயிறு, 15 மே, 2011

தமிழகம் மீண்டது - ‘ஜெயா சுனாமியில்’ சுருண்ட திமுக தோல்வியின் பின்னணி

கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி நட்ந்த சட்டமன்ற் தேர்தலின் முடிவுகள், நேற்று (மே 13) வெளிவந்தன.  தேர்தலுக்கு முன்பும், பின்பும் நடந்த பல கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, அதிமுக அணிக்கு அமோக வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். அதிமுக அணி 234 தொகுதிகளில் 203 தொகுதிகளை (86 சதவிகித இடங்களை) கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  
செல்வி ஜெயலலிதா
கடந்த 2006ம் ஆண்டில் 45 சதவிகித வாக்குகள் பெற்ற திமுக அணி, தற்போது 37 சதவிகிதம் பெற்று 31 இடங்களைப் பெற்றுள்ளது.  அதே சமயம் அந்த தேர்தலில் 40 சதவிகிதம் பெற்ற அதிமுக அணி, தற்போது 52 சதவிகிதம் பெற்று 203 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.  
இந்த தேர்தலில், திமுகவிற்கு ஒரு எதிர்ப்பு அலை சுனாமியாக உருவாகி, அதுவே, அதிமுகவிற்கு ஆதரவாக மாறி விட்டது. மக்கள் அளித்த வாக்குகள், யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து போடப்பட்டதாக உள்ளது.  அதனால் தான், திமுகவின் அனைத்து அமைச்சர்களும் (ஒரு சிலர் தவிர) தோல்வியுற்றனர்.  அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படும் பேராசிரியர் அனபழகனையும் மக்கள் நிராகரித்தது, திமுகவினரை சிந்திக்கவைக்க வேண்டும். 
வோட்டு பதிவுக்கு முன்பும், பின்பும், நான் பல அரசியல் அடிமட்ட தலைவர்களையும்,  வாக்காளர்களையும் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துகளை கணித்தேன்.  அதனால் தான், வாக்கு பதிவு முடிந்த 5வது நாளே, ஒரு பதிவு எழுதினேன்.  அந்த பதிவில் முடிவுரையாக நான் குறிப்பிட்ட்தாவது:
”அனைத்து விவரங்களையும், கூட்டி, கழித்து பார்த்தால், எனது கணிப்பில், அதிமுக முழு மெஜாரிடி பெறும் என்றும், அதிமுக கூட்டணியினர் 160 முதல் 180 இடம் வரை கைப்பற்றுவார்கள் என்றும் எண்ணுகிறேன்.  திமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியுறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன். ” 
பல ஊடகங்கள், போஸ்ட் போல் சர்வே என்கிற பெயரில், திமுக வெற்றி பெறும் என்றும், தொங்கு சட்டசமை அமையும் என்றும் அள்ளி விட்டன.  திமுகவோ, அதிக வாக்கு பதிவு (78%), த்ங்கள் சாதனைகளி பாராட்டி, மக்கள் அளிக்கும் ஆதரவு என்றனர்.  வேடிக்கை என்னவென்றால், திமுக தலைவர்கள், இப்படி கூறினாலும், கீழ்மட்ட தலைவர்கள், இதை நம்பவில்லை.  ஏதோ கெட்டது நட்க்க இருக்கிறது என்று மட்டும் உள்ளூர நம்பினார்கள்.  அது, இந்த அளவு, சுனாமி யாக திமுகவை வேரறுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  தற்போது, திமுக, கலைஞர் கண் முன்பு, எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்து பரிதாபமாக நிற்கிறது.  
திமுக பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டது.  பல பெரும் தலைவர்களை உருவாக்கிய இயக்கம்.  பல் சோதனைகளை தாங்கிய ஒரு இயக்கம், இன்று ஒரு பரிதாப நிலைக்கு ஆளானது எப்படி என்பதை தொண்டர்கள், உணர்ச்சி வயப்படாமல் சிந்திக்க வேண்டும்.  என்னுடைய ஒரு சில முக்கியமான் கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.
க்லைஞர் கருணாநிதி
1.   செயலிழந்த நிர்வாகம்
கலைஞர் எப்போதுமே ஒரு சிறந்த நிர்வாகி என்று பெயர் பெற்றவர்.  1996-2001 ஆட்சியில், ஒரு சிற்ந்த நிர்வாகத்தை அபோது அளித்தார்.  சாதனைகளுக்காக அப்போது, நானே 2001ல் அவருக்கு வாக்களித்தேன். ஆனல் மக்கள் மாற்றம் வேன்டி,  2001ல் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்தனர்.   அப்படிபட்ட ஒரு நிர்வாகி, வயது காரணமாகவும், குடும்பத்தினரின் தலையீட்டாலும், 2006 முதலான ஆட்சியில், நிரிவாகத்தில் கவனம் செலுத்தவில்லை.

இதனால், விலைவாசி உயர்ந்தது.  ஏழைகள் அவதிப்பட்டனர்.  பல இடங்களில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிகப்படவில்லை.  கொலை, கொள்லை , திருட்டு அதிக அளவில், மக்களை அவதிக்கு உள்ளாக்கியது.  கட்சியினரின் த்லையீட்டால், காவல் துறையும் செயல் இழந்தது.  கட்ட பஞ்சாயத்துகள் என்கிற பெயரில், அடவடி நடந்தது. சென்னையில், மாநகர் கவுன்சிலர்கள், இன்னோவா காரில், வலம் வந்து தண்டல் வசூலித்தனர்.

தமிழக அரசின் நிதிநிலையும் சீரழிந்தது.  சரியான் நிதி நிர்வாகம் இல்லாததால், தமிழக அரசு ஒரு லட்சம் கோடி கடன் சுமைக்கு த்ள்ளப்பட்டுள்ளது.  
கடந்த ஐந்து ஆண்டுகளும், அதிக அளவு தனக்கு பாரட்டு விழா நடத்தச் சொல்லி, அதிலேயே கலந்து கொண்டார்.  நிர்வாகத்தில் செலவிட்ட நேரத்தை விட பாராட்டு விழாக்கள், மானாட மயிலாட நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்பட விழாக்கள், வசனம் எழுதுவது போன்ற பணிகளில் தான், அதிக நேரம் கலைஞர் செலவழித்தார். பல முறை மீடியாக்கள் எடுத்துக்காட்டியும், அதை அவர் போருட்படுத்தவில்லை.  மாறாக, மீடியாக்களை திட்டினார். இந்த நிலையை மக்கள் அமைதியாக பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். 
2.  மின்வெட்டு
கலைஞரின் இந்த ஆட்சியில், எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு மின்வெட்டு அம்ல படுத்தப்பட்டது.  ‘மின் வெட்டு துறை அமைச்சர்’ என்று மீடியாக்கள் கிண்டல் அடிக்கும் அளவுக்கு இருந்தது. அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமியோ, ஐந்து ஆண்டுகளும் ஒய்வில் இருந்தார்.   மின்வெட்டால், உற்பத்தி பாதிக்க்பபட்டது.  பலர் வேலை இழந்தார்கள்.  கலைஞ்ருக்கும், இதை கவனிக்க நேரம் இல்லை. பாவம், அவரது நண்பர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்று கூறிகொண்ட ‘காக்காய்’ கூட்டம், கலைஞரை, பாராட்டு விழாக்களில் குளிப்பாட்டி, சினிமா வசனங்களை எழுத வைத்து, நிர்வாகத்தை முடக்கி விட்டார்கள்.
3.  இமாலய் ஊழல்
இந்திய வரலாற்றிலேயே, முதன்முறையாக ஒரு இமாலய 2ஜி ஊழலை நடத்தி, திமுகவினர் தமிழக மக்களை உலகத்தின் முன் தலை குனிய வைத்தனர்.  ஆ. ராசா கைது செய்யப்ப்டட போது கூட ‘தலித்துகளூக்கு எதிரான ஆரிய சூழ்ச்சி’ என்று சப்பை கட்டு கட்டி, ‘எவரும் எங்களை அசைக்க முடியாது’ என்று இருந்ததை மக்கள் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார்கள்.  கிராம மக்களுக்கு 2ஜி ஊழல் ஒன்றும் புரியாது என்று ஆணவத்துடன் திமுகவினர் அலைந்ததையும், மக்கள் நமட்டு சிரிப்புடன் அமைதியாக பார்த்து கொண்டு இருந்ததை திமுகவினர் கவனிக்க தவறி விட்டனர்.  இதுதான் ஒரு பூகம்பமாக, தெர்தல் நாளன்று வெடித்தது.  ”சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது” என்று வழக்கு உண்டு.  கலைஞர் வழங்கிய இலவச டிவி வழியாக,  அனைத்து ஊழல்களூம் மக்களிடம் சென்றடைந்தன.

கலஞர் இலவச கலர் டிவி கொடுத்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், தமிழகம் முழுவதும், மக்கள் கேபிளுக்காக அவர்கள் குடும்பத்திற்கு தான் பணம் செலுத்தினர்.  கலர் டிவி மூலமாக அவர்கள் குடும்பம் ஆயிரக்கணக்கான கோடிகள் பயன் பெற்றன.  இந்த ஊழலையும், மக்கள் கவனிக்க தவறவில்லை.
கருணாநிதி குடும்பம் - நன்றி இந்தியாடுடே
4. குடும்பத்தினரின் தலையீடு

கலைஞரின் முந்தைய ஆட்சி காலங்களில், ஸ்டாலினைத்தவிர, குடும்பத்தினர் யரும், நிர்வாகத்தில் தலையிட்டதில்லை.  ஸ்டாலினும், 40 ஆண்டுகளூக்கு மேலாக திமுகவில், வளர்ந்து வருவதால், அனைவரும் அவரை, கட்சி தொண்டராகத்தினராகத்தான் பார்க்கிறார்கள்.  2006க்கு பிறகு, மூன்றாவது தலைமுறை குடும்பத்தினரும், நிர்வாகத்தில் தலையிட்டதில் நிர்வாகம் சீரழிந்தது.  அது தவர, ஒவ்வொருவரும் ஒரு ‘அதிகார மையங்களாக’ செயல்படத்துவங்கினர்.  கோவையில் நடந்த செம்மொழி மாநட்டில், குடும்பத்தினர் அனைவருக்கும், மேடையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதை தமிழக மக்கள் நேரடியாகவே, டிவிக்களீல் பார்த்தனர்.

கலைஞர் குடும்பத்தினர்,  தங்களுக்கு வேண்டிய சொத்துக்களை, பினாமி பெயரில், பல இடங்களில் வாங்கி குவித்ததாக மீடியாக்களில் செய்திகள் அடிபட்டன.  அதையும் கலைஞர் அமைதியாக ரசித்துக் கொண்டு இருந்தார். 
இது தவிர, இளைய தலைமுறையினர், ஆணவத்துடன், தங்க்ளை யாரும் என்னவும் செய்யமுடியாது என்கிற நினைப்பில், ஹோட்டல்களில் கலாட்டாவில் ஈடுபட்டது, மீடியாக்களீல் அடிபட்டபோது கூட, கலைஞர், அவர்களை கண்டிக்கவில்லை.  இவைகளையும், மக்கள் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தனர்.

5. அலட்சியம் கலந்த ஆணவம்

திமுக அரசு, மைனாரிட்டி அரசாக இருந்தாலும், ’யாரும் நம்மை அசைக்க முடியாது’ என்கிற ஆணவப்போக்கை கலைஞர் இந்த முறை அதிகம் கொண்டிருந்தார்.  இலங்கை, காவேரி, முல்லை பெரியார், விலைவாசி போன்ற பல பிரச்சனைகளுக்கு மத்திய அரசுக்கு தந்தி அடித்து, கடிதம எழுதிய, கலைஞர் தன் குடும்பத்தினருக்கு நல்ல பணம் கொழிக்கும் மந்திரி சபையில் இடம் வேண்டும் என்கிற போது, தள்ளு வண்டியில் டில்லி சென்று, போராடியதையும் மக்கள் டிவி மூலம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார்கள்.

கோடிக்கணக்கான இந்து மக்கள் வழிபடும் இராமர் பாலத்தையும், “இராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்’ என்கிற போதும், கலைனரின் ஆணவம் வெளிப்பட்டது. மூசுசுக்கு முன்னூறு முறை ‘நான் பத்திரிகையாளன்’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே,  கலைஞரின் தவறுகளை சுட்டிகாட்டிய பத்திரிகைகளை மிரட்டி பணிய வைத்ததையும், மக்கள் அமைதியாகத்தான் பார்த்துகொண்டு இருந்தார்கள்.தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை சிறையில் அடைத்தார்.

2ஜி விவகாரம் வெளியில் வந்தும், தமிழகத்தில், தேர்தல் அறிவித்தபிறகும் கூட  ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள்.  ஏதோ 2ஜி ஊழல் ஒன்றுமே இல்லாத மாதிரி நடித்தார்கள்.  இது போதாதென்று,  நீரா ராடியா டேப்பிலும், 2ஜி ஊழலிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழியையும் தன்னுடம் பிரச்சாரம் செய்ய கலைஞர் அழைத்துச் சென்றார்.  கனிமொழியையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார்.  இதெல்லாம், மக்களை ‘முட்டாள்கள்’ என்று நினைத்தும், நாலு இலவசங்களை அறிவித்தாலும், 500 ரூபாய் பணம் கொடுத்தாலும், மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற ஆணவத்தின் அடிப்படையில் உருவானதே.

இந்த நாடகங்களயும் அமைதியாக வடிவேலு காமெடி போல மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

6. தேர்தல் பிரச்சாரம்


தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக கூட்டணி தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் தோன்றி தாங்கள் ஒன்றாக இருப்பது போல நடித்தார்கள்.  ஆனால், கூட்டணி கட்சிகளிடையேயும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் உட்குத்து நடந்தது மீடியாக்களில் வந்தன. கலைஞர் எப்போதுமே, ஜாதி அரசியல் செய்பவர்.  இந்த முறை ப்ல ஜாதி கட்சிகளை இணைத்தும், ஜாதி கட்சிகளும் சுருண்டன.

எப்போதுமே, திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளர்கள் இருப்பார்கள்.  கருத்துகளை தெளிவாக பேசுவார்கள்.  ஆனால் த்ற்போது, பரிதாபமாக, வடிவேலுவும், குஷ்புவும் நடசத்திர பேச்சாளர்களாக வலம் வந்தனர்.  இருவருமே, தங்களின் தரக்குறைவான பேச்சினால், மக்களை முகம் சுளிக்க வைத்தனர்.  ஆனால், அதிமுக அணியில், தலைவர்கள் அதிக அளவில் ஒரே மேடையில், தோன்றவில்லையென்றாலும், அடிமட்ட தொண்டர்கள் மத்தியில், திமுக எதிர்ப்பினால், ஒன்று பட்டு பணியாற்றினர்.  இதையும் மக்கள் அமைதியாக எந்த சலமுமின்றி கவனித்து வந்தனர்.

7. தேர்தல் முடிவுகளும், திமுகவின் நிலைப்பாடும்


தேர்தல் நாளான ஏப்ரல் 13ம் தேதியன்று, மக்கள் காலை 7.30 மணிமுதல் திரண்டு வந்து வாக்கு அளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  பல இளைஞ்ரகள், வாக்கு சாவடிகளை தேடித்தேடி வாக்கு அளித்தனர். வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பெண்கள் வாக்களித்தனர்.  தேர்தல் கமிஷனின் கெடுபிடியால், சிறந்த முறையில் தேர்தல் நடைபெற்றது.  முறைகேடுகள் இல்லாத ஒழுங்கான தேர்தலாக இருந்தது.  திமுகவோ, இந்த எழுச்சி, தங்கள் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி என்று இறுமாப்புடன் இருந்தனர்.  சில ஊடகங்களும், திமுக ஆட்சி அமைக்க போகிறது என்று கணித்தனர். வெற்றி படிகளில், நாம் மட்டும் அதிமுக 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும் என்று பதிவிட்டிருந்தோம்.

வோட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற்றவரை, ஒரு மாத காலத்தில், மக்களும், தங்கள் கடமை முடிந்த எண்ணத்துடன், அரசியல் கட்சிகளையும், மீடியாக்களையும் குழ்ப்பி விட்டனர்.  தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல்,  திமுகவிற்காகவும் மாற்றம் வேண்டியும் ஒரு அலை உருவாகி வந்ததை ஏன் திமுகவும், மீடியாக்களும் கவனிக்க தவறி விட்ட்ன என்பதுதான் எனக்கும் புரியவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், நாகரீகம் கருதி, அனைத்து கட்சிகளும், மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாக அறிக்கை வெளியிடுவார்கள்.  இரண்டு மாநிலங்களில் ஆட்சியை இழந்த கம்யூனிஸ்டுகளும், தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாகவும், தோல்வி பற்றி ஆராய இருப்பதாகவும் அறிக்கை விட்டனர்.  தமிழ்நாட்டில், தங்கள் தோல்வியையும், காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றது. அதுதான் அரசியல் நாகரீகம்.  மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.

ஆனால், கலைஞரோ, “மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள்.  வாழ்த்துக்கள்’ என்று கிண்டல் அடித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு அழகு அல்ல.  முந்தைய தேர்த்ல்களில், தோற்ற சம்யங்களில், மக்களை “சோற்றால் அடித்த பிண்டங்கள்” என்றும்,. “நன்றி கெட்ட ஜன்மங்கள்’ என்றும் திட்டுவார்.  இந்த முறை நல்ல வேளை திட்டவில்லை.

தேர்தல் முடிவு பற்றி தொலைகாட்சிகளில் பேட்டி அளிக்க்க்கூட நல்ல தலைவர்கள் இல்லை.  குஷ்பு தான் பேட்டி அளித்தார்.  “மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து தவறு செய்து விட்டார்கள்’ என்று மக்களை குறை கூறினார்.  திமுக வை பல முறை அரியணை ஏற்றிய மக்கள், ஏன் இந்த முறை விரட்டி அடித்தார்கள் என்று அமைதியாக ஆராயாமலும், மக்கள் தீர்ப்பை ஏற்காமலும், மக்களை குறை கூறுவது அரசியல் முதிர்ச்சி ஆகாது.  இதையும் மக்கள் அமைதியாக பார்த்துகொண்டு இருக்க்றார்கள்.

8.  படிப்பினைகள்


தமிழக மக்கள், இலவசங்களுக்கு மயங்கி ஒட்டு போடுவார்கள் என்றும், பணம் கொடுத்தால், வோட்டு கிடைக்கும் என்றும் ஒரு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடந்தது, தமிழ்நாட்டு மக்களை தலை குனிய வைத்தது.  அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த முறை தமிழக மக்கள், “எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது” என்று உலகத்திற்கு உணர்த்தி, அமைதி புரட்சி செய்துள்ளார்கள்.  வரும் காலங்களில், மக்களிடம் பணம் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று எந்த கட்சிகளும் நினைக்க மாட்டார்கள்.

இனிவரும் நாட்களில், மக்கள் குஜராத், பீகார் போன்று, வளர்ச்சி திட்டங்களுக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள்.  முத்ல்வராக பொறுப்பு ஏற்கும் செல்வி ஜெயலலிதா அவர்கள் திறமையான நிர்வாகி.  முந்தைய காலங்களில் நடந்த தவறுகளால், ஆட்சியை இழந்தவர்.  கலைஞரை சுற்றி பல் ஜால்ரா கூட்ட்ங்கள் அவரை தவறாக வழி நடத்தியது போல், ஜெயலலிதாவை சுற்றியும், ஜால்ரா கூட்டங்கள் அவரிடம் தவறான தகவல்களை கொடுத்து, அவரது புகழை வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

அப்துல் கலாம், நரேந்திர மோடி போன்றவர்கள், தங்களுக்கு ஒரு குடும்பம் இல்லாததால், 24 மணி நேரமும், நாட்டை பற்றியே சிந்தனை செய்கிறார்கள். நாடே அவர்கள் குடும்பம் தான்.  அதேபோல், ஜெயலலிதா அவர்க்ளுக்கும்,  எவரும் தன்னுடைய குடும்பம் என்று கூறிக்கொண்டு தலையீடு செய்ய வாய்ப்பில்லை.  இதனால், அவர்கள், தன்னுடைய ஆட்சி காலத்தில், அப்துல் கலாம் போன்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, தமிழகத்தை இந்தியாவில், ஒரு முன்னணி மாநிலமாக ஆக்குவார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுகவின்
தேர்தல் அறிக்கையிலும் இதைத்தான் விளக்கியுள்ளார்கள். இந்த தேர்தல் அறிக்கையை பாராட்டி வெற்றி படிகளில் முன்பே பதிவு செய்திருந்தோம். இதை செய்தால், 2020ம் ஆண்டில், இந்தியா ஒரு வளர்ந்த நாடாக ஆகும் போதும், ஜெயலலிதா அவர்கள் தான் தமிழக முத்ல்வராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
புதிய முத்ல்வராக பொறுப்பேற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கு வெற்றி படிகள் சார்பில் வாழ்த்துகள்.  

திங்கள், 18 ஏப்ரல், 2011

குழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கருணாநிதியா? ஜெயலலிதாவா? ஒரு சூடான அல்சல்

கட்ந்த ஏப்ரல் 13ம் தேதி (2011)  தமிழக பேரவை தேர்தல் அமைதியாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது.  .  தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால், வாக்காளரகளுக்கு பணம் கொடுப்பது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.  தேர்தல் தினத்தன்று, பூத் ஸிலிப்களையும் தேர்தல் ஆணையமே வழங்கியது, கள்ள் ஒட்டுகளை தவிர்த்தது.  பாதுகாப்புகளை அதிகரித்ததால், வாக்காளர்கள் பெருமளவில் வந்து அச்சமின்றி  வாக்களித்தார்கள்.  பல மாவட்டங்களில், 80 சதவிகிதத்ற்கு மேல், வாக்கு பதிவு ஆகியது.  வழக்கமாக தேர்தல் நாளன்று ஓய்வு எடுக்கும் நடுத்தர வகுப்பு இளைஞர்களும் முதியவர்களும் கூட ஆர்வமுடன் காலை 7.30 மணிக்கே வந்து ஒரு மணீ நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று வாக்களித்தது ஒரு மவுன் புரட்சியா என்பது மே 13ம் தேதி தான் தெரியவரும். 

இந்த தேர்தலின் முதல் வெற்றி, தேர்தல் ஆணைத்திற்கும், அதில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தான்.   
யாருக்கு வெற்றி?
 தமிழ்நாட்டில் 78 சதவிகித வாக்கு பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில், இந்த அளவு வாக்குபதிவு ஆனது இதுதான் முதல் முறை.  1967ல், 76 சதவிகித வாக்குபதிவு ஆனதுதான், இதுவரை ரிகார்டாக இருந்தது. அந்த தேர்தல், காங்கிரஸை வீழ்த்தி, திமுக முதலில் ஆட்சி அமைக்க உதவியது.  இந்த 78 சதவிகித வாக்கு பதிவால் யாருக்கு லாபம்?  கருணாநிதிக்கா அல்லது ஜெயலலிதாவுக்கா?  நானும் தமிழ்நாட்டின் கடைசி கோடி வரை பல தரப்பினருடன் தொடர்பு கொண்டு பேசினேன்.  பொதுமக்கள், திமுக, அதிமுக அணிக்காக உழைத்த அரசியல் தொண்டர்கள், நடு மட்ட தலைவர்கள் போன்ற பலருடனும் பேசினேன்.  ஊடகங்களில் வந்த செய்திகளையும் வைத்து பார்த்தால்,  நான்கு வகையான முடிவுகளைத்தான் தெரிவிக்கிறார்கள். ஆட்சி அமைக்க 118 சீட்கள் தேவை. 
1.  திமுக அணி மெஜாரிட்டி பெறும் (118க்கு மேல்).   திமுக ஆட்சி அமைக்கும்.
2.  திமுக சுமார் 80 சீட்கள் பெறும்.  அதிமுகவும் அதே அளவு சுமார் 80 பெறும்.    அதிமுக தவிர மற்ற கட்சிகளை அணைத்து, திமுகவே ஆட்சி அமைக்கும்.  அதிமுக அணியிலுள்ள மற்ற கட்சிகள் திமுகவிற்கு தாவும்.  
3.  அதிமுக 80 முதல் 90 சீட்கள் பெறும்.  கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, அதிமுக ஆட்சி அமைக்கும்.
4.  அதிமுக தனிப்பட்ட முழு மெஜாரிட்டி பெறும்.  அத்துடன், அதிமுக அணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும்.  அதிமுக ஆட்சி அமைக்கும்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி, சுமார் 3000 கோடி முதல் 5000 கோடி வரை திமுக செலவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.  முதல்வர் நிற்கும் தொகுதியான திருவாரூரிலும், ஸ்டாலின் நிற்கும் குளத்தூரிலும் அதிக பணம் செலவு செய்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.  

அதிக அளவு பணம் பட்டுவாடா செய்ததாலும், திமுக இலவசங்க்ளை முன்பு கொடுத்திருப்பதாலும், ஆட்சி அமைத்தால், கிரைண்டர் மிக்ஸி லேப்டாப் போன்றவைகளை இலவசமாக கொடுக்க திமுக வாக்குறுதி கொடுத்திருப்பதாலும், திமுக அணியினர் தாஙகள் தான் ஆட்சி அமைப்போம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.  (மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இருந்தாலும், பல திமுக தலைவர்களிடையே, கலக்கமும் உள்ளது.  

தாங்கள்தான் ஆட்சி அமைக்க இருப்பதாக திமுக பலமாக முழங்கி வருவதால், அதிமுகவினரும், ‘உண்மையாக இருக்குமோ’ என்று குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில், திமுக பணத்தை சரியாக பட்டுவாட செய்யவில்லை என்றும், இடையிலேயே அமுக்கி விட்டார்கள் என்றும் திமுக வட்டாரங்களில் விஜாரித்ததில் தெரிகிறது.  சுமார் 200 முதல் 500 வரை பல இடங்களீல் கொடுக்க்பட்டதாகவும் தெரிகிறது. அப்படியே பணம் வாங்கியவர்கள், திமுகவின் அடிப்படை வாக்காளர் தவிர மற்றவர்கள், திமுகவிற்கே வாக்களித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை.  பலர், மனசாட்சிபடி வாக்களித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 

வக்களிக்க பணம் வழங்கியதையே காரணம் காட்டி, அதற்குள்ள அத்தாட்சிகளூடன், தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்து, திமுக வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் சில அமைப்புக்கள் தயாராகி வருகின்றன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

நான் சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரை கிரமங்கள் முதல் நகரங்கள் வரை பல தர்ப்பினருடனும் பேசினேன்.  தமிழ்நாடு முழுவதும், காலை 7.30 மணிமுதல், மக்கள் ஆர்வமுடன் வோட்டு பதிவுக்கு வரிசையில் நின்று இருந்தனர்.  Under Current என்ப்படும் , மக்களிடையே ஒரு அலை இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.  

தமிழ்நாடு முழுவதும், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, திமுகவின் குடும்ப அரசியல், ஊழலில் கருணாநிதியன் குடும்ப பங்கு ஆகியவை மக்கள் மனதில் அதிகம் பாதித்திருப்பதாக தெரிகிறது.  பணம் கொடுத்தும், இலவசங்களை உறுதிமொழி கொடுத்தும், மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து விடச்செயவது ஒரு கடினமான ஒன்று.  பணம் பெற்றவர்களும், திமுகவினர் கொள்ளை அடித்ததை தானே கொடுத்தார்கள் என்ற மனப்பங்கிலும் இருந்திருப்பதாக தெரிகிறது.  அதனால், அவர்கள், தங்கள் வாக்குகளை, மனசாட்சி படி பதிவு செய்திருக்கலாம்.  அந்த வாக்குகள், திமுகவிற்கு எதிரானதாகவே அமையும்.

நகர்ப்புறம் மற்றும் நடுத்த்ர மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு கோப அலை இருப்பதும் தெளிவாக இருந்தது.  அவர்களூம் மாற்றத்தை விரும்பி, திமுகவிற்கு எதிராகவே வாக்களித்திருப்பார்கள்.

78 சதவிகித வாக்கு பதிவு,  மக்களின் கோப அலையா, அல்லது பணபட்டுவாடாவிற்கு வந்த அலையா என்று பார்த்தால், 80 சதவிகிதம் கோப அலையாக இருக்கத்தான் வாய்ப்பு உண்டு.  

எனது நண்பரும், பிரப்ல பத்திரிகையாள்ருமான சுதாங்கள் அவர்கள் ஒரு வட இந்திய டிவி பேட்டியில், “திமுக வென்றால், குடும்பத்திற்கு லாபம்;  திமுக தோற்றால், திமுகவிற்கு லாபம்” என்றார்.  அவரை தொடர்பு கொண்டு ஏன் இப்படி கூறினீர்கள் என்ற் கேட்டபோது, திமுக தோற்றால், அவர்கள் சுய பரிசோதனை செய்வதற்கு நேரம் கிடைக்கும்.  அது, திமுகவினை, குடும்ப அரசியலிருந்து விடுவித்து, மீண்டும் ஒரு புத்த்துணர்ச்சியுடன் எழுந்து வர ஒரு வாய்ப்பாக அமையும் என்று விளக்கினார். 

அனைத்து விவரங்களையும், கூட்டி, கழித்து பார்த்தால், எனது கணிப்பில், அதிமுக முழு மெஜாரிடி பெறும் என்றும், அதிமுக கூட்டணியினர் 160 முதல் 180 இடம் வரை கைப்பற்றுவார்கள் என்றும் எண்ணுகிறேன்.  திமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியுறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன்.  

“வோட்டு இயந்திரங்கள் அமைதியாக தூங்குகின்றன.  ஆணால், எங்களூக்குத்தான் தூக்கம் இல்லை” என்று ஒரு அரசியல் நண்பர் கூறியதைத்தான் நினைவு கொள்கிறேன்.  இந்த கூற்று, அரசியல்வாதிகளூக்கு மட்டுமல்ல, வாக்களித்த நம் அனைவருக்குமே பொருந்தும். 
.
வருகிற மே 13ம் தேதிவரை பொறுத்துக்கொள்வோம்.  

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்


தேர்தல் ஆணையம் சிறந்த முறையில், தமிழ்நாடு தேர்தலை நடத்தி முடித்துள்ளது.  இந்த அளவு சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற்றதற்கு, பணிபுரிந்த லட்சக்கணக்கான் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் முக்கிய காரணம்.  தேர்தலை சிறந்த முறையில் நடத்த வேண்டுமென்ற ஒர் நல்லெண்ணத்தில், பல பெண் ஊழியர்களும், ஆசிரியர்களும் பல தொல்லைகளை அனுபத்ததாக தகவல்கள் வருகின்றன.  எனது நண்பரும் ஒரு மூத்த பத்திரிகையாளருமான பத்மன், எனக்கு இந்த கட்டுரிஅயை அனுப்பியுள்ளார்.  நானும் இந்த விஷ்யம் பற்றி,  தேர்தல் பணியாற்றிய பெண் ஊழியர்களிடையே விவாதித்தேன்.  பதம்ன் எழுதியிருப்பதில் உணமை இருக்கிறது.

இந்த விஷ்யங்கள், குரேஷி, பிரவீண்குமார் அளவில் தெரியாமல் இருக்கலாம்.  அவர்கள் செய்யும் நல்ல பணிகள்,  ஏற்பாடு செய்யும் கீழ்மட்ட அதிகாரிகளால், மாசுபட்டுவிடக்கூடாது என்கிற் எண்ணத்தில், இதை எழுதுகிறோம்.   தேர்தல் ஆணையம், இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை அரங்கேற்றிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க்வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் வேண்டுகோள்.  தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயர் தேடித்தர, அந்த அதிகாரிகள் முயற்சி செய்யவும் செய்திருக்கலாம்.  வாசகர்கள், தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு எடுத்து செல்லுமாறு வேண்டுகிறேன்.

சீனிவாசன்.


தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள் 
பத்மன்

   உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதற்கு வலுவான தேர்தல் ஆணையமே அடிப்படைக் காரணம் என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்திய அளவிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை, பெருமளவில் வன்முறைக் கீறலின்றி பேரமைதியாகவே தேர்தல்  ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. சில குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றபோதிலும், பணப்பாய்ச்சலைத் தடுத்துவிட்டதாகப் பாராட்டு மழையில் நனைகிறது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குமேல் உண்மையிலேயே பிரசார கூக்குரல்கள் ஏதுமில்லை. வழக்கமான சுவரொட்டிகளும் வர்ண விளம்பரங்களும் இல்லாமல் வீட்டுச்சுவர்கள் வெறிச்சோடிக் கிடந்தாலும் பொதுமக்களிடம் நிம்மதி பளிச்சிட்டது. புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடிச் சீட்டு அறிமுகத்தால் கள்ளவாக்குகளையும் 99.9 சதவீதம் தடுத்திருக்கிறது. வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தேர்தல் ஆணையம் பெருவெற்றி பெற்றிருப்பதற்கு வாக்குப்பதிவு சதவீதமே சாட்சி.

    இத்தனை விஷயங்களும் ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தல் ஆணையத்தின்  வலிமையைப் பறைசாற்றினாலும், அதன் நடைமுறைகளில் சில முட்கள் அதன் சதையைக் கிழித்து வழியை ஏற்படுத்துகின்றன. அரசியல் ரீதியில் சில கட்சிகள் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் போக்கில் ஒருவித சவாதிகரம் புரையோடிக் கிடப்பதைக் கண்டதால் எழுந்த வேதனையின் வெளிப்பாடு இது.

   அரசுப் பணியாளர்களுக்கு ஆங்கிலத்தில் கவர்மென்ட் சர்வன்ட் என்ற பெயர் இருப்பதை அப்படியே அச்சுஅசல் பிசகாமல் கடைப்பிடிப்பது தேர்தல் ஆணையம் மட்டும்தான். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அது நடத்துகின்ற விதத்தில் பழைய பிரிட்டிஷ் தர்பார் மாறாமல் நீடிக்கிறது. ஜனநாயகத் திருவிழாவான தேர்தலை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற அசுர வேகத்தில், அந்த ஜனநாயகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் அசுரனாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மனிதநேய முகத்தைக் கழற்றி எறிந்துவிட்டுத்தான் இந்த ஜனநாயகப் பணியை தேர்தல் ஆணையத்தால் ஆற்றமுடிகிறது என்பது முரண்சுவை.


தேர்தல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விருப்பத்தின் பேரில் வருவதில்லை, கட்டாயத்தின் பேரில் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு, தேர்தல் பணியை ஆற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தமல்ல, அந்தப் பணிகளை ஆற்றுவோருக்கு அளிக்கப்படும் 'உபசரிப்பு' யாருமே விரும்பாத வகையில் இருக்கிறது என்பதே உண்மை. தேர்தலை வெற்றிகரமாகத் தேர்தல் ஆணையம் நடத்தினாலும், அதன் திறமை, நேர்த்தி இதில் பளிச்சிட்டாலும் தேர்தல் பணியாளர்களிடம் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் ஒரு தொழில் நேர்த்தி இல்லை, திறமைக் குறைவும் தென்படுகிறது. சரி, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அப்படி என்னதான் இன்னல்கள் இழைக்கப்படுகின்றன என்கிறீர்களா?

    தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அவசர கதியிலும், அலைக்கழிக்கப்பட்டும் இதற்குத் தயார் செய்யப்படுகிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் வீட்டுக்கும் அவர் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடிக்கும் உள்ள தொலைவு, அந்தச் சமயத்தில் தேர்தல் பணியாற்ற வேண்டியவருக்குள்ள இதர கடமைகள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் தொடங்கி, ஏறக்குறைய தேர்தல் தினத்தன்று நள்ளிரவு வரையில் நீடிக்கும் இந்த இமாலாயப் பணியில் இம்சைகள் அதிகம். கடினமான இந்த வேலைக்குப் பெண்களே அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கே உரியப் பிரத்யேகப் பிரச்சினைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை. உதாரணத்துக்கு, கைக்குழந்தையுடன் இருக்கும் பெண் என்றாலும், 5 மாதம் வரியுடைய குழந்தையாக இருந்தால் மட்டுமே விதிவிலக்கு. அதுவும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில், அவர்களது கைக்குழந்தைகள் 2 நாட்களுக்கு தாயார் இல்லாமல் தவிக்க வேண்டியதுதான்.

   உண்மையான காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் கட்டாய ஜனநாயகப் பணியில் இருந்து சில அரசு ஊழியர்களால் தப்ப முடியவில்லை. மகன் அல்லது மகள் அல்லது நெருங்கிய உறவினர்  திருமணத்தை வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாமல் பணிக்கு வந்து தவித்தவர்களும் உண்டு. வெளிநாடு சென்று உடனடியாகத் திரும்ப முடியாத நிலையில் இருந்த அதிகாரிகளுக்கும் கட்டாயம் அவர்கள் கடமையை ஆற்றத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இல்லையேல் உடனடி நடவடிக்கை. தாயகம் திரும்பிய பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்கள் தண்டனையைப் போக்கிக்கொள்ளலாம் என்று 'காருண்யத்துடன்' கூறிவிட்டது தேர்தல் ஆணையம். ஒரு அரசு வங்கிக் கிளையில் அனைத்து ஊழியர்களுக்குமே தேர்தல் பணி. ஒருசிலரையாவது வங்கிப் பணிக்கு விட்டுவைக்குமாறு வங்கிக் கிளை அதிகாரி கெஞ்சியும் மசியவில்லை தேர்தல் ஆணையம். வேறு கிளைகளில் இருந்து தற்காலிக ஊழியர்கள் தருவிக்கப்பட்டு நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.

   தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் ஆசிரியர்களே. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் வேலை ஆகிய பணிகளும் ஆசிரியர்களை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்தன. மத்தளத்துக்கு இருபக்கம் இடி. ஆசிரியர்களுக்கோ  எல்லாபக்கமும் இடி. பல்வேறு பணிகளால் ஆசிரியர்களுக்குப் பணமழை பொழிவதாக மற்றவர்கள் வயிறு எரிந்தாலும், தேர்தல் பணிக்குக் கிடைத்த ஊதியத்தைவிட போக்குவரத்து, சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் செலவழித்ததும், பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலும் அதிகம் என்பதே உண்மை.

   இந்த முறை தேர்தல் பணி நியமன உத்தரவு, தேர்தலுக்கு முதல் நாள் காலை 8 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இதற்கான பணியாளர்கள் அனைவரும் அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர். ஆனால், பணி நியமன ஆணை நண்பகல் 12 மணிக்குத்தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடியோ, பலருக்குப் பல மைல் தூரத்தில் இருந்தது. இந்த ஆணை கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு அவர்கள் சென்றாக வேண்டும். ஆனால் இதற்குரிய வாகன ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆணையம் என்பதால் ஆணையிட்டதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்துவிட்டது. பொறுப்புணர்வுள்ள அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களுக்கு வந்து சேர வேண்டியது அவைகளுடைய பொறுப்பு.

   சரி, வந்து சேர்ந்த இடத்திலாவது உரிய வசதிகள் உண்டா? 2  நாள் இரவு தங்க வேண்டுமே? அதுவும் பிரத்யேகப் பிரச்சினைகள் கொண்ட பெண்களின் கதி என்ன? பாதுகாப்புக்கு போலீசார் உண்டு. ஆனால், இரவில் தங்குவதற்கு, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, காலையில் குளிப்பதற்கு உரிய வசதிகள் கிடையாது. நகர வாக்குச்சாவடிகள் என்றால் பரவாயில்லை. கிராமப்புற வாக்குச்சாவடிகள் என்றால் சரியான சாப்பாடும் கிடையாது. கிராம, குக்கிராம வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் உணவுப் பொட்டலம் எதுவும் வழங்கவில்லை. பரிதாபப்பட்டு கிராம நிர்வாக அதிகாரிகள் வாங்கிக் கொடுத்தால்தான் உண்டு. இல்லையேல், கையேடு கொண்டு சென்ற பிஸ்கட்டுகளும் பழன்க்களும்தன் 2 நாட்களுக்கும் ஆகாரம்.

    அதுவும் இந்த முறை, கட்சி முகவர்கள் வாங்கிக் கொடுக்கும் காபி, டீயைக்கூட குடிக்கக் கூடாது என்ற கட்டளை வேறு. ஐயோ பாவம் என்று அந்த முகவர்கள் சாப்பாடு, வெயிலுக்கு குளிர்பானம் என்று தருவித்துக் கொடுத்தாலும்கூட அதைப் பெற்றுக்கொண்டால் அரசியல் தீட்டு ஒட்டிக்கொள்ளுமே! அவ்வாறெனில், அடிப்படைத் தேவையான உணவு உள்ளிடவற்றிற்கான உரிய ஏற்பாடுகளை வருவாய் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மூலம் தேர்தல் ஆணையமே முறைப்படி செய்ய வேண்டும் அல்லவா? தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் தேர்தல் பணியைச் செய்பவர்கள் இயந்திரங்கள் இல்லையே?

       இதேபோல், வாக்குப்பதிவு மாலை 5  மணியோடு முடிவடைந்து, மற்ற நடைமுறைகள் ஐந்தரை 6  மணிக்கு நிறைவடைந்தாலும்கூட தேர்தல் பணியாளர்கள் வீட்டுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை. வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாங்கினால்தானே அந்த இடத்திலிருந்து அவர்கள் நகர முடியும். ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வந்து பரிசோதித்து, இந்த இயந்திரங்களை வாங்கிச் செல்வது நடைமுறை. இதனால் சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு நேரத்தில்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டன. தேர்தல் பணியாளர்களைப் பொறுத்தவரை அத்தோடு தேர்தல் ஆணையத்தின் கடமை முடிந்துவிட்டது. அத்துவானக் காட்டில் நள்ளிரவு நேரத்தில் தேர்தல் பணி கடமையை பூர்த்தி செய்த பணியாளர்களின் கதி அதோகதிதான். அவர்கள் சொந்த வாகனத்தில், அல்லது வாகன ஏற்பாடுகளில் திரும்பிச் செல்ல வேண்டியதுதான். இல்லையேல், துணைக்கு யாரும் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடியிலேயே தங்கிச் செல்ல வேண்டியதுதான். ஆண்களாக இருந்தால் பரவாயில்லை. பெண்களின் கதி? ஒன்று, பாதுகாப்பான இடவசதி, இல்லையேல் முறையான வாகன வசதி செய்து தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா?

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி மனமுவந்து விருப்பத்துடன் வாக்களிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துவிட்டது. பாராட்டுகள். அதேபோல், தேர்தல் பணியாற்றுவோரும் எவ்வித அச்சமுமின்றி விருப்பத்துடன் பணியாற்றவரும் சூழ்நிலையை தேர்தல் ஆணையம் எப்போது கொண்டுவரும்?

 writer : PADMAN napnaban1967@gmail.com

திங்கள், 4 ஏப்ரல், 2011

தமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்

கடந்த 2006 தேர்தலில், திமுக வெளிய்ட்ட தேர்தல் அறிக்கையில், கலர் டிவி போன்ற இலவசங்கள் இடம் பெற்றதால், அந்த தேர்தல் அறிக்கை, ‘கதாநாயகி’ என்று வர்ணிக்கப்ட்டது.  திமுகவின் வெற்றிக்கும் அது ஒரு காரணமாக இருந்தது என்று கூறுபவர்களும் உண்டு.  இலவசங்களுக்கு கொடுத்த முன்னுரிமை, தனிப்பட்ட மனிதனின் வருமானத்தை பெருக்குவதற்கும், தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் கொடுக்கப்படவில்லை என்று அப்போதே, பல பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்தார்கள். 
தற்போது, 2011ல், திமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவில், தமிழக அரசின் கடன் சுமை ஒரு லட்சம் கோடியாகி, தமிழ்நாட்டு மக்களை கடனாளியாக்கி விட்டது, மின்வெட்டால் பொருலாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது.  தமிழக அரசின் ஆண்டு வருமானத்தில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ‘டாஸ்மாக்’ மூலமாக, ‘குடிமகன்கள்’ வழங்கி வருகிறார்கள்.
2011 தேர்தல் தேதிகள் அறிவித்தவுடன், திமுக, அதிமுக மற்றும் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.  தமிழ்நாட்டில், திமுக மற்றும் அதிமுக ஆகியவைகளில் ஒரு கட்சிக்கு தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதால், இவர்களது தேர்தல் அறிக்கைகளை மட்டும் அலசலாம் என்று எண்ணியுள்ளேன்.
இந்த இரு தேர்தல் அறிக்கைகளையும், pdf ஃபைலாக என்னுடைய தளத்தில் ஏற்றியுள்ளேன். அவைகளை டவுன்லோடு செய்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
திமுக தேர்தல் அறிக்கை 2011 
அண்ணா திமுக தேர்தல் அறிக்கை 2011
நான் சுருக்கமாக இந்த தேர்தல் அறிக்கைகளை விளக்கியிருந்தாலும், வாசகர்கள் இந்த அறிக்கைகளை டவுன்லோடு செய்து, அவைகளை ஒப்பிட்டுக்கொள்ளும்படி வேண்டுகிறேன். 
திமுகவின் தேர்தல் அறிக்கை 2011 
1. 61 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், 36 பக்கங்களில் மட்டும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்வார்கள் என்பதை விளக்கியுள்ளார்கள்.  மற்ற பக்கங்களீல், கலைஞரின் செய்தியும், தங்களுடைய முந்தைய சாதனைகளையும் கூறியுள்ளார்கள்.
2.  மிக்சி,கிரைண்டர், லேப்டாப், பஸ் பாஸ், இலவச அரிசி போன்ற இலவசங்களும் இடம் பெற்றுள்ளன.  
3.  மாநில சுயாட்சி, நதி நீர் பங்க்கீடு, மொழி கொளகை, ஈழ பிரச்சனை, மநில பட்டியலில் கல்வி, நதிகள் தேசிய மயமாக்குதல் மற்றும் பல பிரச்சனைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தவதாக கூறியுள்ளார்கள்.  
4, விவசாயத்தை பெருக்க , விவசாய சேவை மையங்களையும், ஒன்றிய அளவில், வேளான் உற்பத்தி கருவிகளுக்கான வங்கி, அதற்கான தொழிற்பேட்டை, இயற்கை வேளாண்மைக்கு ஒரு பிரிவும் அமைக்கப்படும்.
5.  வேலை வாய்ப்பை பெருக்க, ‘சிறப்பு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி’ கள் மாவட்டம் தோறும் நட்த்தப்படும். 
6.  நிர்வாக சீரமைப்பு, வறுமை ஒழிப்பு,  மகளிர் சுய உதவி குழு, தடையில்ல மின்சாரம், நீர்வள மேம்பாட்டு திட்டம்,, மீனவர் நலன், மைனாரிட்டிகளின் நலன், கால்நடை வளம், மக்கள் நலவாழ்வு, மாற்று திறனாளிகளின் நலன், ஆதி திராவிடர்களின் நலன் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.  
7.  இரண்டு மனநல மருத்துவ மனைகளும், ஒரு காச நோய் மருத்துவ மனையையும் துவக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகளை நிறுவ உறுதி அளித்துள்ளார்கள்.  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு, இலவச dialysis தரவும் உறுதி அளித்துள்ளார்கள்.
8.  அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பல்கலைகழகம் நிறுவப்படும். 
9.  மதுரை மற்றும் கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கம்.
10. கலஞர் வீடு திட்டத்தில் மானியம் ஒரு லட்சம்.
பொதுவாக, இந்த தேர்தல் அறிக்கையில், வாக்குறுதிகளை ஒரு descriptive ஆகவே கொடுத்துள்ளார்கள்.  வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் விளக்கப்படவில்லை.  தற்போது ஒரு லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தை, எப்படி, கடனில்லா மாநிலமாக ஆக்குவது பற்றி எந்த விளக்கமும் இல்லை.  எப்படி தடையில்லா மினசாரம் கிடைக்கும் என்பதை விளக்கவில்லை.  
அதிமுகவின் தேர்தல் அறிக்கை 2011
1. 34 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 54 பாயிண்ட்களாக தங்கள் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். இதில்,   திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து இலவசங்களும் இடம் பெற்றுள்ளன. இலவசங்கள் தவிர, தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களையும், புள்ளி விவரங்களுடனும், அவைகளை அடையும் வழிமுறைகளை விளக்கியும் அளித்துள்ளார்கள்.   சில முக்கியமான திட்டஙகள். 
2,  இரண்டாம் விவசாய புரட்சி யாக ஆண்டு அரிசி உற்பத்தி 8,6 மில்லியன் டன்னிலிருந்து 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவது.  இதற்காக, 30,000 ஹெக்டேர் நிலத்தை, சிறப்பு சிறுபாசன் திட்டத்தின் கீழ் கொண்டு வருவது. கரும்பு உற்பத்தியை, 475.5 லட்சம் டன்னிலிருந்து, 1000 லட்சம் டன்னிற்கு உயர்த்துவது.  
3.  வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் தோறும் குடும்பத்திற்கு  20 லிட்டர் சுத்திகரிக்கப்ப்ட்ட குடிநீர் வழஙக உறுதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள உருவாகவும், 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.  மேலும், ஒரு லட்சம் பேருக்கு, போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
4.  தமிழ்நாட்டில் 1500  கிராமங்களிலும், 24 மணி நேரமும், தொலை தூர ம்ருத்துவ மையங்கள் (Tele medicine centres) அமைக்கவும், காப்பீட்டு திட்டத்தை சீரமைத்து அமல் படுத்தவும், நடமாடும் மருத்துவ மனைகள் அமைக்கவும் உறுதி அளித்துள்ளார்கள்.
5.  வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மூன்று லடம் பேருக்கு, 1.80 லடசம் மதிப்புள்ள 300 சதுர அடியில்,  பசுமை வீடுகள் (Green Houses) இலவசமாக வழங்கப்ப்டும்.  மற்றும் 40  லட்சம் நடுத்த்ர வகுப்பினருக்கு 1 லட்சம் மனியத்துடம் விரிவாக்கம் செய்யப்படும்.  
6.  மின்சார திருட்டை ஒழிக்க ஒரு படை அமைத்து, வினியோக முறையில் மாற்றம் செய்து, 3 ஃபேஸ் கரண்ட் தடையில்லாமல் வழங்கப்ப்டும்.
7.  தற்போது 4500 மெகா வாட் கரண்ட் உற்பத்தி ஆகிறது.  தமிழ்நாட்டிற்கு 6000 மெகா வாட் கரண்ட் தேவைப்படுகிறது.  2013க்குள் 5000 மெகாவாட் மின்சாரம் மேலும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்.  2012க்குள், 151 நகராட்சிகள் மற்றும் அனைத்து மாநகாரட்சிகளிலும், கழிவுகளிநிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.  அந்த நகரங்கள், கார்பன் நியூட்ரல் நகரஙக்ளாக மாற்றப்படும்.  2013க்குள், பத்து 300மெகாவாட் சோலார் எனர்ஜி பார்க்குள் உருவாக்கப்பட்டு, 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது தவிர, இயற்கை எரிவாயு மூலம் 161 கிராம பஞ்சாயத்துகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.  இந்த இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிப்பில், சுமார் 64,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்டும்.
8.  தற்போது தினமும் 2.5 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது.  இதை 10 மில்லியன் லிட்டராக அதிகரிக்க முயற்சிக்கப்படும். இதற்கு, 6000 கிராமங்களில், 60,000 கறவை மாடுகள் இலவசமாக் வழஙகப்பட்டு, சீரமக்கப்பட்ட பால் பண்ணைகள் உருவாக்கப்படும்.  இதனால் மீண்டும் ஒரு ‘வெண்மை புரட்சி’ உருவாக்கப்படும். இதனால், சுமார் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.  
10.  கால்நடை வளம் பெருக, அடித்தள மக்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். 
11.  நகர்ப்புற வசதிகள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டி, 30 அல்லது 40 கிராமங்கள் இணைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும்.  
12.  மாணவர்கள் இடை நிறுத்தத்தை (school drop out) தவிர்க்க கல்வி உதவி வழங்கப்படும்.  மற்றும் கற்றல் குறைபாடு (Dyslexia) உள்ள சிறுவர்களுக்கும், சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.
13.  உயர் கல்வியை உயிர்ப்பிக்க, 12 அம்ச திட்டம் உருவாக்கப்படும்.
14. 150 கிராமப்புற BPOக்கள் உருவாக்கப்படும்.  
15.  சென்னை, மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் மோனோ ரயில் அமைக்கப்படும்.  
16.  அனைத்து திட்டஙகள் வழியாகவும், அரசின் வருமானம் ஐந்து ஆண்டுகளில், 1,20,000 கோடி ரூபாய் அதிகரிக்கும்.  இந்த அதிக வருமானம்  இலவசங்களை சமாளிக்கவும், தற்போதுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை அடைக்கவும் பயன்படும்.  
பொதுவாக, அண்ணா திமுக தேர்தல் அறிக்கையில், இலவசங்களுக்கு மக்களை கவரும் வகையில் முன்னுரிமை கொடுத்திருந்தாலும், தங்களது குறிக்கோள்களை, புள்ளிவிவரஙகளூடன் விளக்கியுள்ளதுடன், அதன் வழிமுறைகளையும் விளக்கியுள்ளது மிகவும் சிறப்பு அம்சமாகும்.  இலவசங்களைமட்டும் பார்த்து விட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுகவின் ஸெராக்ஸ் காப்பி என்று விமர்சனம் எழுந்தது.  அதிமுகவினரும், தங்களது தேர்தல் அறிக்கையை விளக்கமாக மேடைகளில் பேசாததாலும், பத்திரிகைகள் இந்த அறிக்கையை படித்து முழுமையாக விமர்சனம் செயயாததாலும், அதிமுக அறிக்கையைன் நல்ல அம்சங்கள் வெளிவரவில்லை. 
அதே சமயம், சென்னையில், மெட்ரோ ரயில் திட்டம் பாதியில் இருக்கும் போது, இந்த அறிக்கையில், மோனோ ரயில் பற்றி இருப்பதால், மக்க்ளுக்கு ஒரு குழப்பம் உருவாகிற்து.  எந்த ஆட்சியில் துவங்கினாலும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்ல திட்டங்கள் தொடர வேண்டுமென்று தான் மக்கள் விரும்புகிறார்கள்.  
பொதுவாக அதிமுக அறிக்கை பல நாட்கள், ஆராய்சி செய்து, பொருளாதார வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.  அண்ணா திமுக ஆட்சி அமைத்தால், அவர்கள் கூறிய திட்டங்களை, தொய்வு இல்லாமல் நடைமுறைப்படுத்தினால், தமிழ்நாடு இந்தியாவில் ஒரு முன்னணி மாநில மாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  
தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தேர்தல் அறிக்கையை பொருத்தவரை, நடு நிலையாக ஆராயும் போது, திமுக வின் அறிக்கைக்கு 100க்கு 40 மார்க்குகளும், அதிமுகவின் அறிக்கைக்கு 80 மார்க்குகளும் அளிகலாம் என்பது என் கருத்து.  

இந்த இரு தேர்தல் அறிக்கைகளையும், pdf ஃபைலாக என்னுடைய தளத்தில் ஏற்றியுள்ளேன். அவைகளை டவுன்லோடு செய்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
திமுக தேர்தல் அறிக்கை 2011 
அண்ணா திமுக தேர்தல் அறிக்கை 2011


சனி, 2 ஏப்ரல், 2011

தமிழக தேர்தல் 2011 பற்றி நடிகர் எஸ். வி. சேகரின் பரபரப்பு பேட்டி

நடிகர் எஸ். வி சேகர், கடந்த 2006 தேர்தலில், அண்ணா திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  செல்வி ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அண்ணா திமுகாவிலிருந்து நீக்கப்பட்டு, கட்சி சாரா எம். எல். ஏ ஆக பணியாற்றியவர்.
எஸ். வி சேகர், பிரபல நடிகராக இருந்தாலும், எளிமையானவராகவும், எந்நேரமும் எவராலும் மொபைல் போனில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் (2011), காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நடிகர் எஸ். வி. சேகர்
இந்த பின்னணியில், மயிலாப்பூர் தொகுதியில், நன்கு அறிமுகமான இவரையே வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அவர்களின் மனைவியை வேட்பாளராக அறிவித்தது.  இதற்கு காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
தேர்தல் அதிகாரிகள் தங்கபாலுவின் மனைவியின் வேட்பு மனுவை நிராகரித்தனர்.   அந்த அம்மையார் வேட்பு மனுவில் கையெழுத்து இடவில்லை என்பது தான் காரணம்.  டம்மி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இவரே கட்சியில் அதிகாரபூர்வ வேட்பாளரானார்.  இருப்பினும், குறுக்கு வழியில் வேட்பாளரான தங்கபாலுவுக்கு காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில், நான், கடந்த மார்ச் 31ம் தேதி, எஸ் வி சேகருடன் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்தேன்.  தங்கபாலு விவகாரம், அவரை ஏன் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை, 2ஜி விவகாரம், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பு, நரேந்திர மோடி பற்றிய அவரது எண்ண்ங்கள்,  ஆகிய பல விஷயங்களை அவரது பாணியில் பரபரப்பாக பேட்டி அளித்தார்.  அவரது பேட்டியை (15 நிமிடங்கள்), கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ‘பிளே’ பட்டனை சொடுக்கி கேட்கவும்.

இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

செவ்வாய், 29 மார்ச், 2011

தமிழக தேர்தல் 2011 - தேர்தல் அறிக்கையின் இலவசங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.  அரசியல் தலைவர்கள் தங்கள் சூறாவளி சுற்று பயணங்களை துவக்கி விட்டனர்.

அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.  முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவும் அஇஅதிமுகவும் வெளியிடுள்ள அறிக்கைகள் மக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகின்றன.

2006 தேர்தலில், ‘கதாநாயகன்’ என்று வர்ணிக்கப்பட்ட திமுகவும் தேர்தல் அறிக்கை, கலர் டி.வி. உட்பர பல இலவசங்களை கவர்ச்சிகரமாக வெளியிட்டது.  அதனால் திமுக ஆட்சிக்கு வந்தது.

ஒரு பக்கம், கலர் டிவி கொடுத்து, மக்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும், இதன் பின்னணீயில், கலைஞரின் இராஜ தந்திரம் உள்ளது என்று விமர்சிப்பவர்களூம் உண்டு.  ஒரு கோடியே அறுபது லட்சம் கலர் டிவி களை கொள்முதல் செய்ததில், சுமார் 100 கோடி ரூபாய் கமிஷனாக கலைஞர் குடும்பத்திற்கு கிடைத்தது என்று கூறுபவர்களூம் உண்டு.  விஞ்ஞான பூர்வமாக ஊழல் செயவதில் வல்லுநர் என்று நீதிபதி சர்க்காரியாவினால் பாராட்டு பெற்றவராக இருப்பதால், கலைஞருக்கு 100 கோடி கமிஷன் கிடைத்திருக்கும் என்று நம்புவர்களூம் உண்டு.

இது தவிர, கலர் டிவி பெற்ற அனைவருக்கும், அரசு இலவச கேபிள் இணைப்பு கொடுக்கவில்லை.  அனைவரும் சன் டிவியின் குழுமத்தை சார்ந்த சுமங்கலி மூலம் தான் கேபிள் இணைப்பு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள்ப்பட்டார்கள்.  இதன் மூலம் சுமார் 40 கோடி முதல் 50 கோடி வரை மாத வருமானம் சன் குழுமத்திற்கு லாபம் வந்ததாக கூறுகிறார்கள்.

க்லைஞர் காப்பீட்டு திட்டட்த்தின் மூலம் அளிகப்பட்ட வசதிகளும் கலைஞருக்கு வேண்டப்பட்ட 2ஜி யில் சம்மந்தப்பட்ட ஸ்டார் இன்ஷுயூரன்ஸ் நிறுவனம் மூலமாக அளிக்கப்பட்டது.  இதிலும் பல சர்ச்சைகள் உள்ளன.

கலைஞர் அறிவித்த அனைத்து இலவசங்களின் பின்னணியிலும், அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நல்ல வருமான்ம் இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2011 தேர்தலுக்கும், திமுக பல இலவசங்களை அறிவித்துள்ளது.  இதே போல்,  அதிமுகவும் பல இலவசங்களை அறிவித்துள்ளது.  “ஏற்பது இகழ்ச்சி” என்று வாழ்ந்த இந்த தமிழ் இனத்தை, இந்த இரு கழகங்களூம், கேவலப்படுத்துவாக அமைந்துள்ளது. வளர்ச்சி திட்டங்கள் அதிக அளவில் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

2006ல் இலவசங்களை அறிவித்த கலைஞர், 2011ல், ஒரு லட்சம் கோடிக்கு மேல், கடனை மக்களுக்கு அளித்துள்ளார்.  இதனால் வரும் வருமானத்தை, தனது குடும்பத்திற்கு அளித்துள்ளார்.

இந்தியாவின் எந்த பகுதிகளிலும், இது போன்று இலவசங்கள் இல்லை.  குஜராத் தேர்தலின் போது, காங்கிரஸ், இலவச மின்சாரம் அறிவித்த போது, நரேந்திர மோடி, இலவச மின்சாரம் தருவதில்லை என்றும், தடையில்லா மினசாரம் தருவதாக வாக்குறுதி அளித்தார்.  மோடி தான் வெற்றி பெற்றார்.  இது நாள் வரை, குஜராத்தில் தடையில்லா மின்சாரம் அளிக்கப்படுகிறது. குஜராத் மக்களும் இலவசத்திற்கு அலைவதில்லை.  குஜராத்தில் ‘டாஸ்மாக்’ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது குஜராத், ஒரு லட்சம் கோடி, இருப்பு வைத்துள்ளது.

இந்த இலவசங்களைப்பற்றி, இந்து மக்கட் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்துடன் ஒரு பேட்டி கண்டேன்.  அவரது கருத்துக்களை, ‘பிளே’ பட்டனை சொடுக்கி, கேட்கவும்.


இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=ZY4B6nddtI0

புதன், 2 மார்ச், 2011

கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள், தமிழர் பண்பாட்டை இழிவு படுத்துகிறதா?

அண்மையில், பிரபல இயக்குநர் கவுதம் மேனனின் இயக்கத்தில், ‘நடுநிசி நாய்கள்’ என்கிற ஒரு திரைப்படம் வெளியானது.  அதில், மனநோயாளியான ஒருவன், தன்னுடைய வளர்ப்பு தாயுடன் தகாத உறவு கொள்வதாக அமைத்துள்ளார்கள்.
அர்ஜுன் சம்பத்
இந்த படம் வெளியானவுடன், இந்து மக்கள் கட்சியினர், இந்த் காட்சி, தமிழர்கள் பண்பாட்டையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவு படுத்துவதாக கூறி ஒரு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில த்லைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டபோது, “மனநோயாளி என்கிற போர்வையில், வக்கிரங்களை அனுமதித்தால், அது ஒரு பெரிய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இதே கவுதம் மேனன், வாரணமாயிரம் படத்தில், ஒரு தந்தையின் பெருமைகளை விளக்கியிருந்தார்.  ஒரு சிறந்த இயக்குநர், கருத்துரிமை என்கிற பெயரில், கலாச்சார சீரழிவிற்கும், வக்கிரமத்திற்கும்  வழி வகுத்தது, பல நடுநிலையாளர்களூக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கு, இண்டர்நெட், சினிமா, டிவி, மீடியா, நண்பர்கள் மூலமாக பல தேவையற்ற தகவல்கள் வந்து சேரும் போது,  கவுதம் மேனன் போன்ற இயக்குநர்கள், மேலும் சமுதாய பொருப்புடன் நட்ந்து கொண்டால்,  நாட்டிற்கு நல்லது.
அர்ஜுன் சம்பத்தின் பேட்டியை, கீழ்கண்ட பிளேயரில், கேட்கலாம்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

வேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றிய ஒரு நேர்முகம்

சென்னை ஆல் இந்தியா ரேடியோ எஃப்.எம் ரெயின்போ (101.4 MHz) அலை வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் 11 மணிக்கு இளைஞர்களுக்காக ‘அடுத்தது என்ன’ என்கிற ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். ஒரு மணி நேரம நடக்கும்,  இந்த நிகழ்ச்சியில்,  பல துறைகளிலிருந்தும் அனுபவம் பெற்ற வல்லுநர்களை அழைத்து, நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்கும் சந்தேகங்களூக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.  
சரவணனன் (RJ) மற்றும்
 கே. சீனிவாசன்
இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு பயனுள்ள ஒரு நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து ரெயின்போவிலும் மறு ஒலிபரப்பு செய்கிறார்கள்..  
 கடந்த பிப்ரவரி 19ம் தேதி (2011) காலைக்கான நேரடி ஒலிபரப்பிற்கு,  என்னை அழைத்திருந்தார்கள்.  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறமைகள் என்ன என்பதைப்பற்றியும், அந்த திறமைக்ளை எவ்வாறு வளர்ப்பது பற்றியும், நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  
திரு அண்ணாமலை பாண்டியன் தயாரித்த இந்த நிகழ்ச்சியை ஆர். ஜே சரவணன் சுவையாக தொகுத்து வழங்கினார்.  ஒரு மணீ நேரம் நேரடி ஒலிபரப்பான இந்த் நிகழ்ச்சியை, 35 ந்மிடங்களுக்கு சுருக்கி, முக்கியமான கருத்துக்களை மட்டும், நான் கீழே கொடுத்துள்ளேன்.   கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், ‘பிளே’ பட்டனை அழுத்தி, கேட்கலாம்.  இந்த நிகழ்ச்சி கிராம்ப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த நிகழ்ச்சியில் நான் சொன்ன கருத்துக்கள் தொடர்பாக, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், என்னை prpoint@gmail.com என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.



ஆடியோவில் கேட்க:
இந்த நிகழ்ச்சியை MP3 ஃபைலாக பதிவிறக்கம் செய்ய, இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமிக்கலாம் (35 MB).
இந்த நிகழ்ச்சியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

தமிழக எம்.பிக்கள் மக்களவையில் என்ன செய்தார்கள்? ஒரு அலசல்

தற்போதுள்ள மக்களவை சுதந்திரம் பெற்ற பிறகு 15வது மக்களவையாகும்.  இந்த பேரவை கட்ந்த ஆண்டு 2009ல் ஜூன் 1ம் தேதி முதல் அமர்வுகளை நடத்தி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும், மக்களவை மூன்று முறை கூடும்.  பட்ஜெட் தொடர், மழைக்கால தொடர் மற்றும் குளிர்கால தொடர்.  
இதுவரை, 15வது மக்களவை ஆறு தொடர்களை நடத்தியுள்ளது.  135 நாட்கள் அமர்ந்துள்ளது.  கடந்த் குளிர்கால தொடர் டிசம்பர் 13ம் தேதி, 2010ல் முடிந்தது. 
இந்த 135 நாட்களில், நம் தமிழ்நாட்டிலிருந்த மக்களவைக்கு சென்ற நம் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.
ஒவ்வொரு தொடர் முடிந்ததும், PRS இந்தியா என்கிற ஒரு அமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் பற்றிய விவரங்களை தொகுத்து வெளியிருகிறது.  அதன் அடிப்படையில், இந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்தார்களா என்பதற்கு, அவர்கள் கலந்து கொள்ளும் விவாதங்கள், தனியார் மசோதாக்களை எழுப்புவது,  மக்கள் பிரச்சனைகளைப்பற்றிய கேள்விகளை எழுப்புவது, வருகைப்பதிவு ஆகிய்வைகளே சான்றாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, திருநெல்வேலி எம்.பி இராமசுப்பு அவர்கள் முன்னணியில் உள்ளார்.  அவரது மொத்த கூட்டுதொகை 466.  அவர் 96 சதவிகித அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.  இவர் மக்களவைக்கு முதல் முறை பணியாற்ற சென்றவர்.  முதல் கூட்டத்தொடரின் போதே அகில இந்திய அளவில் 9வது இடத்தை பெற்றிருந்தார்.  தற்போது, குளிர்கால தொடருக்கு பிறகு அகில இந்திய அளவில் 5வது இடத்தை கைப்பற்றியுள்ளார்.  அவருக்கு, தமிழக மக்கள் சார்பாக நமது பாராட்டுக்கள்.  
கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.சுகவனம் கூட்டுத்தொகை 332 பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.  அவருக்கும் நம் பாராட்டுக்கள்.  
அனைத்து எம்.பிக்களின் விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  அவரவர்கள் தங்கள் தொகுதி எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

MP name Constituency Political party Total of debates, pvt bills and questions Attendance
S.S. Ramasubbu Tirunelveli INC 466 96%
E.G. Sugavanam Krisnagiri DMK 332 51%
P. Viswanathan Kancheepuram INC 258 83%
S. Semmalai Salem AIADMK 243 86%
C. Sivasami Tiruppur AIADMK 232 70%
R. Thamaraiselvan Dharmapuri DMK 226 79%
S. R. Jeyadurai Thoothukkudi DMK 208 57%
N.S.V. Chitthan Dindigul INC 187 90%
J.M. Aaron Rashid Theni INC 176 64%
S. Alagiri Cuddalore INC 170 70%
P. Kumar Tiruchirappalli AIADMK 161 80%
Munisamy Thambidurai Karur AIADMK 160 76%
P. Lingam Tenkasi CPI 151 96%
Abdul Rahman Vellore DMK 149 67%
K. Sugumar Pollachi AIADMK 137 80%
A. Ganeshamurthi Erode MDMK 128 81%
C. Rajendran Chennai South AIADMK 126 64%
P.R. Natarajan Coimbatore CPI (M) 123 79%
K. Murugesan Anandan Viluppuram AIADMK 101 84%
Thalikkottai Rajuthevar Baalu Sriperumbudur DMK 101 88%
Manicka Tagore Virudhunagar INC 79 86%
A.K.S. Vijayan Nagapattinam DMK 71 58%
Adhi Sankar Kallakurichi DMK 58 49%
Sivakumar @ J.K. Ritheesh. K Ramanthapuram DMK 56 40%
Davidson J. Helen Kanniyakumari DMK 55 75%
T.K.S. Elangovan Chennai North DMK 36 99%
M. Krishnaswamy Arani INC 32 86%
P. Venugopal Tiruvallur AIADMK 16 80%
Thirumaa Valavan Thol Chidambaram VCK 16 38%
Danapal Venugopal Tiruvannamalai DMK 15 70%
O. S. Manian Mayiladuthurai AIADMK 14 56%
Andimuthu Raja Nilgiris DMK 0 5%

திங்கள், 10 ஜனவரி, 2011

தலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு

வெற்றிகுரல் இதழ் 19
பல நேரங்களில், பத்திரிகைகளில், பஞ்சமி நிலங்களை மீட்பது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பலருக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன, அதன் நடைமுறை என்ன, அதற்குறிய சட்டங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரிவதில்லை.  அதை விளக்குவதற்காகத்தான் இந்த பதிவு.
தற்போது, ஆதிதிராவிடர்கள், தலித்துக்கள் என்று அழைக்கப்படும் மக்களை, ‘பஞ்சமர்கள்’ என்றும் கூறுவார்கள்.   வழக்கமாக நாம் மனு சாஸ்திரப்படி   நினைப்பது நான்கு வர்ணங்களைத்தான்.  ஏதோ ஒரு கால கட்டத்தில்,  இந்த வர்ணங்களை ஏற்காதவர்கள் ‘ஐந்தாவது வர்ணத்தை’ உருவாக்கினார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள் என்ப்படுபவர்கள்.
இந்த பஞ்சமர்கள், ஊருக்கு வெளியே, சேரிகளில் வாழ்ந்து வந்தார்கள்.  காலங்காலமாக, அவர்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களாகவும்,  மேல் ஜாதிக்காரர்களிடம் அடிமைகளாகவும் இருந்து வந்தனர். கருணாநிதி அடிக்கடி தன்னை ‘சூத்திரர்’ என்று தாழ்ந்த ஜாதியாக அடியாளம் காட்டி கொள்வதை, பஞ்சமர்கள் எதிர்க்கிறார்கள். அந்த காலங்களில், சூத்திரர்கள் என்ப்வர்களும் மேல் ஜாதியினரே என்கிறார்கள்.  இந்த விவாதத்தில் நான் இப்போது இறங்கவில்லை.  
பஞ்சமர்களுடைய நிலை பற்றி கவலை கொண்டு, 1891ம் ஆண்டில், செங்கல்பட்டில் ஆட்சியராக இருந்த டிரெமன்ஹரே என்கிற ஆங்கிலேயர்,  லண்டனிலுள்ள அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  இந்த கடிததின் அடிப்படையில்,  பிரிட்டிஷ் பாராளுமன்றம், 1892 ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது.
இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், Depressed Class  என்று கூறப்பட்ட தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்கு நிலங்களை இலவசமாக அளித்தது.  இந்த நிலங்களீல், தாழ்த்தப்பட்ட மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.  குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறர் பெயருக்கு மாற்ற முடியும்.  அதுவும், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்த (Depressed Class) வர்களிடம் தான் விற்க முடியும்.  வேறு வகுப்பினரிடம் விறறால், அநத விறபனை செல்லாது.
அரசு ரெவின்யூ ரிகார்டுகளில், இந்த நிலங்களைப்பற்றிய விவரங்கள் உள்ளன.
தவறுதலாக, யாராவது, இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்க முற்பட்டால், பத்திர பதிவு அதிகாரி, அதை பதிவு செய்யக்கூடாது. மீறி வாங்கினால்,  எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம்.  அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.
இந்த சட்டம், தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை பற்றிய ஒரு குறிப்பும், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில், விவரமாக இருக்கிறது.
1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வழியாக வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.  Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.
இந்திய அளவில், எவ்வளவு நிலங்கள், இந்த பஞ்சமி நிலங்களாக கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய சரியான் புள்ளி விவரங்கள் இல்லை.  திமிழ் நாட்டில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  ஆனால், நான் மேலே குறிப்பிட்ட சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பில், 12 லட்சம் ஏக்கர் அந்த கால சென்னை மாகாணத்தில் (கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா) பஞ்சமி நிலங்களை கொடுத்ததாக  குறிப்பிட்டுள்ளார்கள்.  இந்திய அளவில், சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  
காலப்போக்கில், பஞ்சமி நிலங்கள் பிற வகுப்பினருக்கு விற்கப்பட்டுள்ளன.  விற்கப்படாத நிலங்க்ளின் பெரும் பகுதி, மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  இது பற்றிய புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டு அளவில் இல்லை.   சென்ற வாரம், தமிழக அரசு, கவர்னர் உரையில், பஞ்சமி நிலங்களை பற்றி ஆய்வு செய்ய ஒரு கமிஷன் அமைக்கபபடப்போவதாக கூறப்பட்டுள்ளது.
பிரபல தலித் தலைவரும், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நிறுவனருமான (தற்போது அவர் இந்த இயக்கத்தில் இல்லை) திரு தடா பெரியசாமி அவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI Act), பெரம்பலூர் மாவட்ட புள்ளி விவரங்களை பெற்றுள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களில், 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன.  அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 பேர் பெயரில் உள்ளன.  இந்த நிலங்கள் தலித் மக்கள் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சத்விகிதம் நிலங்கள் மற்ற வகுப்பினரால் ஆக்கிரமிகப்பட்டு அனுபவிக்கப்படுகிறது என்று தடா பெரியசாமி கூறுகிறார்.  அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறாரல் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.
திரு கருப்பன் இ.ஆ.பெ (ஓய்வு) தலைமையில் ஒரு மண்ணுரிமை மீட்பு இயக்கத்தை துவங்கியுள்ளார்கள்.  இந்த ஒரு சிறிய மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு என்றால், தமிழ்நாடு முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பார்க்கலாம்.
மூச்சுக்கு முன்னூறு முறை தலித் மேம்பாடு பற்றி வாய் கிழிய பேசும் அரசியல் வாதிகள், ஏன் இதை கண்டு கொள்ளவில்லை.  தலித் மேம்பாட்டிற்காக தங்களை அர்பணித்துகொண்டு, ஏசி காரிலும், விமானத்திலும் பறந்து கொண்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி, தலித் மேம்பாட்டிற்காக பாடுபடும் தலித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அனைவரும் கண்காணிக்கிறார்கள்.  
தடா பெரியசாமியுடன் நான் எடுத்த பேட்டியை ‘கிளிக்’ செய்து கேட்கவும்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...